Published:Updated:

50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது? #DoubtOfCommonMan

50 வயதிலும் மாதவிடாய்

அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வருமா ?

Published:Updated:

50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது? #DoubtOfCommonMan

அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வருமா ?

50 வயதிலும் மாதவிடாய்
விகடன் #DoubtOfCommonMan பகுதியில் கீர்த்தி என்ற வாசகர் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "52 வயதாகும் என் உறவினருக்கு இன்னும் மாதவிடாய் நிற்கவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு தலைவலி, மயக்கம் என உடல்நிலையும் குன்றிவிடுகிறது. 52 வயதில் பீரியட்ஸ் வருவதும் உடல்நிலைக் குன்றுவதும் இயல்பான விஷயங்கள்தானா அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா? இந்த நேரங்களில் வருகிற தலைவலிக்கு மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா?" - இதுதான் அவரது கேள்வி.
மாதவிடாய்
மாதவிடாய்

கீர்த்தியின் உறவினருக்கு மட்டுமல்ல... ஏராளமான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது. மூத்த மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர் மற்றும் இளைய தலைமுறை மகப்பேறு மருத்துவர் நிவேதா ஆகியோரிடம் இந்தக் கேள்வியை முன்வைத்து விளக்கம் கேட்டோம்.

"52 வயதிலும் தொடரும் மாதவிடாய் இயல்பானதா?"

"மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால், சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதனால், இதை நினைத்துப் பயந்துவிட வேண்டாம். அதேநேரம், உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை கன்சல்ட் செய்துவிடுவது நல்லது."

"இளமையான மனநிலை காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.''
மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர்

"50-களிலும் மாதவிடாய் இருந்தால் கட்டாயம் என்னென்ன பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும்?"

"கருப்பை ஸ்கேன், மெமோகிராம், பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்த வேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால், கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிப்பது நல்லது."

"இந்த நேரத்தில் தலைவலி வருவது நார்மல்தானா?"

"மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி, மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானதுதான். இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோபாஸ் நேரத்திலும் வரும்."

பெரி மெனோபாஸ்
பெரி மெனோபாஸ்

"மாதவிடாய் நேரத்துத் தலைவலிக்கு மாத்திரை எடுக்கலாமா?"

"தாராளமாக எடுக்கலாம், தப்பில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் இப்படி தலைவலி வந்து, மாத்திரை சாப்பிட்டும், தலைவலி சரியாகவில்லை என்றால் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்."

"எத்தனை சதவிகிதப் பெண்களுக்கு இப்படி 50-களிலும் மாதவிடாய் வருகிறது?"

"பத்துப் பெண்களில் 2 அல்லது 3 பெண்களுக்கு இப்படி 50 வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வரலாம். முக்கால்வாசிப் பெண்களுக்கு 50-க்கு முன்னாடியே நின்றுவிடுகிறது. இது சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்வாகைப் பொறுத்தது."

மெனோபாஸ் வயது என்பது பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது."
மகப்பேறு மருத்துவர் நிவேதா

"அம்மாவுக்கு சீக்கிரம் மெனோபாஸ் வந்தால், மகளுக்கும் அதுபோலவே வருமா?"

"அப்படி கிடையவே கிடையாது. நிறைய பேர் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 'அம்மாவுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், நமக்கும் சீக்கிரம் வந்துவிடும்'; 'அத்தைக்கு மெனோபாஸ் லேட்டாதான் நின்னுச்சு. அதனால எனக்கும் லேட்டாதான் நிக்கும்'; 'மெனோபாஸ் வந்தப்போ என் அக்கா ரொம்ப கஷ்டப்பட்டா. நானும் அப்படிக் கஷ்டப்படுவேன்' என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது."

"ஹார்மோன் சுரப்பை மனதும் தீர்மானிக்கிறதா?"

"இப்போது 30 வயதுக்கு மேல்தான் திருமணத்தைப் பற்றியே யோசிக்கிறார்கள் பெண்கள். அதனால், 30-களின் மத்தியில் அல்லது கிட்டத்தட்ட இறுதியில்கூட சிலர் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஒரு தலைமுறைக்கு முன்னால் வரைக்கும் மிக இளவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்துவைத்தார்கள். அதனால், அந்தப் பெண்கள் 40-களிலேயே 'வயசாயிடுச்சு' என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

மெனோபாஸ் பிரச்னையை நடிகை நளினி சந்தித்தபோது...
மெனோபாஸ் பிரச்னையை நடிகை நளினி சந்தித்தபோது...

ஆனால், இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே உணர்கிறார்கள். அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை நாமெல்லாரும் பார்த்தும் வருகிறோம். இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது இளமையான மனநிலை. இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது. என் அனுபவத்தில் சமீப சில வருடங்களாக இதை நான் அதிகம் பார்த்துவருகிறேன்."

Doubt of Common Man
Doubt of Common Man

இதுபோன்று உங்களுக்கு எழும் கேள்விகளை https://special.vikatan.com/doubt-of-commonman/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யுங்கள். பதிலைச் சொல்ல காத்திருக்கிறோம்.