Published:Updated:

13-ன் முக்கியத்துவம், 43-லும் அவசியம்! மெனோபாஸுக்கு வழிகாட்டும் சித்தா #Menopause

''ஒரு சிறுமி வயதுக்கு வரும்போது, அவளுக்குக் கிடைக்கிற அன்பும் ஆரோக்கியமான உணவும், அவள் வயது முதிர்ந்து மெனோபாஸைக் கடக்கிறபோது கிடைப்பதில்லை, எடுத்துக்கொள்வதில்லை. குடும்பத்தைப் பராமரிக்கிற வேலை தலைக்கு மேல் இருப்பதால், அவர்களால் அவர்களையே பராமரிக்க முடிவதில்லை. நம் நாட்டில் நடுத்தர வயதுப் பெண்களின் நிலைமை இதுதான்'' -  மிகுந்த ஆதங்கத்துடன் சித்த மருத்துவர் வரலட்சுமி நம்மிடம் பகிர்ந்துகொண்ட இந்த வார்த்தைகள், நூறு சதவிகிதம் உண்மை என்பது, எல்லா நடுத்தர வயதுப் பெண்களுக்கும் தெரியும். அவரிடமே, மெனோபாஸ் நேரத்திலும் அதைக் கடந்த பிறகும் நம் வீட்டு அம்மாக்கள் ஆரோக்கியமாக இருக்க வழிகள் கேட்டோம். இதோ அவர் சொன்னவை...

13-ன் முக்கியத்துவம், 43-லும் அவசியம்! மெனோபாஸுக்கு வழிகாட்டும் சித்தா #Menopause

* மெனோபாஸ் நேரத்தில் உடல் மட்டுமல்ல, மனநிலையும் மாறும். டீன் ஏஜ் வயதில் இருக்கிற பிள்ளைகளின் உடலில் நிகழ்கிற மிகப் பெரிய மாற்றங்கள் போலவே மெனோபாஸ் வயதிலும் உடலில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. ஒரு பெண் பெரிய மனுஷியாகும்போது உளுத்தங்களி, நாட்டுக்கோழி முட்டை, சிவப்பரிசிப் புட்டு என்று சத்தாகக் கொடுத்து உடம்பைத் தேற்றுவதுபோல, மெனோபாஸ் நேரத்திலும் சத்தாகச் சாப்பிடக் கொடுத்து அவளை பராமரிக்க வேண்டும். தவிர, டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு வருகிற கோபம், எரிச்சல் போன்றதுதான் மெனோபாஸ் வயதுப் பெண்களுக்கு வருகிற கோபமும். அது ஹார்மோன் படுத்துகிற பாடு. பதின்ம வயதுப் பெண்களைப் போலவே இவர்களையும் கொஞ்சம் அரவணைத்துச் செல்வதுதான் இங்கு தீர்வு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

13-ன் முக்கியத்துவம், 43-லும் அவசியம்! மெனோபாஸுக்கு வழிகாட்டும் சித்தா #Menopause

*  மெனோபாஸ் வரப்போவதற்கான அறிகுறிகள் இருக்கும்போதும் சரி, அது வந்தபின்பும் சரி, பெண்களால் முன்பு போலவே ஓடியாடி வேகமாக வேலை செய்ய முடியாது. இது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில், பல பெண்கள் 'ஐயோ, நம்மளால சுறுசுறுப்பா வீட்டுக் காரியங்களைப் பார்க்க முடியல' என்கிற குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிவிடுகிறார்கள். இது தேவையே இல்லாத ஒன்று. 

* கார அரிசி மற்றும் உளுந்து உணவுகளுடன் வெண்டைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, அத்திக்காய், கோவைக்காய் என்று நாட்டுக் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். ஹார்மோனின் ஆட்டம் கொஞ்சம் மட்டுப்படும்.

* மெனோபாஸ் வருவதற்கு முன்பு கை, கால்கள் வீங்கும். இது மெனோபாஸ்க்கான ஒரு அறிகுறி. இதற்கு, சிறு சிறு குச்சிகளுடன் முருங்கைக்கீரை, சிறு கீரைத் தண்டு, கீரைத் தண்டு, வாழைத்தண்டு ஆகியவற்றை சூப்பாகச் செய்து குடித்தால், மூட்டு வீக்கங்களில் இருக்கிற நீர் வடியத் தொடங்கும். 

* பசலைக்கீரை, மாதம் ஒருமுறை அகத்திக்கீரை, பிரண்டை என்று உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால், குறைகிற கால்சியத்தை ஈடுகட்டும். முடக்கற்றான் கீரை கால் வலியைப் போக்கும்.

* மெனோபாஸ் நேரத்தில் எலும்பு மஜ்ஜைகள் பலவீனமாகும். அதனால்தான், ரத்தவிருத்திக் குறைவது. இதற்குத் துவர்ப்பு சுவையுள்ள வாழைப்பூ, அத்தி, விளாம்பழம், பொன்னாங்கண்ணி கீரைகள், நெல்லிக்காய், ஆவாரம் பூ மற்றும் முருங்கைப் பூ கூட்டு என்று சாப்பிடுங்கள்.

* இந்த நேரத்தில் பிறப்புறுப்பு வறண்டு வெள்ளைப்படுதல், அரிப்பு, இன்ஃபெக்‌ஷன் என்று அவஸ்தைகள் வரும். இதற்கு ஆரக் கீரை, வெள்ளைக்கீரை சாப்பிடலாம். சந்தையில் கிடைக்கவில்லை என்றால், கீரை விற்பவர்களிடம் கேளுங்கள். விளக்கெண்ணெயை அந்த இடத்தில் தடவினால், வறண்டத்தன்மை மாறும். அரிப்பு இருப்பவர்கள் திரிபலா சூரணத்தால் அந்த இடத்தைச் சுத்தம் செய்யலாம்.

13-ன் முக்கியத்துவம், 43-லும் அவசியம்! மெனோபாஸுக்கு வழிகாட்டும் சித்தா #Menopause

* சிறுதானியங்கள் சாப்பிடலாம். நீரிழிவு இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம். 

* மெனோபாஸ் வியாதி அல்ல என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். மெனோபாஸ் நேரத்தில் மனைவிகளுக்கு ஆறுதலாக இருப்பது தன்னுடைய கடமை என்பதைக் கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இவையிரண்டும் இருந்தால் மெனோபாஸும் கடந்து போகும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism