Published:Updated:

Doctor Vikatan: அதிக ப்ளீடிங் இல்லை... பீரியட்ஸ் நாள்களில் வலியால் துடிக்கும் மகள்... தீர்வு என்ன?

பீரியட்ஸ்

பூப்பெய்தியதிலிருந்தே, 45 நாள்களுக்கொரு முறையோ, 60 நாள்களுக்கொரு முறையோதான் பீரியட்ஸ் வரும். அதுதான் அவர்கள் பீரியட்ஸ் சுழற்சி என எடுத்துக்கொள்ள வேண்டும். பூப்பெய்திய இரண்டு வருடங்களில் அவர்களது கர்ப்பப்பை பக்குவமடைந்துவிடும் என்பதால் மெள்ள மெள்ள பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும்.

Doctor Vikatan: அதிக ப்ளீடிங் இல்லை... பீரியட்ஸ் நாள்களில் வலியால் துடிக்கும் மகள்... தீர்வு என்ன?

பூப்பெய்தியதிலிருந்தே, 45 நாள்களுக்கொரு முறையோ, 60 நாள்களுக்கொரு முறையோதான் பீரியட்ஸ் வரும். அதுதான் அவர்கள் பீரியட்ஸ் சுழற்சி என எடுத்துக்கொள்ள வேண்டும். பூப்பெய்திய இரண்டு வருடங்களில் அவர்களது கர்ப்பப்பை பக்குவமடைந்துவிடும் என்பதால் மெள்ள மெள்ள பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும்.

Published:Updated:
பீரியட்ஸ்

என மகளுக்கு 15 வயதாகிறது. அவள் வயதுக்கு வந்தது முதல், இன்றுவரை பீரியட்ஸ் சுழற்சி சரியாக இல்லை. 45 நாள்கள் முதல், 60 நாள்களுக்கொரு முறைதான் பீரியட்ஸ் வருகிறது. பீரியட்ஸ் நாள்களில் ப்ளீடிங் மிகக் குறைவாக இருக்கிறது. அதிகபட்சமாக இரண்டு நாப்கின்கள்தான் மாற்றுகிறாள். ஆனால் பீரியட்ஸ் நாள்களில் வயிறு மற்றும் இடுப்பு வலியால் துடிக்கிறாள். ப்ளீடிங் குறைவாக இருப்பது, வலியால் துடிப்பது, தாமதமாக பீரியட்ஸ் வருவதெல்லாம் ஏதேனும் பிரச்னையின் அறிகுறிகளா?

டாக்டர் கார்த்திகா
டாக்டர் கார்த்திகா

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும் லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர்.கார்த்திகா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து, முதல் இரண்டு வருடங்களுக்கு பீரியட்ஸ் முறை தவறி வந்தால் பிரச்னையில்லை. அதிக ப்ளீடிங் ஆகி, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப் படுவதுதான் ஆபத்து. அதற்குதான் உடனடி மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவை. மற்றபடி இர்ரெகுலர் பீரியட்ஸுக்கு எந்தச் சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

பூப்பெய்திய இரண்டு வருடங்களில் அவர்களது கர்ப்பப்பை பக்குவமடைந்துவிடும் என்பதால், மெள்ள மெள்ள பீரியட்ஸ் சுழற்சி முறைப்படும். ஆனால், சமீப காலங்களில் பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளிட்ட வளர்சிதை மாற்ற பிரச்னைகளை அதிகம் பார்க்கிறோம்.

மாதவிடாய்
மாதவிடாய்

இப்படிப்பட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு, பீரியட்ஸ் சுழற்சி முறையாக இருக்காது. பூப்பெய்தியதில் இருந்தே இவர்களுக்கு 45 நாள்களுக்கொரு முறையோ, 60 நாள்களுக்கொரு முறையோ தான் பீரியட்ஸ் வரும். அதுதான் அவர்களது பீரியட்ஸ் சுழற்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாத்திரைகள் கொடுத்தால் பீரியட்ஸ் ரெகுலராக வரும். ஆனால், மாத்திரைகள் தற்காலிகத் தீர்வுதான். ஹார்மோன் மாத்திரைகளான அவற்றைக் கொடுப்பதை நிறுத்திவிட்டால் மீண்டும் பீரியட்ஸ் சுழற்சிமுறை தவறும்.

உங்கள் மகள் விஷயத்தில், முதலில் அவரது உடல் எடை பார்க்கப்பட வேண்டும். வலி இருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதால் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்றும் டெஸ்ட் செய்ய வேண்டும். மருத்துவரை அணுகினால் அவர் ஸ்கேன் செய்யப் பரிந்துரைப்பார். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உறுதியானால், திருமணமாகி, குழந்தை பெற்றதும் அந்த வலி தானாகச் சரியாகிவிடும்.

சிலருக்கு கர்ப்பப்பை வாய் டைட்டாக இருக்கலாம். ப்ளீடிங் அதைத் தாண்டி வரும்போது வலி இருக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னை சரியாவதால், வலியும் குறையும் என்பதால்தான் அப்படிச் சொல்லப்படுகிறது.

ப்ளீடிங் குறைவாக இருப்பது குறித்துக் கவலை கொள்ளத் தேவையில்லை. எப்போதுமே அவருக்கு அப்படித்தான் இருக்கிறது என்றால் அதுதான் அவருக்கான பீரியட்ஸ் முறையாக இருக்கும்.

Stomach pain
Stomach pain
Pixabay

ஒருநாளைக்கு நான்கைந்து நாப்கின் மாற்றினால்தான் நார்மல் ப்ளீடிங் என்றெல்லாம் அர்த்தமில்லை. கர்ப்பப்பையின் உள் லேயர் உதிர்ந்து வெளியே வரும். அத்துடன் இன்னும் சிறிது ரத்தமும் வரும். அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். உங்கள் மகள் ஒருநாளைக்கு ஒரு நாப்கின்தான் உபயோகிக்கிறார் என்றாலும் அதுவும் பீரியட்ஸாகவே கணக்கெடுக்கப்படும்.

வலியால் துடிப்பதால் அவரை மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஸ்கேன் எடுத்துப் பார்த்து எண்டோமெட்ரியாசிஸ், பிசிஓடி பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துவிடுங்கள். பிரச்னைகள் இல்லாதபட்சத்தில் உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் சின்னச் சின்ன மாற்றங்களைப் பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.