Published:Updated:

மகப்பேறு காப்பீடு: என்ன, யாருக்கு, எவ்வளவு? FAQs

மகப்பேறு காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
மகப்பேறு காப்பீடு

பிரசவ செலவுகள் அதிகரித்து வருவது முக்கிய காரணம். இப்போதெல்லாம் வீடுகளில் பிரசவம் பார்க்கப்படுவ தில்லை.

மகப்பேறு காப்பீடு: என்ன, யாருக்கு, எவ்வளவு? FAQs

பிரசவ செலவுகள் அதிகரித்து வருவது முக்கிய காரணம். இப்போதெல்லாம் வீடுகளில் பிரசவம் பார்க்கப்படுவ தில்லை.

Published:Updated:
மகப்பேறு காப்பீடு
பிரீமியம் ஸ்டோரி
மகப்பேறு காப்பீடு

மகப்பேறு என்பது மகிழ்ச்சியான காலகட்டம். பிரசவ செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், அந்தச் செலவுகளை ஈடுகட்ட அதற் கான காப்பீடு பாலிசியை எடுப்பது மகப்பேறு கால பொருளாதார சிக்கல்களைத் தவிர்க்கும். மகப்பேறு காப்பீடு (Maternity Insurance) குறித்தும், அதுபற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான (Frequently Asked Questions - FAQs) விளக்கங்களையும் சொல்கிறார் குருராம் ஃபைனான் ஷியல் சர்வீசஸ் (www.gururamfinancialservices.com) நிறுவனர் ஆர்.வெங்கடேஷ்.

மகப்பேறு காப்பீடு: என்ன, யாருக்கு, எவ்வளவு? FAQs

மகப்பேறு காப்பீடு என்றால் என்ன?

பொதுவாக, மருத்துவக் காப்பீட்டு பாலிசி யின் (Health Insurance Policy) ஒரு பகுதியாக பிரசவ செலவுகளுக்கு இழப்பீடு (Claim) வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீட்டு பாலிசியில் மகப்பேறு செலவுகளுக்கு கவரேஜ் இல்லை என்றால் துணை பாலிசியாக (Rider) மகப்பேறு காப்பீடு வழங்கப்படுகிறது. இந்தக் காப்பீடு, சாதாரண பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பிறப்பு தொடர்பான செலவுகளை உள்ளடக்கியது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு, மருத்துவக் காப்பீட்டு பாலிசி யில் மகப்பேறு காப்பீட்டின் பலனையும் சேர்த்து வழங்குகின்றன. பெரும்பான்மையான கார்ப்பரேட் குரூப் பாலிசிகளில், மகப்பேறு என்பது ஒரு ரைடர் பாலிசியாக சுமார் ரூ.30,000 முதல் ரூ. 50,000 கவரேஜ் கொண்டதாக இருக்கும்.

மகப்பேறு காப்பீடு ஏன் தேவை?

பிரசவ செலவுகள் அதிகரித்து வருவது முக்கிய காரணம். இப்போதெல்லாம் வீடுகளில் பிரசவம் பார்க்கப்படுவ தில்லை. மருத்துவமனையில் அனுமதித்து, பிரசவம் பார்க்க ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

எதற்கெல்லாம் கவரேஜ் உண்டு?

மகப்பேறு காப்பீட்டில், மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதற்கு முந்தைய, மருத்துவமனை அனுமதி மற்றும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகான செலவுகளுக்கு கவரேஜ் இருக்கிறது. இதில் மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதற்கு 30 நாள் களுக்கு முந்தைய செலவுகள், பரி சோதனை செலவுகள், நர்சிங் கட்டணம், அறை வாடகை, பிரசவ செலவுகள், புதி தாகப் பிறந்த குழந்தைக்கான செலவுகள், தேவையான மருத்துவ சிகிச்சைகள், மருந்து - மாத்திரைகள், அறுவைசிகிச்சை கட்டணம், மருத்துவர் ஆலோசனை கட்டணம், மயக்க மருந்து ஆலோசனை கட்டணம் , மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு 30 நாள்களுக்கான மருந்து, பரிசோதனை செலவுகள் போன்றவற்றுக்கு இழப்பீடு கிடைக்கும்.

இயற்கையான முறையில் கருவுறாமல் இருந்தால், கணவர் விந்தணு, மனைவி யின் கருமுட்டை மூலம் ஆய்வகத்தில் கரு உருவாக்கும் செலவுகள் சமீப காலத் தில் சில பாலிசிகளில் அனுமதிக்கப் படுகின்றன. குழந்தைப் பிறப்பில் சிக்கல் இருந்து, மருத்துவரீதியாக கர்ப்பத்தைக் கலைத்தல் ஆகிய செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும். ஆகும் செலவுகள், குழந்தைப் பிறப்பில் சிக்கல் இருந்து, மருத்துவரீதியாக கர்ப்பத்தைக் கலைத்தல் ஆகிய செலவுகளுக்கும் இழப்பீடு கிடைக்கும். பொதுவாக, பாலிசி காலத்தின்போது அதிகபட்சம் இரண்டு பிரசவங்களுக்கு கவரேஜ் வழங்கப்படுகிறது. சில பாலிசிகளில் குழந்தைக்கு 2 வயதாகும்வரை தடுப்பூசி கட்டணங்களுக்கும் இழப்பீடு வழங்கப் படுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கான சிகிச்சை செலவுகளுக்கு 90 நாள்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இது பாலிசி மற்றும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.

எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்காது?

மகப்பேறு காப்பீட்டு பாலிசிகளில் சில செலவுகளுக்கு இழப்பீடு கிடைக் காது. கருக்குழாய் அல்லது வயிற்றுக்குழி போன்ற பகுதிகளில் இடம் மாறி உருவாகும் கர்ப்பம், ஆய்வுக்கூட சோதனை முறையில் கருத்தரித்தல் (In Vitro Fertilization - IVF) சிகிச்சை, பிரசவத்துக்கு முன் மருத்துவ பரி சோதனைகள் மற்றும் ஆலோசனைகள், வழக்கமான தாய்மை பரிசோதனை, வாடகைத் தாய், மருத்துவமனை பண பலன் (Hospital cash benefit) உள்ளிட்டவைக்கு இழப்பீடு தரமாட் டார்கள். மருத்துவமனை பண பலன் என்பது மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டிருக்கும் காலத்தில் தினசரி வழங் கப்படும் குறிப்பிட்ட ஒரு தொகையாகும்.

மகப்பேறு காப்பீடு: என்ன, யாருக்கு, எவ்வளவு? FAQs

மகப்பேறு செலவுகளுக்கு எந்தெந்த காப்பீட்டு நிறுவனங்கள் கவரேஜ் அளிக்கின்றன?

மகப்பேறு செலவுகளுக்கான கவரேஜ் உடன் கூடிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ், நேஷனல் ஹெல்த் இன்ஷூரன்ஸ், எஸ்பிஐ ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஆதித்ய பிர்லா ஹெல்த் இன்ஷூரன்ஸ், கேர் ஹெல்த், டிஜிட் ஹெல்த், எடெல்விஸ் ஹெல்த் இன் ஷூரன்ஸ், ஓரியன்டல் ஹெல்த் இன் ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மேக்ஸ் புபா ஹெல்த் இன்ஷூரன்ஸ், ராயல் சுந்தரம் ஹெல்த் இன்ஷூரன்ஸ், கோட்டக் மஹிந்திரா ஹெல்த் இன்ஷூரன்ஸ், சோழமண்டலம் ஹெல்த் இன்ஷூரன்ஸ், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்ஷூரன்ஸ், பாரதி ஆக்ஸா ஹெல்த் இன்ஷூரன்ஸ்,ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ், டாடா ஏ.ஐ.ஜி ஹெல்த் இன்ஷூரன்ஸ், ஃப்யூச்சர் ஜெனரல் ஹெல்த் இன்ஷூரன்ஸ், யுனி வர்சல் சோம்போ ஹெல்த்கேர் இன் ஷூரன்ஸ் உள்ளிட்ட மருத்துவக் காப் பீட்டு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மகப்பேறு கவரேஜ் எவ்வளவு தொகைக்கு கிடைக்கும்?

மகப்பேறுக்காக மருத்துவமனையில் சேர்ப்பதற்கும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான செலவுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை பாலிசியில் ஒதுக்கப்படும். இது ரூ.20,000, ரூ.25,0000, ரூ.50,000 என பாலிசிக்கு ஏற்ப இருக்கும். பிரதான காப்பீட்டு பாலிசியில் கவரேஜ் தொகை மிக அதிகமாக ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம் என்பது போல் இருக்கும்பட்சத்தில் ரூ.75, 000, ரூ. 1 லட்சம் என்பதுபோல் மகப்பேறு செலவுக்கான கவரேஜ் இருக்கும்.

சில பாலிசிகளில் மகப்பேறு செலவு களுக்கான கவரேஜ் ரூ.35,000, புதிதாகப் பிறந்த குழந்தைக்கான கவரேஜ் ரூ.25,000 எனப் பிரிக்கப்பட்டிருக்கும். மேலும், சிசேரியன் பிரசவத்துக்கு ரூ.25,000 அல்லது ரூ.40,000 என்பது போல் கவரேஜ் பிரிக்கப்பட்டிருக்கும்.

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு கவரேஜ் உண்டா?

பெரும்பாலான பாலிசியில் இந்த கவரேஜ் இருக்காது. பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் கர்ப்பகால செலவுகள், பிறந்த குழந்தை யின் மருத்துவ செலவுகளுக்கான காப்பீட்டை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

`ஸ்டார் வுமென் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி’ என்கிற அந்த பாலிசியில் கர்ப்பப்பை யில் கரு அறுவை சிகிச்சைகள், புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், பிறவிக் குறைபாடுகளைச் சரி செய்யும் செலவு, கருச்சிதைவு மற்றும் தடுப்பூசிக்கான செலவுகள் ஆகியவற்றுக்கு இழப்பீடு இருக்கிறது.

காத்திருப்பு காலம் எவ்வளவு?

மருத்துவக் காப்பீட்டு பாலிசியின் வகை மற்றும் காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து மகப்பேறு சலுகைகளைப் பெற காத்திருப்புக் காலம் ஒன்பது மாதங்கள் தொடங்கி ஆறு ஆண்டுகள் வரையில் உள்ளன. குடும்ப உறுப்பினர் களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஃப்ளோட்டர் பாலிசிகளில் பொதுவாக நான்கு அல்லது ஐந்து ஆண்டு காத்திருப்புக் காலத்துக்குப் பிறகு மகப்பேறு செலவுகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும். அந்த வகையில் பெண்கள் தங்கள் திருமணத்துக்கு சுமார் நான்கு - ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கும்பட்சத்தில் மட்டுமே மகப்பேறு செலவுகளை க்ளெய்ம் செய்ய முடியும்.

எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுக்க வேண்டும்?

சென்னை, கோயம்புத்தூர் போன்ற பெரிய நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவ செலவு சுமார் ரூ.50,000 ஆக உள்ளது. இதுவே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பிறப்பு என்றால் ரூ. 75,000 முதல் ரூ.1 லட்சம் செலவாகும். இந்தச் செலவு கிராமப்புறங்களில் சற்று குறைவாக இருக்கும். எனவே, ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை கவரேஜ் உள்ளது போல் மகப்பேறு பலன் உள்ள பாலிசியை எடுப்பது நல்லது.

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஏதாவது?

பொதுவாக, மருத்துவக் காப்பீட்டு பாலிசி களில் மகப்பேறு கவரேஜ் நடைமுறைக்கு வருவதற்கு ஒன்பது மாதங்கள் முதல் ஆறு ஆண்டுகள் வரை காத்திருக்கும் காலத்தைக் கொண்டுள்ளன எனப் பார்த்திருக்கிறோம். எனவே, பாலிசியை முன்கூட்டியே எடுத்திருப் பது அவசியமாகும். மேலும், நீங்கள் எடுக்கும் மருத்துவக் காப்பீட்டில் மகப்பேறு கவரேஜ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, பிரீமியம் செலுத்துவதற்கு முன் பாலிசியின் கவரேஜ், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளைத் தெளி வாகப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.