Published:Updated:

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்
பிரீமியம் ஸ்டோரி
மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

மகளிர் மட்டும்

Published:Updated:
மகளிர் மட்டும்
பிரீமியம் ஸ்டோரி
மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்

டிலேய்டு பியூபெர்ட்டி பரிசோதனை

பெ
ண் குழந்தைகள் 15 வயதுவரை பூப்படையவில்லையென்றால், தாமதிக்காமல் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். செகண்டரி செக்ஸுவல் கேரக்டர்ஸ் அந்தக் குழந்தைக்கு ஆரம்பமாகியும் பூப்படையவில்லையா அல்லது அவை இன்னும் ஆரம்பமாகாமலேயே இருக்கின்றனவா என்பதை மருத்துவர் கண்டறிந்து சிகிச்சையளிப்பார்.

மகளிர் மட்டும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்பகப் பரிசோதனை

மா
ர்பகப் புற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள, 30 வயதைக் கடந்த பெண்கள் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனை இது. அரசு மருத்துவமனைகளில் மார்பக சுயபரிசோதனை செய்யக் கற்றுக்கொடுப்பார்கள். மார்பகத்தில் ஏதேனும் அசௌகர்யத்தை உணர்பவர்கள், மருத்துவ ஆலோசனையுடன் மேமோகிராம் செய்துகொள்ள வேண்டும்.

மகளிர் மட்டும்

கொழுப்புப் பரிசோதனை

30
வயதைக் கடந்த பெண்கள் அனைவரும், ரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதிக்கவேண்டியது அவசியம்.

மகளிர் மட்டும்

உடல் எடை பரிசோதனை

கு
ழந்தைகளுக்கு 10 வயதுவரை அந்தந்த வயதுக்கான உயரமும், உயரத்துக்கான எடையும் இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

மகளிர் மட்டும்

தைராய்டு பரிசோதனை

பொ
துவாக 28 - 35 நாள்கள் இடைவேளையில் மாதவிடாய் ஏற்படுவது இயல்பானது. இந்த சுழற்சி சீராக நடைபெறாத 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, தைராய்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

மகளிர் மட்டும்

சிறுநீரகப் பரிசோதனை

30
வயதைக் கடந்த பெண்கள் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருக்கிறார்களா என்று பிஎம்ஐ (BMI - Body Mass Index) கால்குலேட்டர் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், இவர்கள் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள சிறுநீரகப் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டும்.

மகளிர் மட்டும்

கர்ப்பப்பைவாய் பரிசோதனை

30
வயதைக் கடந்த பெண்கள், கர்ப்பப்பைவாய் புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். VIA மற்றும் VILI வகை பரிசோதனைகள், இந்தப் புற்றுநோயைக் கண்டறிவதில் குறிப்பிடத்தக்கவை.

மகளிர் மட்டும்

ஈசிஜி பரிசோதனை

பொ
துவாக உயர் ரத்த அழுத்தம், இதயநோய் மரபு உள்ள பெண்கள் படபடப்பு, நெஞ்சுவலி ஆகியவற்றை உணர்ந்தால், தாமதிக்காமல் ஈசிஜி பரிசோதனை செய்துகொள்வார்கள். ஆயினும் இன்றைய சூழலில், 30 வயதைக் கடந்தாலே பெண்கள் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

மகளிர் மட்டும்

உயர் ரத்த அழுத்த பரிசோதனை 

மகளிர் மட்டும்

முன்பெல்லாம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் இப்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்தப் பரிசோதனையை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது அவசிம். 

தொகுப்பு: வெ.வித்யா காயத்ரி