தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வழுக்கையைத் தவிர்க்க முடியுமா? - ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

கூந்தல் ஆரோக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
News
கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியம்

குழந்தைகளின் கூந்தல் பராமரிப்பு

1. உங்கள் குழந்தைகளின் உணவுகளில் போதுமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் இருக்கின்றனவா என்பதை உறுதிபடுத்துங்கள்.

2. வாரத்துக்கு மூன்று முறை குழந்தையின் கூந்தலில் எண்ணெய் தடவிவிடுங்கள். குழந்தையின் கூந்தல் சுத்தமாக இருக்கிறதா எனப் பாருங்கள்.

3. குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறதா என கவனியுங்கள்.

வழுக்கையைத் தவிர்க்க முடியுமா? -  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

கூந்தலுக்கு எண்ணெய் வைக்கலாமா?

எண்ணெய் தடவலாம். ஆனால், வழிகிற அளவுக்கு வேண்டாம். எண்ணெயின் அளவு அதிகமானால் அதை நீக்க அதிக அளவிலான ஷாம்பூ உபயோகிக்க வேண்டியிருக்கும். அது உங்கள் கூந்தலின் இயற்கையான எண்ணெய்ப் பசையை நீக்கி, வறட்சியை ஏற்படுத்தும். கூந்தலில் ஜீவனே இருக்காது.

காரணமில்லாத முடி உதிர்வா?

திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? முதலில் உங்கள் உணவுகளை கவனியுங்கள். கூந்தலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துகள் மற்றும் இதர நுண்ணூட்டச் சத்துகள் குறைந்தால் அது கூந்தல் உதிர்வில் பிரதிபலிக்கும்.

வழுக்கையைத் தவிர்க்க முடியுமா? -  ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

கூந்தல் நரைக்காமலிருக்க வைட்டமின் சி மற்றும் ஈ சத்துகள் மிக அவசியம். சிட்ரஸ் வகைப் பழங்கள், முளைகட்டிய கோதுமை, சூரியகாந்தி விதைகள், பாதாம் போன்றவற்றிலிருந்து இந்த இரண்டு சத்துகளையும் பெறலாம்.

வழுக்கையைத் தவிர்க்கலாம்

தினமும் 3-4 வால்நட்ஸ் சாப்பிடுவோருக்கு வழுக்கைப் பிரச்னை தவிர்க்கப்படும். வால்நட்ஸிலுள்ள செலினியம் மற்றும் வைட்டமின் பி7 சத்துகள் வழுக்கையைத் தவிர்ப்பதோடு, முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.