Published:Updated:

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

நாற்பதை கடந்த பெண்கள் நோய் பாதிப்புகள் குறித்த பல குழப்பங்களுடனும் சந்தேகங்களுடனும் இருப்பார்கள். பயமின்றி அவர்கள் வாழ்வதற்கு, சில மருத்துவ ஆலோசனைகள் இதோ...

Published:Updated:

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

நாற்பதை கடந்த பெண்கள் நோய் பாதிப்புகள் குறித்த பல குழப்பங்களுடனும் சந்தேகங்களுடனும் இருப்பார்கள். பயமின்றி அவர்கள் வாழ்வதற்கு, சில மருத்துவ ஆலோசனைகள் இதோ...

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

பூப்பெய்தல் தொடங்கி மெனோபாஸ் வரை ஒவ்வொரு பருவத்திலும் பெண்களுக்குப் பல்வேறு உடல்நல மற்றும் மனநல மாற்றங்கள் நிகழும். பல மாற்றங்களுக்கு உள்ளாகும் பெண்கள், தங்களது உடல்நலனில் கவனம் செலுத்துகின்றனரா என்பது கேள்விக்குறிதான். பத்துப் பெண்களிடம் `நீங்கள் கடைசியாக மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்து கொண்டது எப்போது?' எனக் கேட்டுப்பாருங்கள். பத்தில் ஒன்பது பேர் திணறத்தான் செய்வார்கள். எனிலும், உடல்நலம் குறித்த பயம் அவர்கள் அனைவருக்குள்ளுள் எப்போதும் இருக்கும். தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்தும் நோய் பாதிப்புகள் குறித்தும் குழப்பங்களுடனும் சந்தேகங்களுடனும்தான் இருப்பார்கள். 'நாற்பது வயதைக் கடக்கும்போதுதான் உடல்நலன் மீதான பயம் பெண்களுக்கு அதிகரிக்கிறது' என்கின்றன சில ஆய்வுகள். 

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

மெனோபாஸை நெருங்கும் பெண்கள், இயல்பாகவே 'மூட் ஸ்விங்ஸ்' பிரச்னைக்கு உள்ளாவார்கள். இந்த வயதில், பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் பிரச்னையும் ஏற்படும் அது சார்ந்த பயமும் அதிகமாக இருக்கும். நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், உடல்நலம் சார்ந்த பயத்தைப் போக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை அளித்தார் மகளிர் நல மற்றும் மகப்பேறு மருத்துவர் மீனா.

* மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் மெனோபாஸ் காலத்தை நெருங்கும்போது தன் உடல் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே அந்தக் காலத்தை அமைதியாகவும் பயமின்றியும் கடக்க முடியும். இந்தச் சூழலில் `ப்ரீமென்சுரல் சின்ரோம்' (Premenstrual syndrome) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய காலகட்டத்தில் ஏற்படும் உடல் மாற்றங்கள் மிக அதிகமாக இருக்கும். அதனால் இரவில் அதீத வியர்வை, அதீத உணர்ச்சி வெளிப்பாடு, மனநிலை தடுமாற்றம் (Mood Swings) போன்ற பல சிக்கல்கள் ஏற்படலாம். இந்தக் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்கள் மனதை அமைதிப்படுத்துவதற்காக யோகா பயிற்சிகள் மேற்கொள்வது நல்லது.

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

* தீவிர மனஅழுத்தம், தவறான உணவு முறை போன்றவை காரணமாக சில பெண்களுக்கு நாற்பது வயதுக்கு முன்பாகவே மெனோபாஸ் ஏற்பட்டுவிடுகிறது. இதுபோன்ற நிலையில் இருப்பவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக, திடீர் திடீரென்று உடலில் வெப்பம் பரவுதல் (Hot Flashes), நிம்மதியற்ற உறக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற அறிகுறிகள் தெரியவந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.

* நாற்பது வயதுக்குப் பிறகு, குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை சுய மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பில் ஏதேனும் கட்டி இருக்கிறதா, முலைக்காம்பில் ஏதேனும் காயம் தெரிகிறதா என்று கண்டறிய வேண்டும். கண்ணாடி முன் நின்றுகொண்டு, உள்ளங்கையை மார்பகத்தின் அடியில் வைத்து இருபக்க மார்பகத்திலும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் மாற்றமோ அசௌகரியமோ தெரிந்தால் சோனோ மேமோகிராபி என்ற ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். 

* குறிப்பிட்ட ஏதேனும் நோய்க்கான குடும்பப் பின்னணி இருப்பவர்கள் மற்றும் மரபுவழி நோய்களுக்கான பின்னணி இருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் அதற்கான பரிசோதனைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாகப் புற்றுநோய்க்கான குடும்பப் பின்னணி இருப்பவர்கள் பரிசோதனைகள், ஆரோக்கியம் தரும் உணவுகள், உடற்பயிற்சிகளைத் தவிர்க்கக் கூடாது

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

* உடல்நிறை குறியீட்டெண் (BMI)அளவைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். பி.எம்.ஐ. 18 க்குக் கீழாகவோ 30-க்கு மேலாகவோ இருந்தால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் போன்ற வாழ்வியல் நோய் பாதிப்புகள் ஏற்படலாம். உடல் எடை மிகக் குறைவாக இருப்பவர்களுக்கு இதயம் பலவீனமாவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே, எடை ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 

* கர்ப்ப காலத்தின்போது சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் பிரச்னைகளை எதிர்கொண்ட பெண்களுக்கு, நாற்பது வயதுக்குப் பிறகு அதே பிரச்னை வாழ்வியல் பாதிப்பாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, ஒவ்வொரு வருடமும் அதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால் அனைத்து வாழ்வியல் பாதிப்புகளையும் தவிர்க்கலாம்.

* அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்களுக்கு கர்ப்பப்பை கீழே இறங்கிவிடக்கூடும். அப்படியான பெண்கள், பிரசவத்துக்குப் பின்பாகவே கர்ப்பப்பை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

*கருத்தடை சாதனங்கள் உபயோகிக்கும் பெண்கள் சிலருக்கு நாற்பது வயதுக்குப் பிறகு அதுசார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படக்கூடும். எனவே கருத்தடை சாதனம் உபயோகிப்பவர்கள் அனைவரும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

40 வயதை நெருங்கும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு 10 ஆலோசனைகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது

* எலும்புத் தேய்மானம் தொடர்பான சிக்கல்கள் நாற்பதைத் தாண்டிய பெண்களுக்கு அதிகம் ஏற்படும். மூட்டு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகள், வயது காரணமாக ஏற்படுபவை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் முறையான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலமாகக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம். எலும்பு மருத்துவரின் ஆலோசனையோடு உணவையும் பயிற்சிகளையும் செய்வது நல்லது. நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

* நாற்பது வயதைத் தொடும்போது குடும்பங்களிலும் சில சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக, குழந்தைகள் பதின் பருவத்தை எட்டுவார்கள். அவர்கள் குறித்த பயமும் அச்சமும் ஏற்படத் தொடங்கும். பதின்பருவக் குழந்தைகள் சொல் பேச்சு கேட்காவிட்டால் கோபமும் ஏக்கமும் ஒருசேர வெளிப்படும். அது போன்ற சூழல் மனதையும் பாதிக்கும். அதனை எதிர்கொள்ளத் தினமும் காலையில் நடைப்பயிற்சி மற்றும் தியானம் செய்யலாம். வாய்ப்பிருந்தால், மனதை ஒருநிலைப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் ஏதேனும் செய்யலாம்.