Published:Updated:

யோகாசனத்தில் புதிய சாதனை - நோபல் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த தமிழக மாணவி

யோகாசனம்

யோகாசனத்தில் புதிய சாதனை - நோபல் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த தமிழக மாணவி
யோகாசனத்தில் புதிய சாதனை - நோபல் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த தமிழக மாணவி

யோகாசனம் செய்தவாறு, 47 விநாடிகளில் 10 முட்டைகளைக் காலால் எடுத்து, 3-ம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்தார்.

விருதுநகர் அருகே உள்ள செவல்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி, முஜிதா. இவர் அப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவருகிறார். யோகாசனப் போட்டியில் பங்கேற்று, மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், கண்டபேருண்டாசனம் என்ற ஆசனத்தில் ஈடுபட்டவாறு தன் முன்னால் இருந்த 10 முட்டைகளை 47 விநாடிகளில் காலால் எடுத்து, கிண்ணத்தில் வைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்தார். இந்த சாதனைக்காக, கடந்த 4 நாள்களாக மாணவி பயிற்சி மேற்கொண்டார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த வைஷ்ணவி என்ற 6-ம் வகுப்பு மாணவி, 20 விநாடிகளில்  6 முட்டைகளை எடுத்து சாதனை படைத்திருந்தார். இன்று முஜிதா, அந்தச் சாதனையை முறியடித்துள்ளார். அவரது பெயர் நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. மாணவி முஜிதாவை பயிற்சியாளர் ஜெயக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டினார். அதன் பின்னர் சாதனை படைத்த மாணவிக்கு நோபல் வேர்ல்டு நிர்வாகிகள் சான்றிதழ் வழங்கினர்.