என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 8 - அம்மாவா புரொமோஷன் வாங்கிட்டீங்களா?

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
News
செக் ஃப்ரம் ஹோம்

தகவல்: சரண்யா.எஸ், மகப்பேறு மருத்துவர், கோவை.

தான் அம்மாவாகும் தருணம் உறுதி செய்யப் படும்போது ஒரு பெண் அடையும் பரவசத்தை வார்த்தை களால் அளவிட முடியாது. கருத்தரித்திருப்பதை உறுதி செய்துகொள்வதற்கான ஆலோசனைகள் இங்கே...

சரண்யா.எஸ்
சரண்யா.எஸ்

மாதவிடாய் தள்ளிப்போதல்!

கர்ப்பத்தைக் கண்டறிவதற்கான முதல் வழி மாதவிடாய் தள்ளிப்போவதுதான். சிலருக்கு 25 நாள்கள் சுழற்சி இருக்கலாம். சிலருக்கு 35 நாள்கள் சுழற்சி இருக்கலாம். அவரவர் சுழற்சி யிலிருந்து தள்ளிப்போவதைக் கணக்கிட வேண்டும். மாதவிடாய் சுழற்சி இயல்பாக இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட நாளில் மாத விடாய் வரவில்லை என்றால் கர்ப்பத்தைப் பற்றிதான் முதலில் சிந்திக்க வேண்டும்.

அறிகுறிகள்

கர்ப்ப காலத்துக்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் உடலின் வெப்பநிலை அரை அல்லது ஒரு டிகிரி அதிகரித்து, காய்ச்சல் உண்டானது போன்ற உணர்வு ஏற்படும். மார் பகங்களில் வலி அல்லது கனமான உணர்வு, வாந்தி உணர்வு, சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிவயிற்றில் தசைப்பிடிப்பு ஆகியவை ஏற்படலாம். சீரற்ற மாதவிடாய் சுழற்சி இருப்பவர்கள் இந்த அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். சீரான சுழற்சி இருப்பவர்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவதுடன் இந்த அறிகுறிகளும் தோன்றலாம்.

செக் ஃப்ரம் ஹோம் - 8 - அம்மாவா புரொமோஷன் வாங்கிட்டீங்களா?

சுய பரிசோதனை!

* மருந்துக்கடைகளில் கர்ப்பத்தை உறுதி செய்வதற்கான ‘பிரக்னென்சி கிட்’டை வாங்கிப் பரிசோதிக்கலாம்.

* கிட்டில் ஒரு பிளாஸ்டிக் பட்டை காணப்படும். அதில் சிறுநீரைச் செலுத்தும் இடத்தில் 2 முதல் 3 சொட்டுகள் விட வேண்டும்.

* பட்டையில் C, T என்று குறிப்பிடப்பட்டிருக் கும். ‘C’ என்றால் கன்ட்ரோல், ‘T’என்றால் டெஸ்ட் என்று பொருள்.

* சிறுநீர் உள்ளே சென்றதும் ‘C’ என்று குறிப் பிடப்பட்டிருக்கும் இடத்தில் அடர் நிறத்தில் ஒரு கோடு விழ வேண்டும். அப்போதுதான் அந்த கிட் சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். கோடு விழவில்லை என்றால் கிட் பழுது. அதில் பரிசோதனை செய்யக் கூடாது.

* `T’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் அடர் பிங்க் நிறத்தில் இரண்டு கோடுகள் விழுந்தால் கர்ப்பம் தரித்திருப்பது உறுதி. ஒரு கோடு மட்டும் விழுந்தால் கருத்தரிக்க வில்லை என்று அர்த்தம்.

பரிசோதனையில் கவனம்!

சரியான முடிவு கிடைக்க மாதவிடாய் தள்ளிப்போன 5 நாள்கள் கழித்துப் பரிசோதிக்க லாம். சிறுநீரை அந்தப் பட்டையில் செலுத்தி 10 நிமிடங்கள் காத்திருந்து ரிசல்டை பார்க்க வேண்டும். உடனடியாகப் பரிசோதித்தால் தவறான முடிவைக் காட்டக்கூடும். ஆரம்ப நிலை கர்ப்பத்தில் சிலருக்கு கர்ப்ப காலத் துக்கான ஹார்மோன் சுரப்பு குறைவாக இருந்தால் மெலிதான இரட்டைக் கோடுகள் விழும். அப்படிப்பட்டவர்கள் இரண்டு நாள்கள் கழித்து மறுபரிசோதனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகும் மெலிதான கோடு விழுந்தால் தாமதிக்காமல் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

நெகட்டிவ்வில் பாசிட்டிவ்!

இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்திருக்கும் சிலருக்கு சில நேரங்களில் ஹார்மோன் சுரப்பு அளவுக்கு அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஹார்மோன் சுரப்பு அதிகரித்தால் சிறுநீர்ப் பரிசோதனையில் சரியான முடிவைக் காட்டாது. சிறுநீர்ப் பரிசோதனையில் நெகட்டிவ் என்றாலும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

ஃபால்ஸ் பிரக்னென்சி!

குழந்தைக்காக பல நாள்களாகத் திட்டமிடுபவர்களுக்கு சில நேரம் தாங்கள் கருத்தரித்துவிட்டது போலவும், வயிறு பெரிதாவது போலவும் தோன்றும். குழந்தை வேண்டும் என்ற மன அழுத்தத்தினால் மாதவிடாய் தள்ளிப் போய்விடும். பரிசோதித்தால் நெகட்டிவ் என்று வந்துவிடும். இதை `ஃபால்ஸ் பிரக்னென்சி' (False Pregnancy) என்பார்கள். இரட்டை கர்ப்பமா, ஃபால்ஸ் பிரக்னென்சியா அல்லது ஆரம்பநிலை கருத்தரிப்பா என்பதை ரத்தப் பரிசோதனையில் அறியலாம்.

எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, வலிப்பு உள்ளிட்ட நோய்களுக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், ஏற்கெனவே கருச் சிதைவு ஏற்பட்டவர்கள், 35 வயதுக்கு மேல் கருத்தரித்தவர்கள் ஆகியோர் கர்ப்பம் உறுதி யானதும் மருத்துவரை அணுக வேண்டும். வயிற் றில் தசைப்பிடிப்பு அதிகமாக இருந்தாலும், ரத்தக் கசிவு, மயக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமானவர்கள் கருத்தரித்த 45 முதல் 50 நாள்களுக்குள் மருத்துவரை அணுகலாம்.