தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு அளவைத் தாண்டினால் ஆபத்து!

மகப்பேறு
பிரீமியம் ஸ்டோரி
News
மகப்பேறு

மகப்பேறு

பிரசவமானதும் எல்லாப் பெண்களுக்குமே ரத்தப்போக்கு இருப்பது இயல்பு. ஆனால், அது குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் ஆபத்தானது.

``பிரசவமான 24 மணி நேரத்துக்குள், சுகப்பிரசவம் என்றால், 500 மி.லி அளவையும், சிசேரியனில் ஒன்றரை லிட்டரையும் தாண்டினால் அது அசாதாரணமான ரத்தப்போக்காகக் கணக்கிடப்படும்’’ என்று சொல்லும் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ், அது குறித்து விளக்குகிறார்.

பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு அளவைத் தாண்டினால் ஆபத்து!

``பிரசவத்துக்குப் பிறகான அதிக ரத்தப்போக்குப் பிரச்னையை மருத்துவமொழியில் `போஸ்ட்பார்ட்டம் ஹெமரேஜ்’ என்கிறோம். ஆயிரம் பெண்களில் ஒருவரை இது பாதிக்கலாம். ‘பிரைமரி பிபிஹெச்’, ‘செகண்டரி பிபிஹெச்’ என போஸ்ட்பார்ட்டம் ஹெமரேஜ் இரண்டு வகையில் பாதிக்கலாம். முதல் வகை, பிரசவத்தின்போதான கடைசிக்கட்டத்தில், அதாவது, குழந்தை வெளியே வரும்போது உண்டாவது. இரண்டாவது வகை பாதிப்பு, சுகப்பிரசவத்துக்காக நீண்ட நேரம் முயற்சி செய்து, தலை திரும்பாமலோ, இடுப்பெலும்பு குறுகியிருந்தோ, பிறகு சிசேரியன் செய்யும்போதோ உண்டாவது.

காரணங்கள்?

  • பிரசவத்துக்குப் பிறகு சுருங்க வேண்டிய ரத்த நாளங்கள் சுருங்காமல் போவது.

  • ஆயுதம் போட்டு செய்யப்படும் பிரசவத்தின்போது உண்டாகும் காயங்களின் விளைவு.

  • கர்ப்பிணிக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் இருப்பது.

  • ஒன்றுக்கும் மேலான குழந்தைகளைச் சுமப்பதால், வயிறு மிகப் பெரியதாகி குழந்தையைச் சுற்றியிருக்கும் தண்ணீரும் அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு சுருங்காமல் போவது.

  • கர்ப்பப்பையில் ஏற்படும் தொற்று.

  • பிரசவத்துக்குப் பிறகு நஞ்சுக்கொடி முழுமையாக அகற்றப்படாதது.

காரணத்தின் அடிப்படையில் ஆன்டிபயாடிக் முதல் அறுவை சிகிச்சைவரை சிகிச்சைகளை மருத்துவர் முடிவுசெய்வார்.

பிரசவத்துக்குப் பிறகான ரத்தப்போக்கு அளவைத் தாண்டினால் ஆபத்து!

கவனமாக இருக்க வேண்டியவர்கள்?

ரத்தச்சோகையாலும் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப் பட்டிருக்கும் பெண்கள். மிகக் குறைந்த அளவு ரத்தப்போக்குக் கூட இவர்களைப் பெரிய அளவில் பாதிக்கக்கூடும். கர்ப்பிணிகள் தங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். முறையான உணவுகளின் மூலம் அது குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவு, ரத்தப் பிரிவு, நஞ்சுக்கொடியின் பொசிஷன், முந்தைய பிரசவ விவரங்கள் போன்றவற்றை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.