Published:Updated:

புடவை கட்டினால்... நோய் எதிர்ப்பு சக்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
புடவை கட்டினால்... நோய் எதிர்ப்பு சக்தி!
புடவை கட்டினால்... நோய் எதிர்ப்பு சக்தி!

ஜெ.எஃப்

பிரீமியம் ஸ்டோரி

சேலை கட்டும் பெண்களிடம் வாசம் மட்டுமல்ல... மிகப்பெரிய பொக்கிஷமும் இருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் மகா ஜனங்களே! கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றி அதிகம் பேசுகிறோம், யோசிக்கிறோம். வைட்டமின் ‘டி’ ஊட்டச்சத்து அபரிமிதமாக இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே.

ஆரம்பத்தில் சொன்ன புடவைக்கும் வைட்டமின் ‘டி’க்கும் என்ன சம்பந்தம்... விளக்குகிறார் ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்...

“வைட்டமின் ‘டி’ சத்து கிடைப்பதற்கு மிகவும் எளிய வழி சூரிய ஒளிதான். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வைட்டமின் ‘டி’ மாத்திரைகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. கை, கால், கழுத்து, வயிறு என நம் உடலின் எந்தப் பகுதியில் சூரிய ஒளி பட்டாலும் அந்த இடத்தின் சருமத்தில் உள்ள கொழுப்பு, வைட்டமின் ‘டி’யாக மாறி உடலுக்கு நன்மை செய்கிறது.

 கற்பகம்
கற்பகம்

பெண்களுக்கு வைட்டமின் ‘டி’யைப் பெறுவதற்கு எளிய வழி புடவை கட்டுவதுதான். புடவை கட்டுபவர்கள் வைட்டமின் `டி'யை சூரிய ஒளியிலிருந்து சுலபமாகப் பெறலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதி அதிக அளவு சூரிய ஒளியைக் கிரகித்துக்கொள்ளும். அதனால்தான் நமது பாரம்பர்யத்தில் கர்ப்பிணிகளைப் புடவை கட்டுவதற்கு பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். கர்ப்ப காலத்தில் சூரிய ஒளி வயிற்றில்படும்போது தாய்க்கு மட்டுமல்ல... கருவிலிருக்கும் குழந்தைக்கும் வைட்டமின் ‘டி’ கிடைக்கும்.

காலையில் 6 முதல் 9 மணி, மாலை 3 முதல் 5 மணி வரை வைட்டமின் `டி' சத்தை சூரிய ஒளியிடமிருந்து பெறுவதற்கு சிறந்த நேரம். இந்த நேரத்தில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி, மொட்டை மாடியில் சூரிய ஒளிபடும்படி உட்காருதல், உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றைச் செய்யலாம். மொட்டை மாடியில் பிரைவசி இருந்தால் கால் மூட்டு, வயிறு ஆகிய பகுதிகளில் ஆடையைச் சற்று விலக்கிவிட்டு 10-15 நிமிடங்கள் சூரிய ஒளிபடும்படி அமர்வது கூடுதல் பயனளிக்கும்.

புடவை கட்டினால்... நோய் எதிர்ப்பு சக்தி!

முட்டை, காளான், மீன் உள்ளிட்ட உணவுகளிலிருந்தும் வைட்டமின் ‘டி’ சத்து கிடைக்கும். வைட்டமின் ‘டி’ உடலில் போதுமான அளவு இருந்தால்தான் கால்சியம் சத்தையும் உடல் கிரகிக்கும். கால்சியம் சத்து சரியான அளவிலிருந்தால் பெண்களுக்கு எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்பதால் பெருந்தொற்றுக் காலத்தில் எவ்வித தொற்றும் நம்மைத் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளும்.''

ஆக, பெண்களே புடவை கட்டுங்க. வைட்டமின் `டி'யை அள்ளுங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு