Published:Updated:

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

Published:Updated:
இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

ங்கள் குழந்தைகள் தங்களுடைய இரண்டாவது வயதில் அடியெடுத்துவைக்கப் போகிறார்களா? இனிமேல் அவர்களும் நம்மைப்போல் தனி மனிதர்கள். ‘வாட், தனி மனிதர்களா... சின்னக் குழந்தைங்க டாக்டர் அவங்க’ என்று நீங்கள் பதறுவது தெரிகிறது. உங்களுடைய இந்தப் பதற்றம்தான், இந்த இதழ் கட்டுரைக்கான கரு! குழந்தை தொடர்பான உங்கள் உணர்வுகளைப் பற்றி மட்டுமே யோசிக்கிற நீங்கள், இரண்டு வயதில் உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த வயதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளைவிட, உணர்வுகள் தொடர்பான பிரச்னைகளே அதிகம் ஏற்படும். அவை, நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ளாததால் வருபவை. அதனால், அவற்றைப் பற்றி மட்டும்தான் இந்த இதழில் பேசப்போகிறேன். 

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

உங்கள் இரண்டு வயது மகன்/மகளின் தேவைகள் என்னென்ன?

* நிறைய விளையாட வேண்டும், நிறைய நேரம் விளையாட வேண்டும், அதையும் விதவிதமாக விளையாட வேண்டும் அவர்களுக்கு. இதற்கு நீங்கள் அவர்களை அனுமதிக்கிறீர்களா அல்லது விளையாடியது போதும் என்று தூங்கவைக்க முயல்கிறீர்களா?

* அவர்களுக்கு, விளையாடுவதற்கு தன் வயதிலுள்ள பிள்ளைகள் வேண்டும். அதற்கு நீங்கள் சொந்தபந்தம், அக்கம் பக்கம் என எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும். பால்யகால சிநேகிதம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அந்த பால்யகால சிநேகிதம் என்பது இந்த இரண்டு வயதில் ஏற்படுவதுதான். மூன்று வயதுவரைக்கும், தான் ஆணா, பெண்ணா என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. நட்பு மட்டுமே அவர்களுடைய பிஞ்சு மனதில் பதியும். இதுதான் பால்ய சிநேகிதம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12



* புதிது புதிதான விளையாட்டுப் பொருள்கள் தேவைப்படுகிற வயது இது. இன்றைக்கு ஒரு பொம்மை பிடிக்கிறது என்றால், மறுநாள் வேறொரு பொம்மைதான் பிடிக்கும். நிறம், வடிவம் என்று ஏதாவது மாற்றம் வேண்டும் அவர்களுக்கு.

இந்த வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா?


தாராளமாக அனுப்பலாம். அனுப்ப வேண்டும். நிறைய பெற்றோர்களுக்கு இதில் குழப்பம் இருக்கிறது. அவர்கள், இரண்டு வயதுக் குழந்தையின் மனநிலையைப் பற்றி தெரிந்துகொண்டார்கள் என்றால், ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகளிடம் உணர்வுரீதியான பிணைப்பு அதிகமாக இருக்கும். அம்மாவிடம் அல்லது பாட்டியிடம் மட்டுமே இருந்து, பழகிவந்த குழந்தைகள், அம்மா வேலைக்குப் போய்விட்டாலோ அல்லது தன்னை வளர்த்த பாட்டி ஊருக்குப் போய்விட்டாலோ தவித்துப்போய்விடுவார்கள். அதை அவர்களுக்குச் சொல்லவும் தெரியாது. பழகிய மனிதர்கள் பக்கத்தில் இல்லையென்றால் மட்டுமல்ல, பழகிய பொருள்களில் மாற்றம் வந்தாலும் தவித்துப்போவார்கள். இதற்காகத்தான் ப்ளே ஸ்கூலில்விட வேண்டும் என்று சொல்கிறேன். அந்த இரண்டு மணி நேர இடமாற்றம், வீட்டிலிருந்து, வீட்டு மனிதர்களிடமிருந்து குழந்தைகளைக் கொஞ்ச நேரம் தள்ளிவைக்கும். இந்த மாற்றம் குழந்தைகளுக்கு அவசியத் தேவை.

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

‘நான் வேலைக்குப் போகலை; என் குழந்தையைப் பார்த்துக்க எங்கம்மாவும் இருக்காங்க. அப்புறம் நான் எதுக்கு என் பிள்ளையை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பணும்?’ என்கிற கேள்விக்கும் என்னிடம் பதில் இருக்கிறது. ஒரு குழந்தையானது தன்னுடைய இரண்டு வயதிலிருந்து சமூகத்துடன் கலந்து பழக வேண்டும். எந்நேரமும் பிள்ளையை கங்காருபோல மடியிலேயே கட்டிக்கொண்டிருந்தால், குழந்தை எப்படி சமூகத்துடன் கலந்து பழகும்? இந்த வயதில் குழந்தைகள் 20 வார்த்தைகள் பேச வேண்டும். இரண்டு வார்த்தைகளை இணைத்துக் கோவையாகப் பேச வேண்டும். உதாரணத்துக்கு, ‘தாத்தா குடு’, ‘அம்மா வா’, ‘அப்பா எங்கே’ என இரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகள் தாய்மொழியுடன், பிறமொழியையும் (ஆங்கிலம்போல) பேசுவார்கள். இப்படிப் பேசுவதில் வேகமாக இருக்கிற வயதில், அவர்கள் உலகத்தைப் பெரிதாக்குங்கள். முக்கியமாக வீட்டைத் தாண்டிய வெளியுலகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
 
சமூக மொழியைக் கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்!

இதுவரை வீட்டுக் கிளிக்குஞ்சாக இருந்த உங்கள் குழந்தைக்கு றெக்கை முளைத்துவிட்டது. குட்டி மேடம்/குட்டி சார் ப்ளே ஸ்கூலுக்கு எல்லாம் போகிறார்கள் இல்லையா? அவர்களுடைய மழலை மொழியும் சைகை மொழியும் வீட்டில் இருப்பவர்களுக்குப் புரியும். ‘தச்சி மம்மு’ என்று ஒரு குழந்தை கேட்டால், அது தயிர் சாதம் என்று அதன் அம்மாவுக்குப் புரியும். வீடு தாண்டி மற்றவர்களுக்கு..? அதனால் சமூக மொழியைக் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள். 

இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? - ஆனந்தம் விளையாடும் வீடு - 12

பிள்ளைகள் தங்களை யாரென்று தீர்மானிக்கிற வயது இது!

இரண்டு வயதில்தான் ஒரு குழந்தை தன்னை யார் என்று தீர்மானம் செய்யும். அதாவது வருங்காலத்தில் தான் எப்படிப்பட்ட இயல்பில் இருக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யும். துறுதுறுப்பு, அமைதி, மனதுக்குள் பேசிக்கொள்கிற இயல்பு, வெளிப்படையாகப் பேசுகிற இயல்பு, சுறுசுறுப்பு, நிதானம் என தங்களுடைய எதிர்கால இயல்பை அவர்கள் தீர்மானிப்பதைக் கொஞ்சம் உற்று கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம்.

தனியாகத் தூங்கட்டும்!

பக்கத்தில் படுக்கவைத்துத் தூங்கவைக்கலாமா? வேண்டாம். ஒரே அறையில் தனிப்படுக்கையில் தூங்க வையுங்கள். அப்போதுதான் தன்னம்பிக்கை வரும்.

பெயர் முக்கியம்!

செல்லப் பெயர்வைத்துக் கூப்பிடுவது `ஓகே’தான். ஆனால், குழந்தை தன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதனால், பெயர் சொல்லிக் கூப்பிடுங்கள்.

எவ்வளவு எடை இருக்க வேண்டும்..?

இரண்டு வயதில் குழந்தையின் எடை 9-ல் இருந்து 11 கிலோவரை இருக்க வேண்டும். உயரம் 80-85 செ.மீவரை இருக்க வேண்டும். கிடைக்கிற ஊட்டச்சத்து, பெற்றோரின் உயரத்தைப் பொறுத்து இவை கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

இரண்டு வயதில் என்னென்ன சொல்லித் தரலாம்?

மிருகங்கள், பறவைகள், வடிவங்கள், நிறங்கள் ஆகியவற்றை மட்டும் சொல்லிக் கொடுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

வளர்த்தெடுப்போம்...)

- ஆ.சாந்தி கணேஷ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism