Published:Updated:

தாய்மை ஒரு வரம்

தாய்மை ஒரு வரம்
பிரீமியம் ஸ்டோரி
தாய்மை ஒரு வரம்

மூன்றாவது கண்

தாய்மை ஒரு வரம்

மூன்றாவது கண்

Published:Updated:
தாய்மை ஒரு வரம்
பிரீமியம் ஸ்டோரி
தாய்மை ஒரு வரம்
தன்னோட உடலைப் பத்தியோ, வலியைப் பத்தியோ கவலைப்படாமல், சந்தோஷமாகவும் பெருமையாகவும்தான் ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தையைச் சுமக்குறாங்க. என்னைப் பொறுத்தவரை தாய்மைங்கிறது கொண்டாடப்பட வேண்டிய வரம்’’ - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் சாரதா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமண புகைப்படக் கலைஞரான சாரதா, பிரசவத்தின்போது தன் குழந்தையை இழந்தவர். பத்துமாத கனவு கலைந்தபோது, வீட்டில் முடங்காமல் ஐந்தாம் நாளே கேமராவை கையில் எடுத்து, தன்னைத் தானே மீட்டெடுத்தவர். தன் குழந்தைக்காக அவர் தேர்வு செய்துவைத்திருந்த ‘அஹானா’ என்ற பெயரில், ‘அஹானா போட்டோகிராபி’ ஆரம்பித்து, குழந்தைகளுக்கான புகைப்படக்கலைஞராக உருவெடுத்தார். சமூக வலைதளங்களில் மகப்பேறு, தாய்ப்பாலின் அவசியம் போன்றவை குறித்து அடிக்கடி வீடியோ பகிர்ந்து வரும் சாரதா, தாய்ப்பால் வாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமீபத்தில் அவர் எடுத்த போட்டோ ஷூட் ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாரதாவிடம் பேசினோம்...

தாய்மை ஒரு வரம்

“தாய்மை ரொம்ப அழகானது. தாய்மை அடைஞ்ச ஒவ்வொரு பெண்ணும், உடலாலும் மனதாலும் நிறைய மாற்றங்களைக் கடந்து வந்திருப்பாங்க. என் குழந்தையை, கருவில் உறுதிசெய்த நாளிலிருந்தே மகப்பேறு குறித்த நிறைய விஷயங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பிச்சேன். என்னுடைய ஒவ்வொரு நிமிஷமும் அவளுக்கானதாக மாறியிருந்தது. நிறைய கற்பனைகள்... பிரசவத்துக்கு

20 நாள்கள் இருந்தபோது, குழந்தையோட எந்த அசைவையும் என்னால் உணர முடியல. அவசரமா மருத்துவமனைக்குப் போனோம். பாப்பா இறந்துருச்சுன்னு சொன்னாங்க.

இறந்த குழந்தையைப் பிரசவிச்ச கஷ்டமெல்லாம் எந்தத் தாய்க்கும் வரக்கூடாது” - குரல் தழுதழுக்க அமைதியாகிறார் சாரதா.

சாரதா
சாரதா

``எல்லாம் முடிஞ்சு ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்தும்கூட என்னால் இயல்பா இருக்க முடியல. அழுது அழுது உடம்பிலிருந்த சக்தியையெல்லாம் இழந்திருந்தேன். பால்கட்டு ஒருபுறம், உடல் எடை அதிகரிப்பு, வலி மறுபுறம். இதையெல்லாம்விட, குழந்தை என்னுடன் இல்லை என்பதை என்னால் ஏத்துக்கவே முடியல. யாரையும் பார்க்கப் பிடிக்காம வீட்டுக்குள்ளேயே முடங்கினேன். என் மகள் சிரிக்கிற சத்தமும் அழும் சத்தமும் என்னைச் சுத்தி கேட்டுக்கிட்டே இருந்துச்சு, பதறி எழுந்திருந்து குழந்தையைத் தேடுவேன். இப்படியே விட்டா என்னை இழந்துருவோமோங்கிற பயத்தில் என் குடும்பத்தில் ஒவ்வொருத்தரும் என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. என் குடும்பத்துக்காக நான் மீண்டு வரணும்னு நினைச்சேன். மனதளவில் தயார்படுத்திக்கிட்டு, பிரசவம் முடிஞ்ச அஞ்சாவது நாள் கேமராவை கையில் எடுத்தேன். குழந்தையை இழந்த, என்னைப் போன்ற அம்மாக்களின் வலி, வேதனைகளை சமூக வலைதளங்களில் பேச ஆரம்பிச்சேன். அதோட தொடர்ச்சியா நிறைய விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டேன்’’ என்ற சாரதா அதன் ஒரு பகுதியான போட்டோ ஷூட் பற்றி பேசினார்...

தாய்மை ஒரு வரம்

“மகப்பேறு மாதிரி தாய்ப்பாலும் ஒரு வரம்தான். இன்னும் சொல்லணும்னா தாய்ப்பால் குழந்தைகளின் உரிமை. ஆனா, அது பற்றிய முழுமையான புரிந்துணர்வு சில பெண்களுக்கு இல்லை. பால் கொடுத்தா அழகு குறைஞ்சிடும்னு நினைக்கிறாங்க. இன்னும் சில பெண்கள் தன் குழந்தைக்குப் போக மீதியுள்ள பாலை வீணாக்குறாங்க. வீணாகும் பாலை பால் சேகரிப்பு மையங்களில் கொடுத்தா, நிச்சயம் அது இன்னொரு குழந்தைக்குப் போய்ச்சேரும் என்பதை ஏத்துக்க நிறைய தயக்கங்கள் இருக்கு. அதுக்கான விழிப்புணர்வுதான் இந்த போட்டோ ஷூட். தெய்வம் குழந்தைக்குப் பாலூட்டுறது போன்ற ஒரு கான்செப்ட். அதாவது, பால் கொடுக்கும் ஒவ்வோர் அம்மாவும், தன் குழந்தைக்கு தெய்வம்தான் என்ற கருத்தை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க நினைச்சேன். ஒரு மாடலை வெச்சு ஷூட் பண்ணாமல், மகப்பேறு அடைஞ்ச ஒரு தாயை வெச்சு பண்ணாதான் படத்தில் உயிரோட்டம் இருக்கும்னு நினைச்சேன்.

போட்டோ ஷூட்டுக்காக நிறைய பெண்கள்கிட்ட பேசினேன். நிறைய மாசங்கள் காத்திருந்தேன். கடைசியா ஒருத்தர் சம்மதிச்சாங்க. பேக்ரவுண்ட், அவங்க உட்கார்ந்திருக்கும் தாமரை, லைட்டிங்னு நிறைய மெனக்கெட்டேன். பிரசவம் அடைஞ்ச ஒரு பெண்ணோட தோற்றத்தை அப்படியே இயல்பாகக் காட்டினதுக்காக நிறைய பேர் பாராட்டினாங்க. தாய்மை பெற்று கொள்வதில் மட்டும் இல்லை, பற்றுகொள்வதிலும்தான் இருக்கு” என்று விடை கொடுத்தார் சாரதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism