Published:Updated:

203 யூனிட் ரத்த தானம்; கின்னஸ் சாதனை படைத்த 80 வயது மூதாட்டி!

ஜோசபின் மிச்சாலுக்

அமெரிக்காவில், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லாததால், 80 வயதிலும் இவரால் தொடர்ந்து ரத்த தானம் கொடுக்க முடிகிறது.

Published:Updated:

203 யூனிட் ரத்த தானம்; கின்னஸ் சாதனை படைத்த 80 வயது மூதாட்டி!

அமெரிக்காவில், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லாததால், 80 வயதிலும் இவரால் தொடர்ந்து ரத்த தானம் கொடுக்க முடிகிறது.

ஜோசபின் மிச்சாலுக்

80 வயதான பெண் ஒருவர், 203 யூனிட் ரத்த தானம் அளித்து, முழு ரத்ததானம் அளித்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசபின் மிச்சாலுக் என்ற பெண்மணி, 1965ம் ஆண்டில், தன்னுடைய 22வது வயதில் ரத்த தானம் அளிக்கத் தொடங்கியுள்ளார். 60 ஆண்டுகளாக ரத்தம் கொடுத்து வரும் இவர், இதுவரை சுமார் 203 யூனிட் ரத்தம் அளித்துள்ளார்.

203 யூனிட் ரத்த தானம்; கின்னஸ் சாதனை படைத்த 80 வயது மூதாட்டி!

இவரின் இந்தப் பங்களிப்பு, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றி உள்ளது. இதுவரை 96,019 மில்லி லிட்டர் (96 லிட்டர்) ரத்தம் கொடுத்துள்ளார்.

அமெரிக்காவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு வயது வரம்பு இல்லாததால், 80 வயதிலும் இவரால் தொடர்ந்து ரத்த தானம் கொடுக்க முடிகிறது. ஒவ்வொரு வருடமும் 4 முறையாவது ரத்த தானம் செய்து விடுகிறார். 

இவரின் ரத்தம் 0+ பிரிவை சேர்ந்தது. மருத்துவமனைகளில் இந்த ரத்தத்திற்கு அதிக தேவை உள்ளது. அமெரிக்கச் செஞ்சிலுவை சங்கத்தின் கூற்றுப்படி, அமெரிக்க மக்கள் தொகையில் 37 சதவிகிதத்தினர் 0+ வகையைச் சேர்ந்தவர்கள். வயதான இப்பெண் அதிக நபர்களுக்கு ரத்தம் வழங்க வேண்டும் என விரும்புகிறார். அதோடு ரத்த தானம் அளிக்கத் தகுதியுள்ள அனைவரையும் அவர் ஊக்குவிக்கிறார். 

donor
donor
Pixabay

கின்னஸ் உலக சாதனை குறித்து ஜோசபின் மிச்சாலுக் கூறுகையில், ``ரத்த தானம் அளிப்பதற்காக நான் சாதனை படைப்பேன் என நம்பவில்லை. இந்த காரணத்திற்காக நான் ரத்த தானம் அளிக்கவில்லை. நான் தொடர்ந்து இதை செய்யத் திட்டமிட்டுள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த மதுரா அசோக் குமார் என்பவர் 117 யூனிட் ரத்த தானம் அளித்து கின்னஸ் சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.