Published:Updated:

`கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இந்தியன் டாய்லெட்!' - காரணங்களை விளக்கும் மகப்பேறு மருத்துவர்!

வெஸ்டர்ன் டாய்லெட்

அனைவருக்குமே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தெரியும். இருப்பினும், அதைப் புறக்கணிக்கிறோம். இந்தியக் கழிவறைகளில் அமர்ந்து எழுவதுகூட (Squatting Method) தினசரி உடற்பயிற்சியாகிறது. இது, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

Published:Updated:

`கர்ப்பிணிகளுக்கு ஏற்ற இந்தியன் டாய்லெட்!' - காரணங்களை விளக்கும் மகப்பேறு மருத்துவர்!

அனைவருக்குமே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தெரியும். இருப்பினும், அதைப் புறக்கணிக்கிறோம். இந்தியக் கழிவறைகளில் அமர்ந்து எழுவதுகூட (Squatting Method) தினசரி உடற்பயிற்சியாகிறது. இது, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

வெஸ்டர்ன் டாய்லெட்

கர்ப்பிணிகளுக்கு இந்தியன் டாய்லெட் முறையே சிறந்தது; வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது வசதியாக இருந்தாலும் கூட, அதில் சில தீமைகளும் உள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் உட்கார்ந்து எழுந்திருக்க சுலபமாக இருக்கும் என்பதால், வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துகின்றனர். ஆனால், வெஸ்டர்ன் டாய்லெட்டைவிட இந்தியன் டாய்லெட் பயன்படுத்துவதுதான் கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சரண்யா.

மகப்பேறு மருத்துவர் சரண்யா
மகப்பேறு மருத்துவர் சரண்யா

இது குறித்து அவரிடம் பேசினோம்... ``வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்துவது வசதியான ஒன்றுதான். ஆனால், அதனால் ஏற்படக்கூடிய சில பிரச்னைகளும் உள்ளன. வெஸ்டர்ன் டாய்லெட்டில் இருக்கும் தண்ணீர், உட்காரும்போது மேலே தெறிக்கும். இதனால் நோய்க்கிருமிகள் எளிதாகத் தாக்கி, சிறுநீரகத் தொற்றை உருவாக்கக்கூடும். அதேநேரம், இந்திய முறை டாய்லெட்டை பயன்படுத்தும்போது சிரமமாக இருப்பதுபோல் தோன்றினாலும், அதனால் நம் உடலுக்கு சாதகமான பலன்கள் உள்ளன.

அனைவருக்குமே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தெரியும். இருப்பினும், அதைப் புறக்கணிக்கிறோம். இந்தியக் கழிவறைகளில் அமர்ந்து எழுவதுகூட (Squatting Method) தினசரி உடற்பயிற்சியாகிறது. இது, உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கை, கால்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட இந்திய முறை டாய்லெட் பெரிதும் உதவும்.

பொதுவாகவே, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியாக ஸ்குவாட் (squat) உள்ளது. Squat என்பது இந்திய முறை டாய்லெட்டை உபயோகப்படுத்தும்போது இருக்கும் நிலை. இதை தமிழில் குந்தி அமருதல் என்று கூறுகிறோம். இந்தியக் கழிப்பறைகளில் குந்துதல், நமது உடலில் உள்ள பெருங்குடலில் இருந்து மலத்தை முழுமையாக வெளியேற்ற உதவும். இது மலச்சிக்கல், குடல் அழற்சி, பெருங்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் பிற காரணிகளைத் தடுக்கும்.

டாய்லெட்
டாய்லெட்

இடுப்புப் பகுதியில் இருக்கும் எலும்புகளும் தசைகளும் பிரசவத்தின்போது விரிவடைய வேண்டும். அப்போதுதான் சுகப்பிரசவம் ஏற்படும். இதற்கு இந்திய முறை டாய்லெட்டை பயன்படுத்துவது உதவியாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

அப்போது அவர்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தினால் போதுமான அளவு அழுத்தம் கிடைக்காமல் வயிற்றில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறாமல் வயிற்றிலேயே தங்கிவிடும். ஆனால், இந்திய முறை டாய்லெட்டை பயன்படுத்தும்போது வயிற்றுக்குப் போதியளவு அழுத்தம் கிடைத்து, தேவையற்ற கழிவுகள் அவ்வப்போது வெளியேறிவிடும். அதனால் கர்ப்பிணிகளின் வயிற்றில் தேவையற்ற கழிவுகளும் தங்காது. அதனால் அவர்களுக்கு வேறு பிரச்னையும் ஏற்படாது.

கர்ப்பகாலத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் சிறந்ததா அல்லது இந்தியன் முறை டாய்லெட் சிறந்ததா எனப் பல்வேறு ஆய்வுகளின் முடிவில், இந்திய முறை டாய்லெட்தான் சிறந்தது எனவும் தெரிய வந்துள்ளது. இந்திய முறை டாய்லெட் பயன்படுத்தும்போது கால்களை அகன்று வைத்திருப்பதால் வயிற்றில் எந்த வகையான தேவையற்ற அழுத்தமும் ஏற்படாது. அதனால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. மேலும், கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும் கர்ப்பிணிகள், குறைந்தளவு நஞ்சுள்ள கர்ப்பிணிகள் (low lying placenta), குறுகிய கர்ப்பப்பை வாய் உள்ள கர்ப்பிணிகள் (short cervix), முதுகுத் தண்டுவடத்தில் வலி ஏற்படுபவர்கள் மற்றும் இந்திய முறை டாய்லெட்டை பயன்படுத்த சிரமப்படும் கர்ப்பிணிகள், வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கர்ப்பிணி
கர்ப்பிணி

இதுபோன்ற எந்தப் பிரச்னையும் இல்லை, மருத்துவரும் இந்திய முறை டாய்லெட்டை பயன்படுத்துவதில் ஆபத்தில்லை எனக் கூறினால், தாராளமாக கர்ப்பிணிகள் இந்திய முறை டாய்லெட் பயன்படுத்தலாம். மேலும், பிரசவத்துக்குப் பிறகும், சர்ஜரிக்கு பிறகும் அவர்களால் முடிந்தால் இந்திய முறை டாய்லெட்டை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்றார் மருத்துவர் சரண்யா.