ஒரு மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவு. படுக்கைகளில் நோயும் சோர்வுமாகக் கிடக்கிறார்கள். அப்போது அங்கே கோமாளி வேடத்தில்வந்த பிஃப் ஃபெர்னாண்டஸ், நகைச்சுவை அசைவுகள், பேச்சுகள், கேலிகள் எனச் சுழன்று இயங்க, அந்த இடத்தில் கேட்டுக்கொண்டிருந்த முனகல்கள் எல்லாம் சிரிப்புகளாக மடைமாறுகின்றன. அத்தனை நோயாளிகளின் முகங்களிலும் மகிழ்ச்சி!

‘`அதுதான் எங்களுக்கு வேண்டும்’’ என்று கைகொடுக்கிறார் பிஃப் ஃபெர்னாண்டஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கனடா நாட்டில் பிறந்து வளர்ந்த பெண். புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில் நகரில் இப்போது வசிக்கிறார். மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் உள்நோயாளிகளுக்கு ‘மெடிக்கல் க்ளவுன்’ (Medical Clown) என்ற நகைச்சுவை சிகிச்சை அளித்து, கவனத்தை ஈர்த்துவருகிறார்.

‘`கனடாவில் நாடகங்களில் நடித்து வந்தேன். சக நாடகக் கலைஞரான ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹேமிஷை காதல் திருமணம் செய்துகொண்டேன். நானும் கணவரும் இணைந்து ‘மெடிக்கல் க்ளவுன்ஸ்’ சேவை செய்துவந்தோம். என் உறவினர் ஒருவர் சென்னையில் மகளிர் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணிபுரிந்து வந்தார். அவரைச் சந்திக்க அவ்வப்போது சுற்றுலாப் பயணிகளாக இந்தியாவுக்கு வந்து செல்வோம். அப்போதுதான், இந்தியாவில் மெடிக்கல் க்ளவுன் கலைஞர்கள் இல்லாதது பற்றி அறிந்தோம். கணவருடன் கலந்தாலோசித்து ஆரோவில் நகரில் நிரந்தரமாகக் குடியேறினோம். புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள சில மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சந்தித்து அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும் மகத்தான பணியில் நானும் என் கணவரும் எங்கள் வாழ்வை அர்ப்பணித்து வருகிறோம்’’ என்கிறவர், மெடிக்கல் க்ளவுன் சிகிச்சையின் மகத்துவத்தை மருத்துவர்கள் அறிந்து ஊக்குவிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார், `MeDi Clown Academy’யைத் தொடங்கி பயிற்சி அளித்து பல மெடிக்கல் க்ளவுன்களை உருவாக்கியுள்ளார். கல்லூரிகளில் இதற்கான இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடங்கவும் திட்ட மிட்டிருக்கிறார்.

புன்னகைப் பரிசுகள் தொடரட்டும்!

- ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்