Published:Updated:

வொர்க் அவுட் பண்ணும் பெண்களுக்கு ஆண்மைத் தோற்றம் வருமா?

ஷீபா தேவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷீபா தேவராஜ்

- ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

``பெண்களையும் ஃபிட்னெஸ்ஸையும் பிரிக்கவே முடியாது. அந்தக் காலத்துப் பெண்கள் வயல் வேலையும் பார்த்துட்டு, சமையல், குழந்தை வளர்ப்புனு வீட்டு வேலைகளையும் பார்த்திருக் காங்க. ஃபிட்னெஸ் அவங் களுடைய லைஃப் ஸ்டைலாவே இருந்திருக்கு. காலப்போக்குல எல்லா வேலைகளுக்கும் எந்திரங்களைச் சார்ந்து வாழப் பழகிட்டோம். உடலுக்கு ஆக்டிவிட்டியே இல்லை. அதனால ஃபிட்னெஸ்ஸைத் தனியாகவும் வாழ்க்கையைத் தனியாகவும் பார்க்க ஆரம்பிச் சிட்டோம். குழந்தையைத் தூக்குவது தொடங்கி, தண்ணீர் பக்கெட் தூக்குவது, அன்றாட வேலைகள்ல கனமான பொருள்களைத் தூக்குவது வரை ஆண்களைவிட பெண்கள் அதிகம் வெயிட் தூக்கியிருக்காங்க. அதுதான் இன்னிக்கு வெயிட் டிரெய்னிங் என்ற பெயர்ல மாறி வொர்க் அவுட்டா வந்திருக்கு. காலம் காலமா பெண்கள் தூக்கின அதே வெயிட்தான். ஜிம்ல அதையே இரும்பு வடிவத்துல கொடுக்கும்போது வித்தியாசமா தெரியுது. ஜிம்ல சேர்ந்து வெயிட் தூக்கறதால பெண்களுக்கு ஆண்மைத் தோற்றமெல்லாம் வந்துடாது’’ - விழிப்புணர்வு மெசேஜுடன் பேச ஆரம்பிக்கிறார் ஷீபா தேவராஜ். சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் டிரெய்னர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்களின் டிரெய்னரும் கூட. இதழியல் வேலையை உதறி விட்டு முழு நேர ஃபிட்னெஸ் பயிற்சியாளராக மாறியவர்.

வொர்க் அவுட் பண்ணும் பெண்களுக்கு ஆண்மைத் தோற்றம் வருமா?

‘`இங்கிலீஷ் லிட்ரச்சர், மாஸ் கம்யூனிகேஷன் அண்டு ஜர்னலிசம்ல எம்.ஏ, எம்.பி.ஏ எல்லாம் முடிச்சிட்டு ஜர்னலிஸ்ட்டா என் கரியரை ஆரம்பிச்சேன். வெளிநாட்டுல வேற வேற வேலைகள் பார்த்துட்டு, கடைசியா கேமிங் கம்பெனியில கேம் புரொடியூஸரா வேலை பார்த்தேன். அப்பவே எனக்கு ரன்னிங்ல ஆர்வம் இருந்தது. அப்படியே மாரத்தான்ல ஆர்வம் வந்து அதுலயும் ஓட ஆரம்பிச்சேன்.

ஃபிட்னெஸ்தான், எனக்கான ஏரியான்னு புரிஞ்சது. அமெரிக்கன் கவுன்சில் ஆன் எக்சர்சைஸ்ல பர்சனல் டிரெய்னர் மற்றும் ஃபிட்னெஸ் நியூட்ரிஷன் ஸ்பெஷலிஸ்ட் டுக்கான பயிற்சிகளை முடிச்சேன். கிராஸ்ஃபிட் லெவல் 1, லெவல் 2 முடிச்சேன். தமிழ்நாடு அளவுல கிராஸ்ஃபிட்ல லெவல் 2 முடிச்ச ஒரே நபர் நான்தான். கிராஸ்ஃபிட்டுங்கிறது கார்டியோ, வெயிட் டிரெயினிங் மற்றும் ஜிம்னாஸ்டிக்னு மூன்றும் சேர்ந்தது. இப்போ இதுதான் டிரெண்டிங். அடுத்து சூப்பர் பாடி சூப்பர் பிரெயின் கோர்ஸும் முடிச்சேன். உடலுக்கான வொர்க் அவுட்டோடு மன நலத்துக்கும் கொஞ்சம் பயிற்சி கொடுக்குற மாதிரி, காக்னிடிவ் பிஹேவியர் லைஃப் கோச்சுக்கான படிப்பையும் முடிச்சிருக்கேன். ஃபிட்னெஸ் டிரெய்னரா வேலை பார்க்கிறது மூலமா அடுத்தவங்க வாழ்க்கையில மாற்றங் களை ஏற்படுத்த முடியும்னு உணர்ந்தேன்’’ என்பவர், சென்னை, ஆழ்வார்பேட்டையில் ‘க்ரீடு ஸ்டூடியோ’ என்ற பெயரில் ஜிம் நடத்திவருகிறார். சென்னை மாவட்ட பவர் லிஃப்டிங் அசோசியேஷனின் துணைச் செயலாளரும்கூட. சவுத் இந்தியா பவர் லிஃப்டிங் போட்டிகளில் டெட்லிஃப்ட் மற்றும் பென்ச் பிரெஸ்ஸில் மூன்று தங்க மெடல்கள் வென்று நேஷனல்ஸுக்குத் தேர்வானவர். பவர் லிஃப்டிங்கில் ஈடுபட விரும்பும் பெண்களுக்குப் பயிற்சிகள் அளிக்கிறார்.

பிரபலங்களின் பயிற்சியாளர் என்ற முறையில் அவர்களின் கடின உழைப்பையும் வாழ்க்கை முறையையும் சாமானியர்களுக்குப் புரியவைக்கிறார் ஷீபா.

‘`செலிபிரிட்டீஸின் வாழ்க்கையை வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு அது சொகுசானதா தெரியலாம். ஆனா அவங்களுடைய ஹார்டு வொர்க்கும் லைஃப் ஸ்டைலும் ரொம்ப கஷ்டமானது. ஐஸ்வர்யா ராஜேஷையே உதாரணமா சொல்லலாம். ராத்திரி 9 - 9.30 மணிக்கு ஷூட்டிங் முடியும். அதுக்கப்புறம் வொர்க் அவுட் பண்ணணும்னு வருவாங்க. ஒருநாள் முழுக்க ஷூட்டிங் முடிச்ச களைப்பு இருந்தாலும் வொர்க் அவுட் எவ்வளவு முக்கியம்னு உணர்ந்தவங்க. கூடவே என்ன சாப்பிடறோம்ங்கிறதுலயும் கவனமா இருப்பாங்க.. நாம நினைக்கிற மாதிரி பிரபலங்களுடைய வாழ்க்கை அவ்வளவு ஈஸியானதில்லை’’ என்பவர், ஃபிட்னெஸ் தொடர்பாக பெண்களுக்கு இருக்கும் பொதுவான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார்.

டயட்டா.... வொர்க் அவுட்டா? எடையைக் குறைக்க எது பெஸ்ட்?

எந்த உடல்நல பிரச்னையும் இல்லாத சராசரி நபருக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உடற்பயிற்சிகளும் முக்கியம். உணவுக்கட்டுப்பாடும் அவசியம். வெறும் டீடாக்ஸ் ஜூஸ், வெறும் காய்கறிகள்னு சாப்பிட்டு எடையைக் குறைக்க நினைக்கிற நிறைய பேரை பார்க்கறேன். ஒரு வீடு கட்ட வெறும் சிமென்ட் மட்டுமோ, வெறும் மணல் மட்டுமோ போதுமா? கல், மண், சிமென்ட், தண்ணீர்னு கலவை சரியா இருந்தா தான் பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கும். உங்க உடம்பும் அப்படித்தான்.சராசரி நபருக்கு அரைமணி நேரம் உடற்பயிற்சியும், அளவான சாப்பாடும் முக்கியம். என்னிக்கோ ஒருநாள் பிடிச்சதை சாப்பிடறதுல தப்பில்லை. ஆனா, அடுத்த நாளே மறுபடி ஆரோக்கிய உணவுப் பழக்கத்துக்குத் திரும்பிடணும்.

நீங்க பருமனா இருக்கீங்க, முட்டியில பிரச்னை.., அவசரமா எடையைக் குறைச்சே ஆகணும் என்ற நிலையில முதல்ல உணவுக்கட்டுப்பாடுதான் பரிந்துரைக்கப்படும். ஏன்னா அந்த நிலையில உடனடியா வொர்க் அவுட் பண்ண முடியாது. பொதுவாகவே 80 சதவிகிதம் ஊட்டச்சத்துள்ள உணவுகளும் 20 சதவிகித உடற்பயிற்சிகளும் நல்ல ரிசல்ட் தரும். உடல்நலக் கோளாறுகள் இருந்தா முதல்ல டயட்லயே வெயிட்டை குறைச்சிட்டு, உடல்நல பிரச்னைகள் சரியான பிறகு வொர்க் அவுட் பண்ண ஆரம்பிக்கலாம்.

போலியான வாக்குறுதிகளைக் கொடுக்கும் டயட் முறை நிறைய இருக்கு. வெறும் கொழுப்பு மட்டும் சாப்பிடறது, வெறும் புரோட்டீன் மட்டும் சாப்பிடறதுனு எந்த ஒரு விஷயத்தையும் தீவிரமா பண்ணும்போதுதான் பிரச்னை வருது. ஒருகட்டத்துல உங்க உடம்பு கண்டதையும் சாப்பிடணும்னு தேட ஆரம்பிக்கும். அப்போ கட்டுப்பாடில்லாம நிறைய சாப்பிட்டு, அத்தனை நாள் நீங்க இழந்த வெயிட்டைவிட பல மடங்கு வெயிட் போடுவீங்க.

வொர்க் அவுட் பண்ணும் பெண்களுக்கு ஆண்மைத் தோற்றம் வருமா?

உடற்பயிற்சிகளைத் தொடங்க சரியான வயது எது?

உடற்பயிற்சிகள் செய்ய வயது வரம்பே கிடையாது. எந்த வயசிலும் ஆரம்பிக்கலாம். டீன் ஏஜில் தொடங்குறது சிறந்தது. உடற்பயிற்சிகளைத் தொடங்கும்முன் உங்களுக்கு ஏதாவது உடல்நல பிரச்னைகள் இருந்தா முதல்ல அதை சரி செய்யணும். வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலில் நிறைய பேருக்கு முதுகு மற்றும் கழுத்து வலிகள் அதிகரிச்சிருக்கு. அந்த வலி வெறும் வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலால், சரியாக உட்கார்ந்து வேலை செய்யாததால் வந்ததுன்னா முதலில் அதைச் சரிசெய்து கிட்டு பிறகு வொர்க் அவுட் செய்ய ஆரம்பிக்கலாம். ஜிம்மில் சேர்ந்துதான் வொர்க் அவுட் செய்யணும்னு அவசியமில்லை. வீட்டிலேயேகூட சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்யலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம். வாக்கிங் பண்ணலாம். வெயிட்ஸ் வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலுள்ள வாட்டர் பாட்டில்களே போதும்.

வொர்க் அவுட் பண்ற பெண்களுக்கு ஆண் தன்மை வருமா?

ஆண்களின் உடல்வாகு அப்படி மாறக் காரணம் அவங்களுடைய டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன். அது ஆண்களுக்கு இருப்பதில் வெறும் 10 சதவிகிதம்தான் பெண்களுக்கு இருக்கு. அதனால உருண்டு திரண்ட தசைகளுடன் பாடி பில்டர் மாதிரி உடல் மாறிடும்னு பெண்கள் பயப்படத் தேவையில்லை.