Published:Updated:

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

ஹெல்த்

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்லும்போது எடுத்துச்செல்லவேண்டியவை!

அடிப்படைத் தேவைகள்

ஃபி
ளாஸ்க், டபரா, டம்ளர், சாப்பிடும் தட்டு, ஹேண்ட் வாஷ், டூத் பேஸ்ட், பிரஷ், துண்டு, சலவை சோப்பு, பாத்திரம் கழுவ உதவும் லிக்விட், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை முதலில் எடுத்துவைத்துவிடுங்கள். குழந்தைக்கான பேபி சோப், ஆயில், ஷாம்பூ, டவல் அடங்கிய கிட் வாங்கிவையுங்கள்.

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காட்டன் துணிகள்

ருத்துவமனையில் குழந்தையும் தாயும் இருக்கவேண்டிய நாள்கள்வரை குழந்தையின் சிறுநீர் மற்றும் மலத்தைச் சுத்தம் செய்யத் தேவையான எண்ணிக்கையில் காட்டன் துணிகள் அவசியம் என்பது நினைவிலிருக்கட்டும். குழந்தையின் பச்சிளம் மேனி புறச்சூழலுக்குப் பழகும்வரை டயப்பர், ரப்பர் ஷீட்களையெல்லாம் தவிர்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

நாப்கின்

பெ
ரும்பாலான மருத்துவமனைகளில் பிரசவித்த பெண்களுக்கு அவர்களே சானிட்டரி நாப்கின்களைக் கொடுத்துவிடுவார்கள். அப்படி மருத்துவமனையில் வழங்க மாட்டார்கள் என்றால், மறக்காமல் பெல்ட்டடு சானிட்டரி நாப்கின்களை வாங்கி எடுத்துவைத்துக்கொள்ளவும்.

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

சோப்பு, சீப்பு, கண்ணாடி

பிர
சவத்துக்குப் பின்னர் டல் லுக்கிலேயே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களை நீங்கள் ஆர்வத்துடன் பராமரித்துக்கொள்வது, உங்களுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும். எனவே சோப்பு, சீப்பு, கண்ணாடி போன்றவற்றை மறக்காமல் எடுத்துவையுங்கள்!

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

குழந்தை ஆடை

பி
றந்த குழந்தைக்குக் கடையிலிருந்து வாங்கிய புது ஆடைகளை அப்படியே அணிவிக்காமல், அவற்றிலுள்ள கஞ்சி, சாயம், மொடமொடப்பு எல்லாம் போக ஒரு தடவை அலசி உலர்த்திய பிறகு பயன்படுத்துங்கள். 

பைகள் தனித்தனியாக...  

பொ
ருள்களை எடுத்துவைக்கும்போதே உங்களுக்குத் தேவையானவற்றை ஒரு தனிப் பையிலும், குழந்தைக்குத் தேவையான பொருள்களை ஒரு தனிப் பையிலும், பொதுவான சில பொருள்களை மற்றுமொரு பையிலுமாக பேக் செய்யுங்கள். அப்போதுதான் தேவைப்படுகிற பொருளைக் குழப்பமில்லாமல் உடனே எடுக்க முடியும்.

கர்ப்பிணிகளுக்கான செக்லிஸ்ட்

சாக்ஸ், மிட்டன்ஸ்

தா
யின் வயிற்றுக் கதகதப்பிலிருந்து வெளிவந்த குழந்தை புறச்சூழலின் குளிரைப் பழகும்வரை, அதன் பிஞ்சுக் கால்களுக்கு சாக்ஸும், கைகளுக்கு மிட்டன்ஸும் அணிவிக்கலாம். அதன் மூலமாக அந்தக் கதகதப்பை அதற்கு மீட்டுக் கொடுக்கலாம். மேலும், பிறந்த குழந்தை கைகால்களை அசைக்கும்போது அதன் நகங்களால் உடலைக் காயப்படுத்திக்கொள்ளும் என்பதால், அதைத் தவிர்க்கவும் இது பயன்படும். மறக்காமல் வாங்கிவிடுங்கள்.

பிடித்தவை

ந்தெந்த விஷயங்கள் உங்கள் மனதை இதமாக்குமோ, அமைதிப்படுத்துமோ, தைரியத்தை அளிக்குமோ அவற்றையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த பாடல்கள் அடங்கிய பென்-டிரைவ், ஸ்லோகப் புத்தகம், உங்களது இஷ்ட தெய்வத்தின் புகைப்படம், பாசிட்டிவ் உணர்வு தரும் புத்தகங்கள், புகைப்படங்கள் என்று அவை எதுவாகவும் இருக்கலாம்.

நர்ஸிங் பிரா

தா
ய்மார்கள் பாலூட்டுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நர்ஸிங் பிராக்களை வாங்கிவையுங்கள்.

நைட்டி

சூ
ழலின் தேவைக்கு ஏற்ப, பிரசவம் முடிந்த பிறகு அணிவதற்கான பிரத்யேக ஃப்ரன்ட் ஓபன் நைட்டி, பால் புகட்டுவதற்கு ஏதுவான ஃபீடிங் நைட்டி என காட்டன் நைட்டிகளைத் தேவையான எண்ணிகையில் எடுத்துவையுங்கள்.

சு.கவிதா