Published:Updated:

"பெண்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டியதில்லை; ஒரு கப் காபி போதும்!" - டி.ஐ.ஜி பவானீஸ்வரி #NoMoreStress

Stress ( pixabay.com )

"காவல்துறையினரின் சிரமங்களை அவர்களது குடும்பத்தினர் புரிந்துகொண்டு நடந்தால்தான் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். ஆண் காவலர், பெண் காவலர் என்ற பாகுபாடு பார்க்காமல் அவர்களது உழைப்பை மதிப்பதுடன் அவர்களது உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்."

"பெண்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டியதில்லை; ஒரு கப் காபி போதும்!" - டி.ஐ.ஜி பவானீஸ்வரி #NoMoreStress

"காவல்துறையினரின் சிரமங்களை அவர்களது குடும்பத்தினர் புரிந்துகொண்டு நடந்தால்தான் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். ஆண் காவலர், பெண் காவலர் என்ற பாகுபாடு பார்க்காமல் அவர்களது உழைப்பை மதிப்பதுடன் அவர்களது உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும்."

Published:Updated:
Stress ( pixabay.com )

மன அழுத்தம்... அனைத்துத் தரப்பினரும் உச்சரிக்கும் பொது வார்த்தையாகிவிட்டது. இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்களுக்கு மட்டுமே இருந்த மனஅழுத்தம் இப்போது அனைத்துத் தரப்பினரையும் பாதிப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். பணிச்சூழல் மற்றும் பல்வேறு காரணங்களால் ஐ.டி ஊழியர்கள்தான் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்கிற கருத்து பரவலாக உண்டு.

Stress
Stress
pixabay.com

ஆனால், வேலைப்பளு அதிகம் உள்ள காவல்துறையினரையும் மனஅழுத்தம் பாதிக்கிறது. பாதுகாப்புப் பணிக்காக பல மணி நேரம் ஒரே இடத்தில் நிற்பது, வார விடுமுறை இல்லாதது எனப் பிரச்னைகள் அதிகம். குறிப்பாக, அதில் பணியாற்றும் பெண்களுக்குக் கூடுதல் சிரமங்கள் ஏற்படுவதுண்டு. காவல்துறையினர் மனஅழுத்தத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்? கடலோரப் பாதுகாப்புப் படையின் டி.ஐ.ஜி. கே.பவானீஸ்வரி ஐ.பி.எஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"காவல்துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் எங்களுக்குச் சவால் நிறைந்ததாகவே இருக்கும். காவல்துறையில் சிறப்புப் பிரிவு, குற்றப் பிரிவு, சட்டம் - ஒழுங்கு எனப் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. பிற துறைகளைக் காட்டிலும், எங்களுக்குச் சிரமங்கள் சற்று அதிகம். குடிநீர் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்குவார்கள்.

Stress
Stress
pixabay.com

தண்ணீர் வராததற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இருக்காது. ஆனால், நாங்கள் களத்தில் இறங்கிப் பேச வேண்டியிருக்கும். அப்போது சம்பந்தப்பட்ட துறை மீது எதிர்ப்பு வராது. பேச்சுவார்த்தை நடத்தும் காவல்துறையின் மீதுதான் எதிர்ப்பு வரும். இதுபோன்று பல இடங்களில் நாங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஒவ்வொரு நாளும் சட்டம்-ஒழுங்கு, குற்றம் சார்ந்த பிரச்னைகளில் எதிர்மறையான விஷயங்களையே எதிர்கொள்வதால் எங்களுக்கும் சில நேரங்களில் மன அழுத்தம் வரத்தான் செய்யும். பிற துறைகளைக் காட்டிலும் சவாலான பணி எங்களுடையது, அதேபோல மன அழுத்தம் தரும் சம்பவங்களும் அதிகம். ஆனால், அதை எதிர்கொள்ளும் பக்குவம் எங்களுக்கு உண்டு. தொடர்ச்சியாகப் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது மன அழுத்தம் வந்தால், அதைச் சரிசெய்துகொள்ள வேண்டியிருக்கும்.

DIG Bavaneeswari IPS
DIG Bavaneeswari IPS

வேலைப்பளு என்பது எல்லா மட்டங்களிலும் உள்ள அனைவருக்கும் இருக்கும். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது பல மணிநேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக வெளி உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கும். அதேபோல தங்குமிடத்தில் சரியான வசதிகள் இருக்காது. ஒரு வேலை முடிந்துவிட்டது நிம்மதியாகத் தூங்குவோம் என்று நினைக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து வேலைகள் இருக்கும். அதுபோன்ற சூழலில் கோபம், வெறுப்பு வரத்தான் செய்யும். எங்களுக்கும் எதிர்மறை உணர்வுகள் வரும். யாரிடமாவது கத்த வேண்டும் போல இருக்கும்; அதை வீட்டில்தான் எதிரொலிப்போம். நாங்களும் மனிதர்கள்தானே!

பெண் காவலர்கள் உள்ள குடும்பத்தினர் அவர்களது சிரமங்களைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். பெண் காவலர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியதும் அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கப் டீ அல்லது காபியாவது போட்டுக் கொடுங்கள்.
கடலோர பாதுகாப்புப் படையின் டி.ஐ.ஜி. கே.பவானீஸ்வரி ஐ.பி.எஸ்.
reading books
reading books
pixabay.com

எனக்கும் மனஅழுத்தம் ஏற்படுவதுண்டு. அந்த மாதிரி நேரத்தில் நெருக்கமான நண்பர்களிடம் பேசி, சரிசெய்துகொள்வேன். அதுபோல விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி என ஏதோ ஒன்றில் ஈடுபடுவேன். மன அழுத்தத்தை விரட்டியடிக்க என் குடும்பத்தோடு சினிமாவுக்குப் போவேன். சில நேரங்களில் சிறு தூக்கம், புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை போன்றவைகூட அதற்குத் தீர்வாக அமையும். இதையெல்லாம் ஒவ்வொருவரும் அவரவர் சூழல், ரசனைக்கேற்ப தேர்ந்தெடுக்கும்போது மன அழுத்தத்தை விரட்டியடிக்கலாம்.

காவல்துறையில் பணியாற்றுவது கடினமான பணி. அதிலும் குறிப்பாக பெண்கள் பணிபுரிவது என்பது இன்னும் சவாலானது. நம் சமூகத்தில் சில வேலைகளைப் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பெண் காவலர்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்குப்போய் அவர்கள்தான் பல நேரங்களில் சமைக்க வேண்டியிருக்கிறது.

Stress
Stress
pixabay.com

டீ குடிக்க வேண்டுமானால்கூட அவர்தான் அடுப்பு பற்றவைத்து டீ தயாரிக்க வேண்டியிருக்கும். அதுவே, ஒரு ஆண் காவலராக இருந்தால் அவர் வீட்டுக்குப் போனதும் மனைவி டீ போட்டுத் தருவார். சற்று இளைப்பாறிக்கொள்ளலாம். ஆகவே, பெண் காவலர்கள் உள்ள குடும்பத்தினர் அவர்களது சிரமங்களைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். பெண் காவலர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியதும் அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கப் டீ அல்லது காபியாவது போட்டுக் கொடுங்கள்.

காவல்துறையினரின் சிரமங்களை அவர்களது குடும்பத்தினர் புரிந்துகொண்டு நடந்தால்தான் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். ஆண் காவலர், பெண் காவலர் என்ற பாகுபாடு பார்க்காமல் அவர்களது உழைப்பை மதிப்பதுடன் அவர்களது உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்து நடப்பதால்தான் எங்களால் காவல்பணியைச் சிறப்பாகச் செய்ய முடிகிறது” என்கிறார் கே.பவானீஸ்வரி ஐ.பி.எஸ்.