கர்ப்பகாலத்துக்கான ஆடைத்தேர்வு பெரும்பாலும் பெண் களுக்குச் சவாலான விஷயமாகவே இருக்கும். இந்த மாதங்களில் உடலுக்குப் பாந்தமான மெட்டீரியல்கள், டிசைன்கள் என்னென்ன, ஒவ்வொரு லுக்குக்கும் எப்படி ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது என்பது தொடர்பான தகவல்களைத் தருகிறார், சென்னையைச் சேர்ந்த ஆடை வடிவமைப் பாளர் பிரியா ரீகன்.

சம்மர் லுக்

இக்கட், காட்டன், சாஃப்ட் சில்க் போன்ற மெட்டீரியல்கள் கோடைக்காலத்தில் கர்ப்பிணிகளுக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கும். கோடைக்காலத்துக்கு வசதியான ஜம்ப் சூட், ஷார்ட் கவுன், ஸ்கர்ட் அண்டு ஃப்ரீ டாப் என ஆடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம்.

ஜம்ப் சூட்டுக்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் ஓவர் கோட் அணிந்தால் நியூ லுக் கிடைக்கும். ஷார்ட் கவுனில் லேயர்கள்வைத்து வடிவமைத்துக் கொள்ள, ட்ரெண்டியாக இருக்கும். ஸ்கர்ட்டுக்கு கான்ட்ராஸ்டான நிறத்தில் காட்டன் குர்தி அணிந்து கொள்ளலாம்.

ஒல்லியான உடல்வாகுகொண்ட பெண்கள் ஜம்ப் சூட்டும், பருமனான உடல்வாகுகொண்ட பெண்கள் ஸ்கர்ட்டும் தேர்வு செய்வது பொருத்தமாக இருக்கும்.

சல்வார் அணியும் பழக்கம்கொண்ட கர்ப்பிணிகள் ஷார்ட் டாப்ஸ், பட்டியாலா பேன்ட் என மிக்ஸ் மேட்ச் செய்து கொள்ளலாம்.

புடவையைப் பொறுத்தவரை ஜூட் சில்க், கைத்தறிப் புடவை போன்றவற்றைத் தேர்வுசெய்து பெல் அல்லது ரஃபிள் ஸ்லீவ் என பிளவுஸ்களை வடிவமைக்க, அசத்தலாக இருக்கும்.

கேஷுவல் லுக்

ஷிஃபான், ஜார்ஜெட், மல்மல் காட்டன் போன்ற மெட்டீரியலில் டாப்ஸ் அண்டு ஸ்கர்ட், பலாஸோ, ஓவர் லேயுடன் கூடிய ஷார்ட் கவுன் போன்றவற்றை அணிந்தால் கேஷுவல் லுக்கில் கெத்து காட்டலாம்.

பலாஸோ எனில், மல்மல் காட்டன் மெட்டீரியலில் லாங் டாப் வடிவமைத்து, கான்ட்ராஸ்ட் நிறத்தில் காட்டன் பலாஸோவை மிக்ஸ் மேட்ச் செய்யலாம்.

ஷார்ட் கவுனுக்கு பிரின்ட்டட் மெட்டீரியலில் ஓவர் லே வடிவமைத்து மிக்ஸ் மேட்ச் செய்யலாம். அல்லது கவுன் மெட்டீரியலிலேயே ஓவர் லேவையும் வடிவமைக்கலாம்.

ஸ்கர்ட் எனில் மல்மல் காட்டனில் டாப்ஸும் ஜார்ஜெட் மெட்டீரியலில் ஸ்கர்ட்டும் வடிவமைத்தால் யுனீக்காக இருக்கும். ட்ரெண்டி லுக்குக்கு ஃபெதர் ஸ்லீவ் டாப்ஸ்களைத் தேர்வு செய்யலாம்.

வெஸ்டர்ன் லுக்

கர்ப்பகாலத்தில் பார்ட்டி போன்ற இடங்களுக்குச் செல்லும்போது டிசைனர் சாரீஸ்தான் பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக இருக்கும். அதைக் கடந்து எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த லாங் கவுன், சிம்பிளான சராரா போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

யோக் பகுதியில் மட்டும் ஹேண்ட் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகள் கூடுதல் அழகில் காட்டும்.

ஃப்ளோயி கவுனுக்கு நெட் மெட்டீரியல் தவிர்த்து ஜார்ஜெட் மெட்டீரியலைத் தேர்வு செய்யலாம். புரொகேட் மெட்டீரியலில் வடிவமைக்கப்படும் மேக்ஸி ஆடைகளும் தனித்துவமாகக் காட்டும்.

கூடுமானவரை ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

கிராண்ட் லுக்

கர்ப்பகால போட்டோ ஷூட், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வெல்வெட், சில்க் போன்ற மெட்டீரியல்களில் கிராண்ட் கவுன், லெஹெங்கா போன்றவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம்.

கர்ப்பகாலத்தைக் குறிக்கும் வகையில் ஆடையில் ஏதேனும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்து கொண்டால் தனித்துவமாகவும், என்றும் நினைவில் நிற்கும் பொக்கிஷமாகவும் இருக்கும்.

கான்செப்ட் போட்டோ ஷூட் செய்பவர்கள், தேர்ந்தெடுக்கும் கான்செப்ட் மற்றும் ஷூட் எடுக்கப்போகும் இடத்தைப் பொறுத்து பிரீஸ் (breeze) டிரஸ், மேட்சிங் டிரஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.

சிம்பிள் லுக்

சிம்பிள் லுக் விரும்புபவர்கள் பிளெய்ன் மெட்டீரியலில் ஹேண்ட் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஆடைகளைத் தேர்வு செய்யலாம். காட்டன் மெட்டீரியலில் வடிவமைக்கப்படும் ஷார்ட் டிரஸ்கள் நல்ல சாய்ஸ்.

மேலும்...

*கர்ப்பகாலத்தில் கூடுமானவரை லெகிங்ஸ் அணிவதைக் தவிர்ப்பது நல்லது.

* உள்ளாடை அளவைவிட ஆடையின் அளவு இரண்டு இன்ச் அதிகமாக இருக்க வேண்டும்.

* மிரர், ஜர்தோஸி போன்ற அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளைத் தவிர்க்கலாம்.

* கர்ப்பகாலத்தில் டிசைனர்களிடம் ஆடைகளை வடிவமைத்து வாங்கும்போது, ஃபீடிங்குக்கு வசதியாக ஜிப் வைத்து தைத்து வாங்கிக்கொண்டால் பிரசவத்துக்குப் பின்னர் பாலூட்ட வசதியாக இருக்கும்.

-சு.சூர்யா கோமதி