Published:Updated:

Doctor Vikatan: கருத்தரித்தலை பாதிக்குமா நைட் ஷிஃப்ட் வேலை?

நைட் ஷிஃப்ட்

நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்ட்டிசால் அளவு உடலில் அதிகரிக்கும். அதனால் வீக்கம், எண்டோமெட்ரியாசிஸ் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவையும் குழந்தையின்மைக்குக் காரணமாகலாம்.

Doctor Vikatan: கருத்தரித்தலை பாதிக்குமா நைட் ஷிஃப்ட் வேலை?

நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்ட்டிசால் அளவு உடலில் அதிகரிக்கும். அதனால் வீக்கம், எண்டோமெட்ரியாசிஸ் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவையும் குழந்தையின்மைக்குக் காரணமாகலாம்.

Published:Updated:
நைட் ஷிஃப்ட்

என் வயது 32. திருமணமாகி 6 வருடங்களாகின்றன. இன்னும் குழந்தை இல்லை. நான் கடந்த பத்து வருடங்களாக நைட் ஷிஃப்ட் வேலையில் இருக்கிறேன். நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம் என்கிறார்களே... அது உண்மையா? நான் என்ன செய்ய வேண்டும்?

Pregnancy
Pregnancy


பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய சூழலில் பெண்கள் நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பது சகஜமாகிவிட்டது. நம் உடலின் எல்லா உறுப்புகளும் `சர்காடியன் ரிதம்' என்ற அடிப்படையில்தான் இயங்கும். அதாவது உயிரியல் கடிகாரம் என்பதன் அடிப்படையில், இயற்கையோடு இயைந்து செயல்படும்.

 மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

நம் உடலில் காலையில் சில ஹார்மோன்களும், இரவில் வேறு சில ஹார்மோன்களும் சுரக்கும். காலையில் சூரியன் உதிக்கும்போது தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கத் தோன்றவும், இரவில் இருட்டியதும் தூங்க நினைப்பதும் உயிரியல் கடிகார இயக்கத்தின் காரணமாக நடைபெறுபவைதான்.

இரவில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் உயிரியல் கடிகாரம் சரியாகச் செயல்பட பெரிதும் உதவுகிறது. இந்த உயிரியல் கடிகாரத்தைக் கட்டுப்படுத்துவது நம் மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியில் இருக்கும் `சுப்ராகியாஸ்மாட்டிக் நியூக்ளியஸ்' (Suprachiasmatic nucleus).

Stressed woman at workplace (Representational image)
Stressed woman at workplace (Representational image)
Pexels

பகலில் சுறுசுறுப்பாக வேலை செய்யவும் இரவில் நன்கு தூங்கவும் இந்த `சுப்ராகியாஸ்மாட்டிக் நியூக்ளியஸ்' சரியாக வேலை செய்ய வேண்டியது அவசியம். இது சரியாக வேலை செய்தால்தான் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து `எல்ஹெச்' (Luteinizing Hormone ) என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் சுரந்தால்தான் சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும்.

இந்த எல்லா செயல்களும் சரியாக நடக்க, நமக்கு உயிரியல் கடிகாரம் முறையாக இயங்க வேண்டும். மெலட்டோனின் ஹார்மோனானது மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் இருந்து சுரப்பது. இந்த ஹார்மோன், வெளிச்சம் அதிகமுள்ள பகல் வேளையில் குறைவாகவும் இருட்டான இரவு நேரத்தில் அதிகமாகவும் சுரக்கும்.

Depression
Depression

முட்டை வெளியேறுவது சரியாக நடந்தால்தான் மாதவிலக்கு சுழற்சி முறையாக இருக்கும். அப்போதுதான் கருத்தரிப்பது எளிதாகும். எனவே, நைட் ஷிஃப்ட் வேலைகளில் இருக்கும் பெண்களுக்கு இந்தச் செயல்களில் சிக்கல்கள் வர வாய்ப்புண்டு.

இரவில் சுரக்கும் மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. உயிரியல் கடிகாரம் முறைதவறி இயங்குகிறது. எல்ஹெச் சுரப்பு குறைகிறது. அதன் தொடர்ச்சியாக கருத்தரிப்பதில் சிக்கலோ, தாமதமோ ஏற்படலாம். மாதவிலக்கு முறைதவறி, குழந்தையின்மை பிரச்னையும் வரலாம்.

தொடர்ந்து நைட் ஷிஃப்ட் வேலையில் இருப்போருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல்கள் வருவதாகவும், எண்டோமெட்ரியாசிஸ் போன்ற பிரச்னை ஏற்படுவதாகவும், குழந்தையின்மைக்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை வர வாய்ப்புள்ளதாகவும், கருத்தரித்தாலும் கரு கலைய வாய்ப்புள்ளதாகவும், குறைப்பிரசவம் நிகழ வாய்ப்புள்ளதாகவும், எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் ஆஸ்திரேலிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ஒரு சிலருக்கு நைட் ஷிஃப்ட் பணியை, உடல் ஏற்றுக்கொள்ளும். ஒரு சிலருக்கு ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அதீத களைப்பு, டிப்ரெஷன், பதற்றம் போன்றவை இருக்கலாம். எனவே, இரவுநேர வேலை ஏற்றுக்கொள்ளாதவர்கள், பகல் நேர வேலைக்கு மாறிக்கொள்வதே சிறந்தது.

Hormones
Hormones

தொடர்ந்து பல நாள்களாக நைட் ஷிஃப்ட்டில் வேலை செய்வோருக்கு ஸ்ட்ரெஸ் ஹார்மோனான கார்ட்டிசால் அளவு உடலில் அதிகரிக்கும். அதனால் வீக்கம், எண்டோமெட்ரியாசிஸ் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். இவையும் குழந்தையின்மைக்கு காரணமாகலாம். எனவே, உங்கள் உடலின் தன்மை, நைட் ஷிஃப்ட் வேலையால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு முடிவெடுங்கள்.