கர்ப்பகாலத்தில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அவற்றில் ஒன்று, கைகால் மற்றும் உடலில் ஏற்படும் வீக்கம். இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், இதைத் தவிர்ப்பதற்கும் குறைப்பதற்குமான ஆலோசனைகளைச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்ரியா.

“கர்ப்பகாலத்தின் ஐந்தாவது மாதத்திலிருந்து சில பெண்களுக்கு கைகள், முகம், பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கம் ஏற்படலாம். இது இயல்பான ஒன்றே. இதனால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்று கர்ப்பிணிகள் வீண் பயம்கொள்ளத் தேவையில்லை. சீரான நடைப்பயிற்சி மற்றும் சரிவிகித உணவுகளின் மூலமே இதைச் சரிசெய்துவிட முடியும். கர்ப்பிணிகளின் உடலின் தன்மையைப் பொறுத்து வீக்கத்துக்கான காரணங்களும் தீர்வுகளும் வேறுபடும்.

கர்ப்பகால வீக்கத்துக்கான காரணங்கள்

* பொதுவாக கர்ப்பகாலத்தில் உடலின் ரத்த ஓட்டத்தின் அளவும் நீர்ச்சத்தின் அளவும் வழக்கத்தைவிட 50 சதவிகிதம் அதிகமாக இருக்கும். இது உடல் உறுப்புகள் வீக்கமடைவதற்குக் காரணமாக அமையலாம்.

* கர்ப்பப்பையில் உள்ள குழந்தையின் எடை அதிகரிக்கும்போது கர்ப்பப்பை விரிவடையும். அதனால் கர்ப்பப்பையின் அருகில் உள்ள ரத்தக்குழாய்கள் அழுத்தத்துக்கு உள்ளாகி, ரத்த ஓட்டம் சீரின்றி இருக்கும். ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்போது சருமத்தின் அடியில் நீர் கோத்துக்கொண்டு வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம்.

* அதிகப்படியான ரத்த அழுத்தத்தின் காரணமாகவும் வீக்கம் ஏற்படலாம்.

* கர்ப்பிணிகளின் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்புச் சத்தும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

* அதிக நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பது, கைகால்களை அசைக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களாலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

* பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடுகளும் வீக்கத்துக்குக் காரணமாகின்றன.

தீர்வுகள்

* மருத்துவரின் ஆலோசனைப்படி எளிமையான உடற்பயிற்சி, யோகா பயிற்சிகள் செய்யலாம்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடங்களுக்கு மெதுவான நடைப்பயிற்சி அவசியம்.

* இறுக்கமான ஆடைகள் மற்றும் காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.

* உடலைவிடக் கால்களைச் சற்று உயர்த்தி வைத்துக்கொண்டால் ரத்த ஓட்டச் சீரின்மையால் கால்களில் ஏற்படும் வீக்கம் குறையும்.

* தொடர் வீக்கம் இருந்தால், மருத்துவ ஆலோசனையின் பேரில் உடலின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைப்பிடிக்கவேண்டிய உணவு முறைகள்

* புரதச்சத்து நிறைந்த மீன், முட்டை, நட்ஸ், பயறு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* உப்பு அதிகம் சேர்த்துப் பதப்படுத்தப்பட்ட உணவுகளான கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், ஊறுகாய், வற்றல் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

* பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், கீரைகள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

* பால், தண்ணீர், ஜூஸ், இளநீர் ஆகியவற்றை அடிக்கடி பருக வேண்டும். சீரான இடைவேளையில் சிறுநீர் வெளியேற்றமும் அவசியம்.

* இதயக் கோளாறு, சிறுநீரகப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தின் தொடக்கத்திலிருந்தே மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.’’

சு.சூர்யா கோமதி