Published:Updated:

வீங்கிய கால்கள்; குடும்பத்தைக் காக்க 26 வருட பயணம்; சிகிச்சைக்கு பணமின்றித் தவிக்கும் முத்துமாரி!

மகள் மற்றும் கணவருடன் முத்துமாரி

வீங்கிய காலுடன் தினமும் சித்தாள் வேலைக்குப் போவேன். எங்கூட வேலை செய்யுற பொம்பள ஆளுங்க ’இந்தக் கால வச்சிக்கிட்டு எப்படி வேலை செய்யுற’ன்னு கேப்பாங்க. வலி இல்லன்னாலும் காலுல கல்லத் தூக்கி வச்ச மாதிரி இருக்கும்.

வீங்கிய கால்கள்; குடும்பத்தைக் காக்க 26 வருட பயணம்; சிகிச்சைக்கு பணமின்றித் தவிக்கும் முத்துமாரி!

வீங்கிய காலுடன் தினமும் சித்தாள் வேலைக்குப் போவேன். எங்கூட வேலை செய்யுற பொம்பள ஆளுங்க ’இந்தக் கால வச்சிக்கிட்டு எப்படி வேலை செய்யுற’ன்னு கேப்பாங்க. வலி இல்லன்னாலும் காலுல கல்லத் தூக்கி வச்ச மாதிரி இருக்கும்.

Published:Updated:
மகள் மற்றும் கணவருடன் முத்துமாரி

பேராவூரணியைச் சேர்ந்த குடும்பத் தலைவியான பெண் ஒருவர் கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்த நிலையில், அந்தப் பெண் இரண்டு கால்களும் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மகள்கள் மற்றும் கணவரைக் காப்பதற்காக 26 ஆண்டுகளாக வீங்கிய காலுடன் பயணித்தவர் இருபது நாள்களாக நடக்க முடியாமல், எழுந்து நிற்க முடியாமல் தவழ்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு முடங்கிவிட்டார். ”நான் எழுந்தால் என் குடும்பம் நிமிரும். என் சிகிச்சைக்கு யாராவது உதவி செய்வார்களா..?” என அந்தப் பெண் கண்ணீர் சிந்துவது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யானை கால் நோயால் பாதிக்கப்பட்ட முத்துமாரி குடும்பத்தினருடன்
யானை கால் நோயால் பாதிக்கப்பட்ட முத்துமாரி குடும்பத்தினருடன்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, சேது சாலையில் வசிப்பவர் முத்துமாரி (45) கூலி வேலை செய்து வந்தார் இவரின் கணவர் முருகேசன் (50). இவர்களுக்கு நான்கு மகள்கள். மூன்று மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. கடைசி மகள் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசனின் இரண்டு கால்களும் முட்டிக்குக் கீழே வளைந்த நிலையில் பலவீனமாக இருப்பதால், கடினமான எந்த வேலையும் அவரால் செய்ய முடியாத நிலை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முத்துமாரி சித்தாள் வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் குடும்பம் நடத்திவந்தார். தன் மகள்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கைக்கு வந்த சம்பளத்தில் செலவு போக, கொசுறு பணத்தைச் சேர்த்து வைத்து அதன் மூலம் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், தன் கணவனையும் கவனித்து அந்தக் குடும்பத்திற்கு தாயும் தந்தையுமாக இருந்துவந்துள்ளார்.

கால்கள் பாதிக்கப்பட்ட பெண்
கால்கள் பாதிக்கப்பட்ட பெண்

இந்நிலையில் ஏற்கெனவே யானைக்கால் நோயால் பாதிக்கப்படிருந்த முத்துமாரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடக்க முடியாத நிலை ஏற்பட, சின்ன வாடகை வீட்டுக்குள் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். குடும்பத்தின் தலைமகளாக இருந்து வேலை பார்த்து தன்னையும் தன் மகள், கணவர் ஆகியோரையும் கவனித்து வந்த முத்துமாரி முடங்கியதால் அடுத்த வேலைக்கு உணவில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டீ குடிக்கக்கூட காசில்லாமல் அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் கையை ப்பிசைந்து நின்றுள்ளனர் முருகேசனும்,கடைசி மகளும். இந்நிலையில், ஏற்பட்ட வலியைத் தாங்க முடியாமல் கதறிய முத்துமாரியை பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிசைச்சாகச் சேர்த்துள்ளனர். அவரிடம் டாக்டர்கள், ’உங்க கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கு. இந்தப் பிரச்னைக்கு இங்குள்ள வசதிய வச்சு குணமாக்க முடியாது. நீங்க தஞ்சாவூர் போய்ப் பார்க்கணும்’ என்று கூறியுள்ளனர்.

”என் கணவருக்கு விவரம் தெரியாது, நான் படுத்துட்டதால வேலைக்கும் போகல. கையில பைசா காசில்லாமல் மூன்று பேரும் கெடக்கிறோம். எங்களால தஞ்சாவூர் போயி பார்க்க முடியாதுய்யா” கலங்கிய முத்துமாரியைத் தேற்றுவதற்கு டாக்டர்களிடம் பதில் இல்லை. கால் சரியானால் மட்டுமே முத்துமாரியும் அவரது குடும்பமும் நிமிர்ந்து நிற்கும் நிலை உண்டாகும். ஆனால் அதற்கான வழி இருப்பதாகத் தெரியவில்லை.

இதுகுறித்து முத்துமாரியிடம் பேசினோம். ”என்னோட கால்கள் 26 வருஷத்துக்கு முன்னாடி லேசா வீக்கமா இருந்துச்சு. டாக்டர்கிட்ட காட்டினேன். வலி இருக்குதான்னு கேட்டாங்க. இல்லைன்னு சொன்னேன். சரி, பிரச்னை எதுவும் இல்ல, வலி இருந்தா மட்டும் வாங்கன்னு சொல்லிட்டாங்க. கணவருக்கும் காலில் பிரச்னை. இப்ப எனக்கும் வந்துட்டதேன்னு நொந்துகொண்ட நான் அதைப் பெரிசுபடுத்தாம வேலைக்குப் போனேன்.

பேராவூரணி
பேராவூரணி

வீங்கிய காலுடன் தினமும் சித்தாள் வேலைக்குப் போவேன். எங்கூட வேலை செய்யுற பொம்பள ஆளுங்க ’இந்தக் கால வச்சிக்கிட்டு எப்படி வேலை செய்யுற’ன்னு கேப்பாங்க. வலி இல்லன்னாலும் காலுல கல்லத் தூக்கி வச்ச மாதிரி இருக்கும். எப்படா உட்காரலாமுன்னு தோணு.ம் ஆனாலும் மகள்கள் முகம் முன்னாடி வந்து நிக்க, வேலைக்குப் போயிட்டே இருந்தேன்.

அதுல வந்த வருமானத்துல மூன்று மகள்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சேன். கடைசி மகளையும் படிக்க வச்சேன். வருமானம் குறைஞ்சிருந்தாலும் மனசுக்கு எந்தக் குறையும் இல்லாம வாழ்க்கை மகிழ்ச்சியா போயிட்டிருந்தது. இப்ப சில மாதமா கால் பெருசா வீங்க ஆரம்பிச்சதுடன் வலிக்கவும் செஞ்சது. நானும் வலிக்காக மாத்திரை வாங்கிப் போட்டும் ரோதண தீரல. கடைசி மகளையும், கணவரையும் பற்றிய கவலையோடு அதைத் தாங்கிக்கிட்டு வேலைக்குப் போன எனக்கு, கடந்த ஒரு மாசமா எடுத்த அடி வைக்க முடியல.

மகள் மற்றும் கணவருடன் முத்துமாரி
மகள் மற்றும் கணவருடன் முத்துமாரி

எழுந்து நிற்கவும் முடியல. கால் பெருசா வீங்கிவிட்டது. இருபது நாளா வெளியே நடமாடவே முடியாம வீட்டுக்குள்ள முடங்கிட்டேன். நான் வேலைக்குப் போனாதான் வீட்டுல அடுப்பெரியும். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. அந்தக் கவலையிலேயே இருந்த எனக்கு கால்கள் கடுமையா வலிச்சது. தாங்க முடியாத என்னை கணவர் அரசு மருத்துவமனைக்கு அழைச்சிக்கிட்டுப் போக, அங்க பெட்ல இருக்க வச்சு மாத்திரை தர்றாங்க.

ஆனா, என்னோட வலி கொஞ்சங்கூட நிக்கல. மாத்திரை போட்டதுல வயிறு புண்ணா இருக்கு. பச்சத்தண்ணி குடிச்சாலே வயிறு வலிக்குது. தஞ்சாவூர் போனாத்தான் கால் சரியாகுமான்னு தெரியும்னு டாக்டர் சொல்றாங்க. தஞ்சாவூர் போறதுக்கு பஸ்ஸுக்குக்கூட காசில்லாத நிலையில ரெண்டு மாசம் அங்க இருந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருக்கும்ங்கிறாங்க. கைச்செலவுக்கு சுத்தமா காசில்லை. காலும் சரியாகணும் நான் எழுந்து நடந்தா என் குடும்பம் எழுந்து நிற்கும். யாராவது உதவி செஞ்சா என் கால்கள் சரியாகும்னு நம்பிக்கையா காத்திருக்கேன்” எனக் கண்கலங்குகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism