Published:Updated:

Doctor Vikatan: எரிச்சல், மன அழுத்தம், தலைகீழாக மாறிப்போன தாம்பத்திய ஆர்வம் - தீர்வுகள் என்ன?

மன அழுத்தம்

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் மெனோபாஸுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியது இல்லை. மனநலத்தை பாதிக்கிற விஷயங்களுக்கு வேறு காரணங்களும் இருக்கலாம். உங்களுடைய மன அழுத்தத்துக்கு குடும்ப பிரச்னைகள் காரணமா என்றும் பாருங்கள்.

Doctor Vikatan: எரிச்சல், மன அழுத்தம், தலைகீழாக மாறிப்போன தாம்பத்திய ஆர்வம் - தீர்வுகள் என்ன?

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் மெனோபாஸுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியது இல்லை. மனநலத்தை பாதிக்கிற விஷயங்களுக்கு வேறு காரணங்களும் இருக்கலாம். உங்களுடைய மன அழுத்தத்துக்கு குடும்ப பிரச்னைகள் காரணமா என்றும் பாருங்கள்.

Published:Updated:
மன அழுத்தம்

என் வயது 56. இரண்டு வருடங்களாக எனக்கு பீரியட்ஸ் வருவது நின்றுவிட்டது. மெனோபாஸ் அறிகுறிகள் தொடர்கின்றன. பெரும்பாலான நேரம் நான் மன அழுத்தத்தில் இருப்பதை உணர்கிறேன். தாம்பத்திய உறவில் ஈடுபாடு அறவே இல்லாமல் போய்விட்டது. இதற்கு முன் சுமுகமாக இருந்த தாம்பத்திய உறவு திடீரென தலைகீழாக மாறிப்போனதால் கணவருக்கும் எனக்கும் பிரச்னைகள் வருகின்றன. இதற்கெல்லாம் தீர்வுகள் உண்டா?

ஹெப்ஸிபா கிருபாமணி
ஹெப்ஸிபா கிருபாமணி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தாம்பத்திய உறவு சுமுகமாக இல்லை என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் எந்த மாதிரியான பிரச்னைகளை உணர்கிறீர்கள் என்பது தெளிவாக இல்லை.

மெனோபாஸின் காரணமாக வெஜைனா பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அதனால் தாம்பத்திய உறவு முன்பு போல இல்லை என நினைக்கிறீர்களா... அல்லது வேறு ஏதேனும் உளவியல் ரீதியான பயம் காரணமாக அப்படி உணர்கிறீர்களா என்பதையெல்லாம் உங்களை நேரில் பார்த்து விசாரித்தால்தான் கண்டறிய முடியும்.

உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் மன அழுத்தத்தை நினைத்து பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. அதையும் தாம்பத்திய உறவு பிரச்னையையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை.

woman in depression
woman in depression

உங்களுடைய மன அழுத்தத்துக்கு குடும்ப பிரச்னைகள் காரணமா என்றும் பாருங்கள். குழந்தைகளின் படிப்பு, குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் என உங்களையும் அறியாமல் ஒன்றுக்கும் மேலான விஷயங்கள் குறித்த கவலை இருக்கும்போது இப்படி ஏற்படலாம்.

உங்களுடைய பிரச்னை என்னவென்பதை நீங்கள்தான் தெளிவாகத் தெரிந்து, அதைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான செயல் உங்களை எரிச்சலுக் குள்ளாகிறது, மன அழுத்தத்துக்குள் தள்ளுகிறது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

ஒரு பிரச்னை குறித்து நீங்கள் மன அழுத்தம் கொள்வதால் அந்தப் பிரச்னைக்குத் தீர்வு வந்துவிடப்போவதில்லை. அந்தப் பிரச்னைக்கான தீர்வை யோசிப்பதுதான் சரியான விஷயமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் மெனோபாஸுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியதும் இல்லை. மனநலத்தை பாதிக்கிற விஷயங்களுக்கு வேறு காரணங்களும் இருக்கலாம். வயதாக ஆக நமக்கு பொறுப்புகளும் சுமைகளும் கூடும். சிறிய விஷயம்கூட பெரிதாகத் தெரியும். உங்களால் உங்கள் பிரச்னைகளைக் கையாள முடியாத சூழலில் அடுத்தவரிடம் உதவி கேட்கலாம்.

உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். அரிதாக சிலருக்கு வேண்டுமானால் மனநல மாத்திரைகள் தேவைப்படலாமே தவிர, பெரும்பாலான பெண்களுக்கு குடும்ப சூழல், அதில் உண்டாகும் பிரச்னைகளால்தான் மன அழுத்தம் வருகிறது.

Couple dispute (Representational Image)
Couple dispute (Representational Image)
Image by Jose R. Cabello from Pixabay

தியானம், பிடித்த பொழுதுபோக்கு, நண்பர்களுடன் உரையாடுவது என ஏதேனும் ஒரு விஷயத்தில் மனதைத் திசைத்திருப்பக் கற்றுக்கொள்வது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு இந்த அறிகுறிகள் எல்லாம் மெனோபாஸின் விளைவுகள்தான் என்று உறுதிபடுத்தினால், உங்கள் உடல்நலத்துக்கு ஏற்றுக்கொள்ளுமா என்று பார்த்துவிட்டு ஹார்மோன் தெரபியை பரிந்துரைப்பார்.