ஸ்பெஷல் 1
Published:Updated:

நம்ம ஊரு வைத்தியம்! - 1

நம்ம ஊரு வைத்தியம்! - 1
News
நம்ம ஊரு வைத்தியம்! - 1

எட்வர்ட்புதிய தொடர்

##~##

வணக்கம்... எம்பேரு எட்வர்ட். ஓய்வுபெற்ற பேராசிரியரான நான், இப்ப நாலு பேருக்கு நாட்டு வைத்தியம் பார்த்துட்டு இருக்கேன் கடலூர்ல. அந்த விஷயங்களையெல்லாம் இன்னும் நாலு பேருக்கு சொல்லலாமேங்கற யோசனையில... இப்ப 'அவள் விகடன்' இதழ்ல 'நம்ம ஊரு வைத்தியம்'ங்கிற பேர்ல தொடர்ந்து எழுதப் போறேன்!

ங்க பாட்டி, எங்கம்மானு பரம்பரை பரம்பரையா நாட்டுவைத்தியத்துல கில்லாடிங்க. அவங்கள பார்த்துப் பார்த்து வளர்ந்ததால... நமக்கு அதெல்லாம் அத்துப்படியாகிப் போச்சுங்க... அவ்வளவுதான்!

நம்ம ஊரு வைத்தியம்! - 1

நம்மளோட பாட்டி வைத்தியம்கிறது... சும்மா சோதனைக்கூடத்துல எலியையோ... புலியையோ வெச்சு சோதிச்சு பார்த்து சொன்ன வெளிநாட்டுக்காரன் சங்கதி இல்லீங்க. மனுஷங்க தங்களுக்கு தாங்களே நேரடியா சோதனை பண்ணி பார்த்து, ஆயிரம் ஆயிரம் வருஷமா அனுபவப்பூர்வமா கண்டுணர்ந்து, சொல்லி வெச்சுருக்கற உள்ளூரு சங்கதிங்க!

ஆனா... 'பாட்டி வைத்தியமா... பத்தாம்பசலி வைத்தியம்... நோ நோ...''னு அதை நம்பாத 'எஜுகேட்டட்’ ஜனங்களும் பல பேரு இங்க இருக்கத்தான் செய்றாங்க. சாதாரண காய்ச்சலுக்கே கூட... டவுனுல இருக்கற அத்தாம்பெரிய ஆஸ்பத்திரிக்கு போய் ரெண்டாயிரத்தி சொச்ச ரூபாய்க்கு அந்த டெஸ்ட்... இந்த டெஸ்ட்டுனு கண்டதையும் எடுத்துட்டு, டாக்டரைப் பார்க்க க்யூவுல காத்துக் கிடப்பாங்க.

யாரு எப்படி எடுத்துக்கிட்டாலும்... நாம சொல்றதை சொல்லி வைப்போம்ங்கிற எண்ணத்துலதான், இதை ஆரம்பிக்கிறேன். நம்பிக்கை உள்ளவங்க, பலனை அனுபவிக்கட்டுமே... என்ன நான் சொல்றது?!

நாட்டு வைத்தியம்னதுமே... அதுக்கு பத்தியம் இருக்கணும், அதுக்கான மருந்துகள் ஏழு கடலைத்தாண்டி அஞ்சு மலையைத்தாண்டி பறிச்சுட்டு வர்ற மூலிகைகளை வெச்சு தயாரிக்கணும்னு பலரும் நினைச்சுட்டு இருக்காங்க. 'பழமையான காடுகள்ல, பல கஷ்டங்களுக்குப் பிறகு பறிச்சுட்டு வந்த மூலிகையால தயார் செஞ்சது’னு விளம்பரங்கள பார்த்துக்கூட பயந்துருப்பீங்க. ஆனா... இங்க நான் சொல்லப்போறது எல்லாமே நம்ம கண்ணுக்கும்... கைக்கும் எட்டுற தூரத்துல கிடைக்கற செடி, கொடிங்க... வீட்டு அடுக்களையில இருக்கற சுக்கு, மிளகு... இதுமாதிரியான விஷயங்களைத்தான்!

நம்ம ஊரு வைத்தியம்! - 1

உதாரணமா... மிளகை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சட்டியில போட்டு தீயில கருகுற அளவுக்கு வறுத்து, பிறகு ஒரு கிளாஸ் தண்ணியை ஊத்தி நாலுல ஒரு பங்கா வத்தின பிறகு, ஆற வெச்சு குடிச்சா... எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் விலகிடும்.

- நோய்கள் விலகும்...