“நான் கேன்சரோடு போராடலை. எதிர்த்து நின்னு அதைத் துரத்தி அடிச்சிருக்கேன்.’’ வார்த்தைகளில் துணிச்சலை விதைத்துப் பேசுகிறார் நீர்ஜா மாலிக். 68 வயதாகும் நீர்ஜா, இரு முறை மார்பகப் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டெழுந்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் வழங்கி, அவர்களை மரண பயத்திலிருந்து மீட்டு, மறு வாழ்க்கைக்கான நம்பிக்கையைக் கொடுக்கும் பாசிட்டிவ் மனுஷி. இதுவரை 10 லட்சம் புற்றுநோயாளிகளுக்கு கவுன்சலிங் வழங்கியிருக்கும் நீர்ஜா, தன் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

“நான் பிறந்தது ஜம்மு - காஷ்மீரில். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் சென்னையில் செட்டிலாகிட்டேன். நான் முதல்முறை கருவுற்றப்ப கருச்சிதைவு ஏற்பட்டுடுச்சு. மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். ஆனா, அடுத்தடுத்து எட்டு முறை எனக்குத் தொடர்ந்து கருச்சிதைவு ஏற்பட்டப்போ, ரொம்ப உடைஞ்சுபோயிட்டேன். ஒருமுறை, எட்டாவது மாசத்தில் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து போயிடுச்சுனு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தாங்க. இந்தச் சூழல்களில் எல்லாம் மனரீதியாக ஒரு பெண் எந்தளவுக்குப் பாதிக்கப்படுவானு வார்த்தையால் சொல்ல முடியாது. அவ்வளவு வலி, வேதனையிலும் என்னால் அம்மாவாக முடியும்ங்கிற தைரியம் என்னைவிட்டுப் போகலை. என்னோட நம்பிக்கைக்குப் பரிசாக, பதினோராவது முறை நான் கருத்தரிச்சப்ப பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமா இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயானேன். எட்டாவது மாசத்தில் குறைப்பிரசவத்தில் என் குழந்தைகள் பிறந்ததால, கூடுதல் கவனம் கொடுத்துப் பார்த்துக்கிட்டேன். இப்போ என் பிள்ளைகளுக்கு 29 வயசாகுது’’ என்று சொல்லும்போது நீர்ஜாவுக்குத் தாய்மையின் பூரிப்பு.

“இரட்டைக் குழந்தைகளை வளர்க்கறதுங்கிறது சவாலான பேரன்ட்டிங். இரவு, பகல் தூக்கமே இருக்காது. ஆனா, அதையெல்லாம் நான் வரமாகத்தான் பார்த்தேன். என் குழந்தைகள் பிறந்த ஐந்தாண்டுகளில் எனக்கு கர்ப்பப்பை பிரச்னை ஏற்பட்டுச்சு. அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை நீக்க வேண்டியதாகிடுச்சு. அந்த பாதிப்பிலிருந்து உடம்பு மீண்டு வருவதற்குள் மார்பகப் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானேன்” என்றவர், சில நிமிடங்கள் அமைதியாகித் தொடர்கிறார்.

“எல்லா அம்மாக்களையும்போல தன் குழந்தைகளைப் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கிற பாக்கியத்தை, கடவுள் எனக்குக் கொடுக்கலை. என் பிள்ளைகளுக்கு ஏழு வயசானப்ப, எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுச்சு. இடதுபக்க மார்பில் சின்ன கட்டி இருந்துச்சு. மார்பு வலிக்கிற மாதிரி இருக்குனுதான் டாக்டர்கிட்ட போனேன். எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்துப் பார்த்துட்டு புற்றுநோய்க் கட்டி இருக்குனு சொல்லிட்டாங்க. அதைக் கேட்ட அந்த நிமிஷம் வாழ்க்கையே முடிஞ்சுபோன மாதிரி இருந்துச்சு. நாலு நாள் யார்கிட்டேயும் பேசாம அழுதுட்டேயிருந்தேன். புற்றுநோய் பாதிப்பு என்பதைத் தாண்டி என் குழந்தைகளை யார் பார்த்துப்பாங்கங்கிற கவலைதான் மனசுக்குள்ள அதிகமாக இருந்துச்சு.

அழுது அழுது கரைஞ்சுபோன மனசில் திடீர்னு ஓர் எண்ணம், ‘நாம சாகப்போறோம்னு மெடிக்கல் ரிப்போர்ட்ஸ்தான் சொல்லியிருக்கு... கடவுள் சொல்லலையே’னு மனசுக்குள் நம்பிக்கை பரவிச்சு. எனக்கு நானே தைரியம் கொடுத்து மீண்டெழுந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, அந்த நாள்தான் என் வாழ்க்கையில் நான் அழுத கடைசி நாள். என் கணவர் மற்றும் குடும்பத்துக்கு நானே சமாதானம் சொன்னேன். ஆனா, விவரம் தெரியாத என் குழந்தைகளுக்குப் புரியவைக்கிறது அவ்வளவு எளிதானதாக இல்லை. ‘அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ட்ரீட்மென்ட்டுக்குப் போயிட்டு வந்து, உங்ககூட ரொம்ப நாள் இருப்பேன்’னு சொன்னேன். புற்றுநோய் வலியைவிட என் குழந்தைகள் அழுததுதான் ரொம்ப வலிச்சது. மனசைத் தேத்திக்கிட்டு, குழந்தைகளைக் கணவரிடம் விட்டுட்டு, கீமோ சிகிச்சைக்காக மும்பை போனேன். முடியையெல்லாம் வெட்டி எடுத்துட்டாங்க. சிகிச்சையால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சுபோச்சு. ஆனாலும் தைரியத்தை இழக்கலை. அறுவை சிகிச்சை, ரேடியேஷன்னு பலகட்டப் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டெழுந்து புது மனுஷியாக மாறினேன்” என்றவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க ஆரம்பித்ததைப் பற்றிச் சொல்கிறார்.

“நான் புற்றுநோயிலிருந்து மீண்ட சில மாதங்களில், என் சித்தப்பா போன் பண்ணினார். கேன்சரால் பாதிக்கப்பட்ட அவரின் நண்பர், கீமோதெரபியை நினைச்சு ரொம்ப பயப்படுறதா சொல்லி, என்னை தைரியம் கொடுக்கச் சொன்னார். அந்த நண்பரை நேரில் சந்திச்சு என்னோட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி ஊக்கம் கொடுத்தேன். பிறகு மரண பயம் நீங்கி, தைரியமா சிகிச்சைக்குத் தயாரானார். இதைப் பார்த்து அந்த மருத்துவமனை நிர்வாகம், கீமோதெரபி எடுத்துக்கொள்ளும் புற்றுநோயாளிகளுக்கு கவுன்சலிங் வழங்க அடிக்கடி என்னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. நான் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு சிகிச்சை குறித்து நம்பிக்கை கொடுக்கும்விதமாக இருக்கு; அது அவங்க வாழப்போற புதிய வாழ்க்கைக்கு ஆரம்பமாவும் அமையுதுனு உணர்ந்தேன். புற்றுநோயிலிருந்து மீண்டெழுந்த என்னைப் போன்ற எட்டுப் பேரை ஒருங்கிணைத்து, ‘கேன்சர் சப்போர்ட்டிங் குரூப்’ என்ற குழு ஒன்றை ஆரம்பிச்சு, அதன் மூலம் கவுன்சலிங் கொடுக்க ஆரம்பிச்சோம்’’ என்று சொல்லும் நீர்ஜாவுக்கு 2004-ம் ஆண்டு வலதுபக்க மார்பிலும் புற்றுநோய்க் கட்டிகள் ஏற்பட்டிருக்கின்றன.

``ரெண்டாவது முறை கேன்சர் வந்தப்போ நான் கொஞ்சம்கூட பயப்படலை... நம்பிக்கையோட சிகிச்சை எடுத்துக்க ஆரம்பிச்சேன். சிகிச்சை முடிஞ்ச அடுத்த நாளிலிருந்தே கவுன்சலிங் கொடுக்க ஆரம்பிச்சேன். தினமும் புற்றுநோயாளிகளைப் பார்க்கிறேன். அவங்களுக்கு ஊக்கம் கொடுத்து, வாழும் உதாரணமா அவங்க கண்முன் நிற்கிறேன். `எனக்கு வயசாகிருச்சு’னு ஒரு நாளும் சோர்ந்துபோனது கிடையாது. பாசிட்டிவ் எனர்ஜியோடு தினமும் பயணம் செய்கிறேன்” என்கிறார் முகம் நிறைந்த புன்னகையுடன்.

சு.சூர்யா கோமதி - படங்கள்: வள்ளிசெளத்ரி