திருமணத்துக்கு நாள் குறித்ததுமே மணமக்கள் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தயாராகிவிடுவார்கள். குறிப்பாகப் பெண்கள்... மூன்று மாதங்களுக்கு முன்பே பிளீச்சிங், பேஷியல், வேக்சிங், திரெட்டிங் என கவனம் செலுத்துவார்கள். பல் பாதுகாப்பு, முக அழகு என அந்தப்பட்டியல் நீளும். இதில் மிக முக்கியமானது, மரு நீக்கத்துக்கான சிகிச்சை. சிலர் விளையாட்டாக சுயவைத்தியம் செய்து மருவை நீக்க முயற்சி செய்வார்கள். மரு நீக்கத்துக்கு முறையான சிகிச்சைகள் உண்டு. இருக்கும் மருக்களை நீக்குவதோடு மீண்டும் மருக்கள் வராமலிருக்க சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

`மணப்பெண்கள் மட்டுமல்ல, மரு வந்தால் யாரும் பயப்பட வேண்டியதில்லை. மரு என்பது, மேல் நோக்கிய சரும வளர்ச்சி, அவ்வளவுதான். முறையாகச் சிகிச்சை மேற்கொண்டால், ஓரிரு நாள்களில் அவற்றை முழுமையாக நீக்கலாம்’ என்று நம்பிக்கையூட்டுகிறார் சரும மருத்துவர் பிரியா.

“திருமணத்துக்குத் தயாராகும் பலருக்கு, கடைசி நாள்களில்தான் தங்கள் உடலில் மரு உண்டாகியிருப்பது தெரியவரும். மரு என்பது உறுதியானதும், வீட்டு மருத்துவம் அல்லது சுய மருத்துவத்தில் இறங்குவார்கள். அதனால் பிரச்னை அதிகரிக்கும் வாய்ப்புகளே அதிகம். அதனால், மருக்கள் பற்றியும், அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன, அதற்கான கிளினிக்கல் ட்ரீட்மென்ட் என்ன, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால் என்னென்ன பிரச்னை உண்டாகும் என்பது பற்றியும் மணமக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

மருக்களின் வகைகள்

சருமத்தில் ஒரு பகுதி அளவுக்கு மீறி மேல்நோக்கி வளர்வதால் ஏற்படும் மருக்கள் (Skin Tags). இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, மூன்று வகையான பாதிப்புகள் ஏற்படலாம். அவை...

மரு சருமத்தை ஒட்டியபடி மெல்லியதாக இருக்கும். தட்டையாக, அளவில் மிகச்சிறியதாக சிறு புள்ளி போல இருந்தால், அது, `டெர்மடோசிஸ் பாபுலோசா நிக்ரா’ (Dermatosis Papulosa Nigra) எனப்படும்.

சருமத்தின் நிறத்திலேயே அளவில் பெரிதாக மேல்நோக்கி வளரும் மரு `ஆக்ரோகார்ட்டன்’ (Acrochordon) எனப்படுகிறது.

அளவில் மிகப்பெரியதாக கருமையாக இருப்பது, `ஸ்டெக்கோ கெரட்டோசிஸ்’ (Stucco keratosis) எனப்படுகிறது.

கிளினிக்கல் டிரீட்மெண்ட்

சில நேரங்களில் பெரிய மருக்களில் தொற்று ஏற்பட்டுவிட்டால், அப்பகுதியில் வலியும் வீக்கமும் ஏற்படலாம். அந்தப் பகுதி முழுக்க புண்ணாகி, சுற்றிலும் தொற்று பாதிக்கவும் கூடும். சில நேரம் வலியும் ஏற்படலாம். பொதுவாக, சுயமாக மருவை நீக்க முயன்றால் இதுபோன்ற பாதிப்புகள் உருவாகும். முறையாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.

மருவின் அளவைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். மருவை நீக்க `லேசர் சிகிச்சை’ (Laser Therapy), `ரேடியோ ப்ரீக்வன்சி அப்லேஷன்’ (Radio Frequency ablation) எனப்படும் அறுவை சிகிச்சை முறைகள் பின்பற்றப்படுகின்றன. `காடெரி’ (Cautery) என்ற சிகிச்சையும் உள்ளது.

வெப்பம் செலுத்தப்பட்டு, மருக்கள் நீக்கப்படும் சிகிச்சை முறை மூலம் ரத்தக் கசிவைத் தவிர்க்கலாம். இதனால் தொற்று எதுவும் ஏற்படாது. சருமப் பகுதி மெள்ள மெள்ள சுருக்கம் பெற்று, ஓரிரு நாள்களில் இயல்புநிலைக்கு வந்துவிடும். சிகிச்சைக்கு முன்பு, மரு உள்ள பகுதியில், `டாபிக்கல் அனஸ்தீசியா’ எனப்படும் மருந்து தடவப்படும். அந்த இடத்தில் சருமம் மரத்துப்போனதும் சிகிச்சை அளிக்கப்படும். மரு பெரிதாக இருந்தால், `லோக்கல் அனஸ்தீசியா’ அளிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். சில நேரங்களில், மருவுக்கு வரும் ரத்த ஓட்டத்தை நிறுத்தி மருவைச் செயலிழக்கச் செய்து விழவைக்கப்படும். சிலர் சுயமாக அமிலங்களைப் பயன்படுத்தி மருவை நீக்க முயன்றால், அப்பகுதி முழுவதும் வலி ஏற்பட்டு, வடு உருவாகியே மரு உதிரும் சூழல் ஏற்படும். ஆகவே, அத்தகைய வழிமுறைகளைத் தவிர்ப்பது நல்லது.

மீண்டும் மரு வராமலிருக்க...

இளம் வயதிலேயே மரு உண்டாக, மரபு காரணமாக இருக்கலாம். எடை அதிகரிப்பது, நீரிழிவு பாதிப்பு போன்றவற்றாலும் மரு உண்டாவதற்கான சூழல் உருவாகும். இவற்றில், மரபு வழியாக ஏற்படும் பிரச்னையைத் தடுக்க முடியாது. மற்ற காரணங்களால் மரு உருவாவதை எளிதாகத் தவிர்க்கலாம். குறிப்பாக எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

மருக்கள், புற அழகைக் கெடுக்கும் ஒரு சாதாரணப் பிரச்னைதான். எனவே, அடிக்கடி மருவைத் தொடுவது, அவற்றை நீக்க முயல்வது போன்றவை தொற்றுப் பிரச்னையை உருவாக்கி மருவைப் பரவ செய்துவிடும்.

இளம் வயதினருக்கு முகம், கழுத்து, அக்குள், மார்பின் அடிப்பகுதி, தொடைப்பகுதியில்தான் மரு அதிகம் வரும். அதாவது, சருமம் உரசிக்கொள்ளும் பகுதிகள். இறுக்கமான உடைகள் அணிபவர்களுக்கு, இந்தப் பிரச்னை அதிகரிக்கும். உடலுக்குப் பொருத்தமான, இறுக்கமில்லாத உடைகள் அணிந்தால் மரு நீங்கும். அது தொற்றாக மாறி மற்ற இடங்களுக்குப் பரவாமலும் தவிர்க்கலாம். உடைகளில் கவனம் செலுத்துவதுபோல உள்ளாடைத் தேர்விலும் கவனம் அவசியம்” என்கிறார் பிரியா.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

`சருமத்தில் தேவையில்லாத மாசு அல்லது கொழுப்புச் சத்து சேர்வது, அடிக்கடி செரிமானப் பிரச்னைகள் அல்லது மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவையே மரு உண்டாகக் காரணம் என்கிறது ஆயுர்வேதம். அதனால், வெளிப்புறமாக மட்டுமன்றி, உள்ளுறுப்புகளுக்கும் சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“மரு வந்ததும், அலட்சியப்படுத்தாமல் உடனே சிகிச்சை எடுக்க வேண்டும். பசியை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த சூரணம் சாப்பிடுவது நல்லது. இதேபோல மலச்சிக்கலை நீக்குவதற்கான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம். நாட்டு மருத்துவத்தில், மருவைப் பொசுக்குவதற்கென சில வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக... ஊதுவத்தி வைத்துச் சுடுவது, நூலைக் கொண்டு கட்டுவது போன்றவை. ஆனால், இவை பாதுகாப்பான முறைகள் இல்லை. இப்படிச் செய்வதால், சுற்றியுள்ள சருமத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மருவை நீக்கிய பிறகும் சருமத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை நீக்க, குடல் பகுதியைப் பராமரிக்க வேண்டியதும் அவசியம்” என்கிறார் பாலமுருகன்.

ஜெ.நிவேதா