ஒல்லியாக இருக்கும் யாருடனும் உங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

உங்களுடைய நேற்றைய தோற்றத்துடன் இன்றைய தோற்றத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுதான் சரியான ஒப்பீடு!

எடை குறைப்பு முயற்சியில் நீங்கள்தான் உங்களுக்குப் போட்டியாளர். இதை ஒவ்வொரு நாளும் நினைவில்கொள்ளுங்கள்.

பெரும்பான்மையான பெண்களின் வில்லனாக உருவெடுத்துவரும் ஒரு பிரச்னையைப் பற்றி இந்த இதழில் அலசப்போகிறோம். எடையைக் குறைக்க நினைக்கும் பெண்களுக்கும் அதுவே வில்லனாக நிற்பதுதான் பெரும்சோகம்.

அந்த வில்லனின் பெயர் ‘பிசிஓஎஸ்’ அதாவது பாலி சிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்.

இன்றைய தலைமுறை பெண்களைப் பீடித்திருக்கும் பயங்கரம் இது. இனப்பெருக்க ஹார்மோன்களில் ஏற்படுகிற சமநிலையின்மையே இதற்குக் காரணம். திருமணமாகி, குழந்தை பெறத் தயாராகிற வரை இப்படியொரு பிரச்னை இருப்பதையே கண்டுகொள்ளாமல் வாழ்கிற பெண்கள் இருக்கிறார்கள். குழந்தையின்மைக்காக மருத்துவரைப் பார்க்கப்போகும்போதுதான் பலருக்கும் இது தெரியவருகிறது. குழந்தையின்மைக்கான காரணங்களில் இதுவே பெரிதும் பிரதானமுமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்தப் பிரச்னை பற்றிய விழிப்புணர்வில்லை.

பிசிஓஎஸ் என்ன செய்யும்?

ஆரோக்கியமான மாதவிலக்கு சுழற்சியில் சினைப்பை மாதம் ஒரு கருமுட்டையை வெளியேற்றும். பிசிஓஎஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு முட்டை உருவாவதில் அல்லது வெளியேறுவதில் சிக்கல் இருக்கும். தவிர, மாதவிலக்கு தள்ளிப்போகும். முறையற்ற சுழற்சி ஏற்படும். சினைப்பையில் சின்னச்சின்ன நீர்க்கட்டிகளையும் உருவாக்கும்.

அறிகுறிகள் எப்படியிருக்கும்?

* சிலருக்கு மாதவிடாயே வராமலிருக்கும். இன்னும் சிலருக்கு வருடத்துக்கு எட்டு முறைக்கும் குறைவாக மாதவிடாய் வரும். வேறு சிலருக்கு 21 நாள்களுக்கொரு முறையோ, அதைவிட சீக்கிரமோ மாதவிடாய் வரலாம்.

* 70 சதவிகிதப் பெண்களுக்கு முகம், தாடை மற்றும் மார்பகப் பகுதிகளில் ரோம வளர்ச்சி இருக்கும்.

* தலைமுடி மெலியும், அளவுக்கதிகமாக உதிரும்.

* முகம், மார்புப் பகுதி மற்றும் முதுகில் பருக்கள் வரும்.

* எடை அதிகரிக்கும். எடையைக் குறைப்பது சிரமமாகும்.

* கழுத்தைச் சுற்றியுள்ள பகுதி, மார்பகங்களின் அடிப்பகுதி மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சருமம் கருமையாக மாறும்.

* களைப்பு அதிகரிக்கும்.

* மனநிலை தாறுமாறாக மாறும்.

* தாம்பத்ய உறவில் நாட்டம் குறையும்.

என்னவெல்லாம் காரணங்கள்?

1. வாழ்வியல் தவறுகள்

வாயைக் கட்டுவதில் பிரச்னை உள்ளவரா நீங்கள்? மால்களில் உள்ள உணவகங்களில் மெகா சைஸ் பர்கர், கூடவே ஏரியேட்டடு குளிர்பானம் அல்லது எக்ஸ்ட்ரா பட்டர்ஸ்காட்ச் சேர்த்த டபுள் ஸ்கூப் சாக்லேட் ஐஸ்க்ரீம், ஹோட்டல்களுக்கு போனால் பட்டர் அல்லது நெய் மசால் தோசை அல்லது சர்க்கரைப் பொங்கல் என யோசிக்காமல் உள்ளே தள்ளுபவரா? ‘ஆமாம்’ என்பவர்கள் ஐயோ பாவம்!

ஒருநாளைக்கு ஒன்றுக்கு மேலான இனிப்பு சேர்த்த திரவங்கள் மற்றும் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு குறைவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய உணவுப்பழக்கம் பிசிஓஎஸ் பிரச்னைக்கும் காரணமாகிறது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்கிற சில தவறுகள் பிசிஓஎஸ் பாதிப்புக்கான அபாயங்களை அதிகரிக்கும். அவை...

* அளவுக்கதிகமாகச் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடுவது.

* தேவைக்கதிகமான கலோரிகளை உட்கொள்வது.

* அளவுக்கதிமாக உடற்பயிற்சி செய்வது அல்லது உடற்பயிற்சியே செய்யாமலிருப்பது.

* தீவிரமான ஸ்ட்ரெஸ்.

* நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை பாதிக்கும் ரசாயனங்களுக்கு உடலை உட்படுத்துவது (உதாரணத்துக்கு பிஸ்பெனால் ஏ, மெத்தைல் பாரபென், நிக்கோட்டின், சோடியம் ஃப்ளூரைடு) பிளாஸ்டிக் பயன்பாடு, மருந்துகள் மற்றும் உணவுகளில் காணப்படும் பூச்சிக்கொல்லிகளின் மூலம் இவை நம் உடலுக்குள் சேரும்.

* உடலில் கொழுப்பின் சதவிகிதம் அதிகரிப்பது.

* கலோரிகளைக் கட்டுப்படுத்தும் பழக்கத்தின் காரணமாக உடலின் கொழுப்பு அளவு மிகவும் குறைந்திருப்பது.

* அளவுக்கதிகமான கலோரிகளை உட்கொள்வதும், அவையும் கார்போஹைட்ரேட் உணவுகளின் மூலம் கிடைப்பவையாக இருப்பதும், உடலியக்கமே இல்லாமலிருப்பதும் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இன்சுலினின் செயல்பாட்டுத் திறனையும் பாதிக்கும். அதீத ஸ்ட்ரெஸ்சும், குறைந்த உடல் கொழுப்பும் கார்டிசால் அளவை அதிகரிக்கும். அதன் விளைவாக இன்சுலின் செயல்திறன் பாதிப்புக்குள்ளாகும்.

2. மரபியலின் பங்கு

உங்கள் அம்மாவுக்கோ, சகோதரிக்கோ பிசிஓஎஸ் பிரச்னை இருந்தால் உங்களுக்கும் அது வரும் வாய்ப்புகள் அதிகம். பிசிஓஎஸ் பாதித்த பெண்களின் குடும்பத்தில் அவர்களின் அம்மா அல்லது சகோதரிகளுக்கு அடிக்கடி மாதவிடாய் வருகிற ‘ஆலிகோமெனரியா’ என்கிற பிரச்னை இருக்கக்கூடும். தவிர பிசிஓஎஸ் பாதித்தவர்களின் நெருங்கிய உறவுக்கார பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகளும் அதிகம்.

கருவிலிருக்கும்போதே சில குழந்தைகளுக்கு பிசிஓஎஸ் பிரச்னை பாதிக்கக்கூடும் என்கிறது இன்னோர் ஆய்வு. தாயின் கருவறையில் போதிய ஊட்டம் கிடைக்காத சூழலில் கரு வளரும்போது, அங்கே மரபணுத் தகவமைப்பு நிகழும். குறை ஊட்டத்தின் காரணமாக குழந்தைக்கு பிசிஓஎஸ் அபாயமும் அதிகரிக்கும்.

3. அதிக அளவிலான இன்சுலின் மற்றும் ஆண்ட்ரோஜென்

பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்கு இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். அதிகரிக்கும் இன்சுலின் அளவினால் சினைப்பை தூண்டப்பட்டு டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். தவிர, டெஸ்டோஸ்டீரானுடன் இணைந்து செல்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் க்ளைகோபுரோட்டீன் என்கிற ஹார்மோனின் அளவு குறையும். டெஸ்டோஸ்டீரான் அதிகரிப்பால் முகம், தாடை என உடலெங்கும் ரோம வளர்ச்சி, மனநிலை மாற்றங்கள் உட்பட பிசிஓஎஸ் அறிகுறிகளும் அதிகரிக்கும். கருமுட்டை வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்படும்.

வேறு பிரச்னைகளுக்கும் காரணமாகுமா பிசிஓஎஸ்?

நீரிழிவு, ஹைப்பர் டென்ஷன், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மனஅழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், ஸ்லீப் ஆப்னியா எனப்படும் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் போன்ற பல பிரச்னைகளுக்கும் பிசிஓஎஸ் காரணமாகலாம்.

எப்படிக் கண்டறிவது?

* அறிகுறிகளைவைத்து நீங்களாகவே உங்களுக்கு பிசிஓஎஸ் இருப்பதாக முடிவு செய்துவிட முடியாது. மருத்துவர் உங்கள் எடை, பி.எம்.ஐ, இடுப்புச் சுற்றளவு போன்றவற்றைத் தெரிந்துகொள்வார். உடலில் ரோம வளர்ச்சி, பருக்கள், சரும நிற மாற்றம் போன்ற அறிகுறிகளையும் சோதிப்பார்.

* சினைப்பைகள் வீங்கியோ, விரிந்தோ இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பார்.

* அல்ட்ரா சவுண்டு சோதனையின் மூலம் சினைப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளனவா என்றும், கர்ப்பப்பையின் உட்புறத் திசுக்களின் தன்மையும் கண்டறியப்படும்.

* ரத்தப் பரிசோதனையின் மூலம் ஆண்ட்ரோஜென் அளவு, தைராய்டு, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தச் சர்க்கரையின் அளவுகள் கண்டறியப்படும்.

பிசிஓஎஸ்ஸை குணப்படுத்த முடியுமா?

நீரிழிவு, ரத்த அழுத்தம் போல இதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே தவிர, குணப்படுத்த முடியாது. பரிந்துரைக்கப்படுகிற சிகிச்சைகளும் அறிகுறிகளின் அவதிகளைச் சமாளிப்பதற்கானவையாகவே இருக்கும். ஆனால், பிசிஓஎஸ்ஸைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் ஒரு விஷயம் மேஜிக் போலப் பலனளிக்கும்.

அதுதான் எடை குறைப்பு!

உணவுப்பழக்கத்திலும் வாழ்வியல் மாற்றங் களிலும் சின்னச்சின்ன ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் இது சாத்தியம்.

அந்த மேஜிக் பற்றி அடுத்த இதழில்!

-ஆர்.வைதேகி