Published:Updated:

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

Published:Updated:
கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

வெயில் காலத்தில், ஓர் உயிராக இருக்கிற பெண்களுக்கே உடல் சோர்ந்து போகும் என்றால், ஈருயிராக வயிற்றில் சிசுவுடன் அதுவும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறப் பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்வது? உடலும் கிட்டத்தட்ட பத்துக் கிலோவுக்கு மேல் வெயிட் போட்டிருக்கும். அதனால், எந்த உடை அணிந்தாலும் அசௌகரியம், அதிகப்படியான வியர்வை, நீரிழப்பு என்று கஷ்டப்படுவார்கள். நிறைமாத நேரத்தில் இப்படியென்றால், இந்த வெயில் காலத்தில் குழந்தை பெற்ற பெண்களின் நிலைமை இன்னமும் கடினம்தான். இவற்றை எப்படிச் சமாளிப்பது என்று மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜிடம் கேட்டோம். 

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

``பொதுவாகவே, உடல் பருமனாக இருப்பவர்கள் வெயில் காலத்தில் சிரமப்படுவார்கள். சில மாதங்களில் திடீரென்று உடல் எடை போட்ட கர்ப்பிணிப் பெண்கள், இன்னமும் சிரமப்படத்தான் செய்வார்கள். அதனால், மூன்றாவது டிரைமெஸ்டரான ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் மாதங்களில் உடல் எடை ரொம்பவும் அதிகரிக்காமல் இருக்க தினமும் வாக்கிங் செல்லுங்கள். 

இந்த மூன்று மாதங்களிலும் தொளதொளப்பான பருத்தி உடைகளை அணியுங்கள். 

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

உணவைப் பொறுத்தவரை, உங்கள் அனுபவத்தில் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுத்திய உணவுகளைத் தொடக்கூட செய்யாதீர்கள். ஏனென்றால், கர்ப்பமாக இருக்கும்போது, நார்மலாகவே மலச்சிக்கல் ஏற்படும். இந்த நேரத்தில், காரசாரமான மசாலா உணவுகள், அசைவ உணவுகள், கிழங்கு வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள் என்று சாப்பிட்டால் மலச்சிக்கல் இன்னமும் அதிகமாகும். உங்கள் உடம்பை நீங்களே அசௌகரியமாக உணர்வீர்கள். இதற்குப் பதில், நீர் காய்கறிகள், நுங்கு, இளநீர், மோர், நிறைய தண்ணீர் என்று சாப்பிடுங்கள். பழச்சாறுகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், சர்க்கரையுடன் துளி உப்பும் சேர்த்தும் குடியுங்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு காலில் இழுத்துப் பிடித்துக் கொள்கிற `கிராம்ப் ( Cramp)' அடிக்கடி வரும். அதைத் துளி உப்பு சேர்த்த பழச்சாறு கன்ட்ரோலில் வைக்கும். தவிர, மேலே சொன்ன லிக்விட் உணவுகளை நிறைய சாப்பிட்டீர்களென்றால், எவ்வளவு வெயில் அடித்தாலும் சோர்ந்து போக மாட்டீர்கள். டயபடீஸ் இருப்பவர்கள் மட்டும் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டுச் சாப்பிடுங்கள். 

கர்ப்பமாக இருக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், சட்டென்று சளிப் பிடிக்கும். சின்னம்மை, தட்டம்மை வரலாம். ஒருவேளை தாய்க்குச் சின்னம்மை வந்து, ஒரு வாரத்துக்குள் டெலிவரியானால், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அப்படி ஏற்பட்டிருந்தால் குழந்தையைத் தனியாக வைத்து சிகிச்சை தருவார்கள். அதனால் பயப்பட தேவையில்லை என்றவர், குழந்தை பிறந்த பெண்கள் கோடைக்காலத்தில் தங்களை பராமரிக்க வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தார்.

கோடையில் குழந்தை பெற்றவர்கள் தண்ணீர் நிறைய அருந்துங்க! ஏன்? மருத்துவ விளக்கம்.

``குழந்தை பிறந்த பின்பு, நம் ஊரில் பிரசவித்த பெண்கள் குடிப்பதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். அது தவறு. தண்ணீர் நிறைய கொடுத்தால்தான் தாய்ப்பாலே நன்கு சுரக்கும். அடுத்து, யூரினரி இன்ஃபெக்‌ஷனும் வராது. இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்கவில்லையென்றால், நம் ரத்தம் அடர்த்தியாகும். இதனால், கெண்டைக்கால் தசையில் ரத்தம் உறையலாம். இதை உடனே கண்டுபிடித்துவிட்டால் நீக்கி விடலாம். கண்டுபிடிக்கவில்லையென்றால், அந்த உறைந்த ரத்தம் உடைந்து ரத்த ஓட்டத்துடன் கலந்து விடும். இது நுரையீரலில் நின்று விட்டால், தாயை இழக்கிற நிலைமைகூட வரலாம். மூளையில் நின்றுவிட்டால் ஃபிட்ஸ் வரலாம். அதனால்தான், தாயையும் சேயையும் மருத்துவமனையிலிருந்து அனுப்பும்போது, மருத்துவர்கள் நாங்கள்  'நிறைய தண்ணீர் குடியுங்கள்' என்று சொல்லிச் சொல்லி அனுப்புகிறோம்.

அதிலும் கோடைக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் மற்றவர்களைவிட இன்னும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக்காலத்தில் குழந்தை பெற்ற பெண்கள் இதை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளைப் பொறுத்தவரை, வெயில் காலம் என்பதால் குழந்தைகளை திக்கான துணியால் ரொம்பவும் சுற்றி வைக்காதீர்கள். ஏனென்றால், பிறந்த குழந்தையின் உடம்பால், தன்னுடைய உடல் வெப்பநிலையை வெளிப்புற வெப்பத்துக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியாது'' என்று முடித்தார் மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜ்.