அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் வாசகிகளிடம் சில கேள்விகள் கேட்டிருந்தோம். பலரும் ஆர்வத்துடன் தங்கள் பதில்களை கமென்ட்களாகப் பதிவு செய்திருந்தனர். எலுமிச்சை பற்றி வாசகிகளிடமிருந்து வந்த சிறந்த கமென்ட்கள் இங்கே...
Manju
பாதுஷா, குலாப் ஜாமூன் போன்றவற்றுக்குத் தயாரிக்கும் சர்க்கரைப்பாகு ஆறியதும் இறுகி, இனிப்பின் மீது பூத்துப்போய் படராமல் இருக்க, பாகில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
Shanti Vijeyapall
ஒரு பெரிய எலுமிச்சையில் சாறு எடுத்து, 200 மில்லி தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் இரண்டு, தட்டிய இரண்டு பூண்டு பற்கள் சேர்த்து ஒரு கொதிவரும்போது பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும். கடாயில் நெய் சூடானவுடன் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து ரசத்துடன் கலக்க பசியை, ஜீரணத்தைத் தூண்டும்லெமன் இஞ்சி சூப் (ரசம்) ரெடி!

Janani Raghunath
ஒரு துண்டு எலுமிச்சையை, தூங்கும் போது அருகில் வைத்துக்கொண்டால் அதிலிருந்து வரும் நறுமணம், பூச்சிகள் நம்மை அண்டாமல் தடுக்கும். இரவு முழுவதும் எலுமிச்சையின் மணத்தை சுவாசிப்பதால் மறுநாள் காலை உடல் புத்துணர்வுடனும் ஆற்றலுடனும் இருப்பதை உணரலாம்.
Sri Vidya
காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் அரை மூடி எலுமிச்சை, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரைவதுடன் மேனி பளபளப்பும் நாள் முழுக்கப் புத்துணர்வும் கிடைக்கும்.
RadhikaRavindrran
வாழைக்காயை தோல் சீவியபின் சிறிது எலுமிச்சைச்சாற்றைத் தடவி விட்டு சிப்ஸுக்குத் தேய்த்தால், சிப்ஸ் சிவந்து போகாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
Infaa Alocious
ஃப்ரிட்ஜில் ஐஸ்க்யூப் ட்ரேயில் தண்ணீர் ஊற்றி வைக்கும்போது அதில் எலுமிச்சைச்சாற்றைப் பிழிந்து, அந்த ஐஸ் க்யூப்களால் முகத்துக்கு மசாஜ் செய்துவர... பருக்கள் இல்லாத பளிச் சருமம் கிடைக்கும்.