Published:Updated:

அவள் விகடன் செவிலியர் விருதுகள்: வழங்கி வாழ்த்துகிறார் டாக்டர் தமிழிசை... நீங்களும் பங்கேற்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவள் மாண்புமிகு செவிலியர் விருதுகள்
அவள் மாண்புமிகு செவிலியர் விருதுகள்

செவிலியர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் அவள் விகடன் சார்பில் மாண்புமிகு செவிலியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவர்களைப் போலவே செவிலியர்களின் சேவையும் அளப்பரியது. நாமெல்லாம் நோய்க்கு பயந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும் போர் வீரர்களைப் போல் தைரியமாக அந்த வைரஸுக்கு முன்பாக முகம் காட்டி நிற்கின்றனர் செவிலியர்கள்.

International nurses day
International nurses day

செவிலியர்களின் சேவையைும் அர்பணிப்பையும் உலகுக்குப் பறைசாற்றும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

செவிலியர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கும் வகையில் அவள் விகடன் சார்பில் மாண்புமிகு செவிலியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களை அந்தந்த மருத்துவமனைகள் பரிந்துரைத்துள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்கள் அனைவருக்கும் அவள் விகடன் சார்பில் இ-சான்றிதழ் வழங்கப்படும்.

அவள் மாண்புமிகு செவிலியர் விருதுகள்
அவள் மாண்புமிகு செவிலியர் விருதுகள்

இந்நிகழ்வை மேலும் சிறப்பாக்குவதற்கு சர்வதேச செவிலியர் தின சிறப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் மேதகு ஆளுநரும் சிறந்த மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சியை இணைந்து வழங்குவோர் காவேரி மருத்துவமனை, பெல்லா சானிட்டரி நாப்கின் மற்றும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம், நாமக்கல்.

செவிலியர் தினமான மே 12-ம் தேதி (புதன்கிழமை) மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை ஆன்லைனில் நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.

தமிழிசை செளந்தரராஜன்
தமிழிசை செளந்தரராஜன்

நிகழ்ச்சியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு