Published:Updated:

இந்தியா டர்ன்ஸ் பிங்க்... மார்பகப் புற்றுநோயால் யாருமே உயிரிழக்கக்கூடாது!

இந்தியா டர்ன்ஸ் பிங்க்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா டர்ன்ஸ் பிங்க்

அனைவரும் அறிவோம்

பெண்களுக்கான புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி உலகம் முழுவதும் 1,62,468 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 87,090 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். இந்த நோய்க்கான காரணம் என்ன, வரும் முன் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, 18 வயது நிரம்பிய பெண்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், அறியாமை மற்றும் அலட்சியம் காரணமாகவே மார்பகப் புற்றுநோயால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.

 ஆனந்தகுமார், ரௌனக், சரண்யா
ஆனந்தகுமார், ரௌனக், சரண்யா

மார்பகப் புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது, ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ அமைப்பு. இதுகுறித்து அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆனந்தகுமாரிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
மார்பகப் புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது, ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ அமைப்பு.

“மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு, ‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’, ‘ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’ மற்றும் ‘கல்யணமயி’ உறுப்பினர்கள் இணைந்து அக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். இந்த நோய் குறித்த ஆலோசனைகள் தேவைப்படுவோர் எங்களை அணுகலாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான மருத்துவ உதவிகள் மற்றும் அவர்களுக்கான மாத்திரை, மருந்துகள் வழங்கவும் தயாராக உள்ளோம்” என்றார் ஆனந்தகுமார்.

‘இந்தியா டர்ன்ஸ் பிங்க்’ அமைப்பின் செயலாளர் ரௌனக் பேசும்போது, “ஆரம்பத்தில் இந்த அமைப்பு புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டது. பின்னர் 2010-ம் ஆண்டு, மார்பகப் புற்றுநோய் அதிகரித்துவரும் சூழலை அடுத்து, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்படி ‘யுவர் சிட்டி டர்ன்ஸ் பிங்க்’ என்ற கான்செப்ட்டில் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களுடைய அமைப்பில் பிராண்டு அம்பாஸிடராக நடிகை ஹன்சிகா மோத்வானி செயல்படுகிறார். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, கல்லூரி மாணவிகளிடம் பிரசாரம் செய்தோம். `மார்பகப் புற்றுநோயால் யாருமே உயிரிழக்கக்கூடாது. அது வரும் முன் காப்போம்' என்கிற புரிந்துணர்வை எல்லோருக்கும் ஏற்படுத்த முயன்று வருகிறோம். `பிரெஸ்ட் கேன்சர் இந்தியா 2030’ என்ற முயற்சியை முன்னெடுத் துள்ளோம். இதன் மூலம் பெண்கள் எவ்வாறு மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், எப்படி அதைக் கண்டறிவது என்பது குறித்த பயிற்சியை அளிக்கிறோம்.

பல துறைகளில் சிறந்த பெண்மணிகளாக விளங்குவோரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு `பிங்க் தூதர்’ என்கிற பட்டத்தை வழங்குகிறோம். அவர்களுடைய உதவியோடு, அவர்களைச் சுற்றியுள்ள அக்கம் பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

துறை சார்ந்த மருத்துவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். மார்பக சுயபரிசோதனை (Breast self-examination) எப்படிச் செய்துகொள்வது என்பது பற்றிய விளக்கத்தை எங்களுடைய indiaturnspink.org இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறோம்” என்றார்.

இந்தியா டர்ன்ஸ் பிங்க்
இந்தியா டர்ன்ஸ் பிங்க்

‘ஐந்து ரூபாய் டாக்டரான’ மருத்துவர் ஜெயச்சந்திரனின் மகள் சரண்யா, இந்த அமைப்பு நடத்திய மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்றார். ‘`பருமனானவர்கள், `ஓசிபி’ (Oral contraceptive pill) பயன்படுத்து வோர், மாதவிடாய் நின்றுபோன பெண்கள் வருடத்துக்கு ஒருமுறை மார்பகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். தன் தாய், பாட்டிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்த மரபு உள்ளவர்கள், வருடந்தோறும் `அல்ட்ரா சவுண்டு மேமோகிராம், 40 வயதுக்கு மேலிருந்து `எக்ஸ்ரே மேமோ கிராம் பரிசோதனைகளைச் செய்துகொள்வது அவசியம்’’ என்றார் சரண்யா.

விழிப்புணர்வைப் பரப்புவோம்!