Published:Updated:

ஹெல்த்

ஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹெல்த்

தகவல்

ஹெல்த்

`தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமாம்.’

ஹெல்த்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும் பலரும் சொல்லும் விஷயம் இது. ‘அது என்ன 10,000 ஸ்டெப்ஸ்... இதற்கென ஏதும் ஆய்வு நடத்தப்பட்டதா?’ என்றால், `கிடையாது’ என்பதுதான் பதில். ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தன் பீடோமிட்டரைப் (Pedometer) பிரபலப்படுத்த, தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டுமென விளம்பரம் செய்தது. மற்ற உலக நாடுகள் அதை அப்படியே நகல் எடுத்துக்கொண்டன. இப்போது, உண்மையிலேயே இது குறித்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. 17,000 மூதாட்டிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களின் சராசரி வயது 72. இதன் முடிவின்படி, `சராசரியாக 4,000 அடிகள் தினமும் நடந்தாலே போதும்’ என்கிறார்கள். `7,500 அடிகளுக்குமேல் நடப்பவர்களின் சக்தியில் எந்த மாற்றமுமில்லை’ என்கிறது இந்த ஆய்வு. `ஜிம்முக்குப் போவதுபோல உடற்பயிற்சிகளுக்காகத் தனியாகச் செலவு செய்யாமல், தினமும் நடந்தாலே பெண்களுக்குப் போதுமான வலிமை கிடைத்துவிடும்’ என்கிறது இந்த ஆய்வு.

ஹெல்த்

பிரசவத்துக்குப் பின்னர் பெரும்பாலான பெண்களின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association) நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதும், தொடர்ந்து செக்அப்புக்காக வரும்போதும் பெண்களின் ரத்த அழுத்தம் அளக்கப்படுகிறது. ஆனால், `அப்போது சரியாக இருக்கும் ரத்த அழுத்தம், வீடு திரும்பியதும் எந்த நேரமும் அதிகரிக்கலாம்’ என எச்சரிக்கிறது இந்த ஆய்வு. `பிரசவம் முடிந்து ஆறு மாதங்கள்வரை இந்த ஆபத்து அதிகமாக இருக்கும்’ எனவும் சொல்கிறது இந்த ஆய்வு. பிரசவித்த பெண்களில் 40 சதவிகிதம் பேருக்கு இந்த ஆபத்து இருக்கக்கூடும். அதனால், வீட்டிலேயே ரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் கருவிகளைக்கொண்டு ரத்த அழுத்தத்தை அளக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் இந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள்.

ஹெல்த்

லகில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சித் தொடரான, `கேம் ஆஃப் த்ரோன்ஸி’ன் முக்கிய நாயகி சான்சா ஸ்டார்க் (Sansa Stark). இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்  சோபி டர்னர் (Sophie Turner). எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் டீன் ஏஜில் இந்தத் தொடரில் கமிட் ஆன டர்னருக்கு நிறைய புகழும், கூடவே நெகட்டிவ் கமென்ட்களும் வந்தன. `எவ்ளோ ஒல்லியா இருக்கே பாரு’ போன்ற விமர்சனங்கள் டர்னரைக் கடுப்பேற்றின. ஒருகட்டத்தில்  அறையைவிட்டே வெளியே வராமல் தனியே இருக்க ஆரம்பித்தார். மன அழுத்தம் அவரை வாட்டியது. மருத்துவமனையில் அட்மிட் ஆன டர்னரை மீட்டெடுத்தவர் அவரின் காதல் கணவர். `தினமும் அவர் சொன்ன `ஐ லவ் யூ’தான் என்மீதே எனக்கு நம்பிக்கையை வரவழைத்தது. அன்பை மட்டும் பிடித்துக்கொள்ளுங்கள்’ என சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் டர்னர். மன அழுத்தம், மோசமான பிரச்னை. அது யாருக்கும் வரலாம். நாம்தான் நம் வாழ்க்கையை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹெல்த்

ர்நாடகா மெடிக்கல் கவுன்சில் (Karnataka Medical Council) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மருத்துவர்களை `ஆன்லைன் கன்சல்டிங் செய்ய வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு போன்ற நகரங்களில் வசிப்போர் சின்னச் சின்ன மருத்துவப் பிரச்னைகளுக்கு மருத்துவமனைகளுக்குச் செல்வதை விரும்புவதில்லை. இவர்களைக் குறிவைத்து பல இணையதளங்கள் ஆன்லைன் கன்சல்டிங் முறையைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த முறைப்படி வீடியோ கான்ஃபரென்ஸிங் மூலமாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ நோயாளிகள் மருத்துவரைத் தொடர்புகொண்டு, பிரச்னைகளைப் பேசி, சிகிச்சை பெறலாம். ஆனால், `நோயாளிகளை நேரில் பார்க்காமல் சிகிச்சை தருவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கர்நாடகா மெடிக்கல் கவுன்சில் சொல்லியிருக்கிறது. அப்படிச் செய்தால் அது தங்கள் விதிகளை மீறிய செயல் எனவும் அறிவித்திருக்கிறது. `சில எமர்ஜென்சி நேரங்களில் ஆன்லைன் கன்சல்டிங் கைகொடுத்திருக்கிறது என்பதும் உண்மைதான். நாங்கள் எல்லா பிரச்னைகளுக்கும் ஆன்லைன் கன்சல்டிங்கைத் தீர்வாகச் சொல்லவில்லை’ என அந்தச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றன.

ஹெல்த்

டும் ரயிலில் பல பிரசவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சில இறப்புகளும் நிகழ்ந்திருக்கின்றன. `ரயில் நிலையங்களில் அவசரகால மருத்துவ உதவி மையங்கள் தேவை’ என்ற குரல்கள் பல நாள்களாக ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. வெகு சில நிலையங்களில்தாம் அது சாத்தியமாகியிருக்கிறது. பெங்களூரு, மெஜஸ்டி பகுதியிலிருக்கும் க்ராந்திவீரா சங்கொலி ராயன்ன ரயில் நிலையத்தில் இப்போது இலவச மருத்துவ உதவி மையம் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. நடைமேடை எண் 1-ல் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மையம், மணிப்பால் மருத்துவமனையின் உதவியுடன் உருவாகியிருக்கிறது. நோயாளிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, ஆம்புலன்ஸும், ரயிலிலிருந்து மையத்துக்கு நோயாளிகளை அழைத்துவர பேட்டரியில் இயங்கும் ஒரு வண்டியும் இந்த மையத்தில் உண்டு. தினமும் இரண்டு லட்சம் பயணிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களும் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்துக்கு இந்த மையம் முக்கியமானது.

ஹெல்த்

லக சுகாதார மையம் சென்ற மாதம் எடுத்திருந்த ஒரு முடிவை உலகம் முழுக்க இருக்கும் மருத்துவர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் பாராட்டியிருக்கிறார்கள். திருநங்கைகள் சமூகத்தைப் பற்றிய அந்த முடிவை, அவர்கள் வாழ்வின் முக்கியமான விஷயமாகப் பார்க்கிறார்கள். இதுவரை திருநங்கைகளும் திருநம்பிகளும் எதிர்கொள்ளும் மருத்துவப் பிரச்னைகளை மனநலன் சார்ந்த பிரச்னைகளாக உலக சுகாதார மையம் வரையறுத்திருந்தது. `இனி அவை அப்படிக் குறிப்பிடப்படாது’ என உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. இனி அவை பாலியல் சார்ந்த மருத்துவப் பிரிவின் கீழ் குறிப்பிடப்படும். `மனநலப் பிரச்னைகளிலிருந்து அவற்றை எடுத்துவிட்டோம். காரணம், அவை அவர்களின் மனநலன் சார்ந்த பிரச்னைகள் அல்லவென இப்போது புரிந்துகொண்டோம்’ எனச் சொல்லியிருக்கிறார் உலக சுகாதார மையத்தின் ஹெல்த் எக்ஸ்பெர்ட் டாக்டர் லாலே (Dr.Lale). இந்த மாற்றம் மூன்றாம் பாலினத்தவரை அவர்கள் ஆரோக்கியம் குறித்து எந்த மனத்தடையுமின்றி பேச முன்வர உதவும். அனைத்து நாடுகளும் இது தொடர்பான சட்ட மாற்றங்களையும், மருத்துவ அமைப்பின் மாற்றங்களையும் கொண்டுவர வேண்டுமென உலக சுகாதார மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கார்க்கிபவா