Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

மாத்திரை

உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக்கூடாது என்பது உண்மைதான்.

Published:Updated:

Doctor Vikatan: கர்ப்பமாக இருக்கும்போது தைராய்டு மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கலாமா?

உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக்கூடாது என்பது உண்மைதான்.

மாத்திரை

Doctor Vikatan: திருமணமாவதற்கு முன்புதான் எனக்கு தைராய்டு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மருத்துவரைச் சந்தித்து தைராய்டுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது கர்ப்பமாகி இருப்பதால், அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கலாமா என குழப்பமாக இருக்கிறது. கர்ப்பகாலத்தில் எந்த மருந்தும் எடுக்கக் கூடாது என்கிறார்களே... உண்மையா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

 மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

உங்களைப் போல பலருக்கும் உள்ள சந்தேகம்தான் இது. கர்ப்ப காலத்தில் சில மருந்துகளை எடுக்கக் கூடாது என்பது உண்மைதான். ஆனால், தைராய்டு மருந்துகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது. கருவிலுள்ள குழந்தையின் தைராய்டு சுரப்பியானது முதல் மூன்று மாதங்களில் வளர்ச்சி பெற்றிருக்காது.

எனவே குழந்தை, தாயின் தைராய்டு சுரப்பியைச் சார்ந்தே இருக்கும். அந்த நிலையில் உங்களுடைய தைராய்டு அளவு குறைவாக இருந்தால் குழந்தைக்குப் போகும் தைராய்டு அளவும் குறையும். அதன் விளைவாக குழந்தையின் வளர்ச்சியில் பிரச்னைகள் வரலாம். கில நேரம் கரு கலையவும் வாய்ப்பிருக்கிறது.

எனவே, உங்களுக்கு உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த தைராய்டு மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் மருத்துவரை மறுபடி சந்தித்து மருந்துகளின் அளவில் ஏதேனும் மாற்றம் தேவையா எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஹைப்பர் தைராய்டு
ஹைப்பர் தைராய்டு
Dr_Microbe

ஹைப்போ தைராய்டா, ஹைப்பர் தைராய்டா என்பதைப் பொறுத்து உங்களுக்கான மருந்துகள், அவற்றில் செய்ய வேண்டிய மாற்றங்கள், மாற்று மருந்துகள் என எல்லாவற்றையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். மருத்துவ ஆலோசனை யின்றி நீங்களாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.