Published:Updated:

இப்படியெல்லாமும் வரலாம் பிரச்னைகள்... தம்பதியருக்கு அலெர்ட்!

தம்பதியருக்கு அலெர்ட்!
பிரீமியம் ஸ்டோரி
தம்பதியருக்கு அலெர்ட்!

நியூ நார்மலில் இப்படியும் பிரச்னை வரலாம் என்பதால், உங்கள் வாழ்க்கைத்துணை யின் அலுவலக லேப்டாப்பைத் தொடாமல் இருப்பதே குடும்ப நிம்மதிக்கு நல்லது.

இப்படியெல்லாமும் வரலாம் பிரச்னைகள்... தம்பதியருக்கு அலெர்ட்!

நியூ நார்மலில் இப்படியும் பிரச்னை வரலாம் என்பதால், உங்கள் வாழ்க்கைத்துணை யின் அலுவலக லேப்டாப்பைத் தொடாமல் இருப்பதே குடும்ப நிம்மதிக்கு நல்லது.

Published:Updated:
தம்பதியருக்கு அலெர்ட்!
பிரீமியம் ஸ்டோரி
தம்பதியருக்கு அலெர்ட்!

இல்லறத்தில் இன்பங்கள் எப்படி சகஜமோ அதேபோல பிரச்னைகளும் சகஜம்தான். காலத்துக்குத் தகுந்தபடி மாறிக்கொண்டே இருக்கும் சில பிரச்னைகள் பற்றித்தான் இங்கே பேசுகிறார் மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

‘`ஒரு தலைமுறைக்கு முன்னால், தம்பதி யருக்கு இடையே பிரச்னை வருகிறது என்றால், அதற்கு பெரும்பாலும் மூன்றாம் நபர் தலையீடு தான் காரணமாக இருந்திருக்கிறது. இன்றைக்கு, மாறி வருகிற சூழ்நிலைகளே பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கின்றன.

 பூங்கொடி பாலா
பூங்கொடி பாலா

கணவருடைய லேப்டாப்பைப் பயன்படுத்தியதால்...

அந்தக் குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே ஒரே துறையில் வேலை பார்ப்பவர்கள். குழந்தை பிறந்த பிறகு, மனைவி வேலையைவிட்டு விட்டார். கொரோனா நேரத்தில் மறுபடியும் வேலைக்குச் செல்லலாம் என்று யோசித்த அந்த மனைவி, வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்த கணவரின் அலுவலக லேப்டாப்பில் தன்னுடைய மெயிலைத் திறந்து கம்பெனி ஒன்றுக்கு தன்னுடைய ரெஸ்யூமை அனுப்பி வைத்திருக் கிறார். இந்தத் தகவல் கணவரின் அலுவலகத் துக்குத் தெரிந்துவிட்டது.

விளைவு, அந்தக் கணவர் மீது விசாரணை, அடுத்தகட்ட பதவி உயர்வில் பிரச்னை என்று அலுவலகம் மெயில் மேல் மெயில் போட்டு அவரை ஒரு வழி செய்துவிட்டது. தவறு, அந்தத் தம்பதி மீதுதான் என்றாலும் அலுவலகத் தில் அந்தக் கணவர்பட்ட மன உளைச்சலை எல்லாம் மனைவி மீதுதான் இறக்கி வைத்தார்.

நியூ நார்மலில் இப்படியும் பிரச்னை வரலாம் என்பதால், உங்கள் வாழ்க்கைத்துணை யின் அலுவலக லேப்டாப்பைத் தொடாமல் இருப்பதே குடும்ப நிம்மதிக்கு நல்லது.

இப்படியெல்லாமும் வரலாம் பிரச்னைகள்... தம்பதியருக்கு அலெர்ட்!

வீட்டிலும் தொடரும் வேலை!

கொரோனா, ஆட்குறைப்பு போன்ற பிரச்னைகளுக்குப் பிறகு, பலரும் வீட்டுக்குச் சென்ற பிறகும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து

7 மணிக்கு வீட்டுக்குக் கிளம்புகிறவர்கள், வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் லேப்டாப்பை லாகின் செய்தால் நள்ளிரவுக்கு மேல்தான் தூங்கச்செல்கிறார்கள். நிறைய வீடுகளில் இன்றைக்கு இதுதான் நிலைமை.

விளைவு, ‘குடும்பத்துக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை’ என்ற பிரச்னை முன்பைவிட அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பிரச்னை இருப்பவர்கள் வாரத்துக்கு ஒருநாளோ, அரை நாளோ குடும்பத்துக்கு மட்டும்தான் என்று ஒதுக்கிவிட வேண்டும் அல்லது தூங்குவதற்கு முன்னால், சோஷியல் மீடியாவில் செலவிடுகிற நேரத்தில் பாதியை குடும்பத்துக் குக் கொடுக்கலாம். குடும்பத்துக் காகத்தான் உழைக்கிறீர்கள். அவர்களுக்கே நேரம் செல வழிக்கவில்லையென்றால் எப்படி..?

ஒருபக்கம் பிரைவஸி, மறுபக்கம் ஓப்பன் புக்!

ஒருபக்கம் தனித்தனி போன், சீக்ரெட் பேட்டர்ன் என்று இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வாழ்க்கைத்துணை யிடம் பல வருடங்கள் பழகிய நெருக்கமான நண்பர்களிடம் சொல்வதுபோல கடந்த காலத்தில் நடந்தது, நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருப் பது என அத்தனை விஷயங் களையும் பகிர்ந்துகொள் கிறார்கள்.

வாழ்க்கைத்துணையிடம் வெளிப் படையாக இருப்பது ரொம்பவும் சரி. அதேநேரம், திருமணத்துக்கு முந்தைய காதலை `பாஸ்ட் இஸ் பாஸ்ட்' என்று எடுத்துக்கொள்கிற பக்குவம் அவருக்கு இருக்கிறதா என்பது தெரியாமல், திறந்த புத்தகமாக இருந்து பிரச்னையில் சிக்கிக்கொள் கிறார்கள். நிகழ்கால விஷயங்களில் ஓப்பனாக இருப்பதும் கடந்தகால விஷயங்களில் லைஃப் பார்ட்னர் இயல்பைப் பொறுத்து நடந்து கொள்வதும்தான் இதற்குத் தீர்வு. ஒருவேளை உங்கள் வாழ்க்கைத்துணை அவருடைய திருமணத்துக்கு முந்தைய காதலைப் பற்றிச் சொல்ல வில்லையென்றால், நீங்கள் அந்தளவுக்கு அவருக்கு நம்பிக்கை யளிக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

எமோஜிக்கள் ஏற்படுத்துகிற விரிசல்கள்!

`பொசஸிவ்னெஸ்' தற்போது வேறு மாதிரி மாறியிருக்கிறது. ‘எனக்குப் பிடிச்ச நீ எனக்குப் பிடிக்காத நபருக்கு ஏன் லைக் போட்டே. வெறும் லைக் மட்டும் போட்டிருந்தா கூட பரவாயில்லை. ஹார்ட்டின் போட்டிருக்கே. எனக்குப் பிடிக்காதவனை/ளை நீ ஏன் சோஷியல் மீடியாவுல ஃபாலோ பண்றே’ என்பன போன்ற பிரச்னை கள் வருகின்றன. இது தெரியாமல் இருப்பதற்காக ‘மீ ஒன்லி செட்டிங்’கில் போட்டாலும் பிரச்னைதான். வாழ்க்கைத்துணை என்பதால் பிளாக் செய்யவும் முடியாது. நம்முடைய உறவு என்பது வேறு, வாழ்க்கைத்துணையின் சமூக வலைதளச் செயல்பாடுகள் என்பது வேறு என்ற புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே இந்தப் பிரச்னை வராமல் தடுக்க முடியும்.

முன்னாள் காதலுடன் நட்பில் இருந்தால்...

காதலை பிரேக் அப் செய்தாலும், இந்தக்கால தலைமுறையினரில் சிலர் அந்த ஆணுடன்/பெண்ணுடன் சமூக வலைதளங்களிலோ, நேரிலோ நட்பைத் தொடர்கிறார்கள். இதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்கிறார்கள். இது துணைக்குப் பிடிக்காதபோதோ, சந்தேகப்படும் போதோ பிரச்னை வருகிறது. இதற்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன.

ஒன்று, சமூக வலைதளங்களில் சந்தித்தாலும் சரி, நேரில் சந்தித்தாலும் சரி, ஹாய், ஹலோவுடன் நிறுத்திக் கொள்வது. இரண்டாவது தீர்வு, நீங்கள் இரண்டு பேர் மட்டுமல்லாமல் இரண்டு குடும்பங்களாகச் சேர்ந்து நட்பைத் தொடரலாம். இது பலருக்கு சாத்தியப்படாது என்பதால், திருமணத்துக்குப் பிறகு முன்னாள் காதலி/காதலன் நட்பைத் தவிர்ப்பதே நல்லது.

நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால்...

வாழ்க்கைத்துணையிடம் ஃபிரெண்ட்லியான உறவு கிடைக்காத பட்சத்தில் அதை நண்பர்களிடம் தேட ஆரம்பிக்கிறார்கள். அது கிடைக்கும்பட்சத்தில் தன்னில் பாதிக்குத் தருவதைவிட நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களை தங்களுடைய பெஸ்ட்டீகளாக நடத்துகிறார்கள்.

குடும்பப் பிரச்னைக்கு நண்பர் களுடன் கவுன்சலிங் வருபவர் களைகூடப் பார்த்திருக்கிறேன். வீட்டுக்குள் கிடைக்காத நட்பை, சில நேரம் காதலை, லைஃப் பார்ட்னர் வெளியில் தேடுகையில் அது குடும்பத்துக்குள் பிரச்னையை ஏற்படுத்துகிறது.

நட்புக்குக் கொடுக்கிற முக்கியத் துவத்தைக் குறைப்பது இதற்கான தீர்வில்லை. வாழ்க்கைத் துணைக்கு அதைவிட கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதே சரியான தீர்வு.''