Published:Updated:

`புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்!' - கண்கலங்கிய மஹிமா சௌத்ரி; உறுதுணையாக நின்ற மகள்

மஹிமா சௌத்ரி ( instagram )

``ஆரம்பத்தில் என்னுடைய குடும்பத்தினருக்குக்கூட சொல்லாமல்தான் சிகிச்சைகளை மேற்கொண்டேன். கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மிகவும் உடைந்து அழுதேன். தற்போது எல்லாவற்றையும் கடந்து கேன்சரை வென்றிருக்கிறேன்.’’

`புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டேன்!' - கண்கலங்கிய மஹிமா சௌத்ரி; உறுதுணையாக நின்ற மகள்

``ஆரம்பத்தில் என்னுடைய குடும்பத்தினருக்குக்கூட சொல்லாமல்தான் சிகிச்சைகளை மேற்கொண்டேன். கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மிகவும் உடைந்து அழுதேன். தற்போது எல்லாவற்றையும் கடந்து கேன்சரை வென்றிருக்கிறேன்.’’

Published:Updated:
மஹிமா சௌத்ரி ( instagram )

பாலிவுட் நடிகையான மஹிமா சௌத்ரி சமீபத்தில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தன்னுடைய சிகிச்சை முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது அனுபம் கெர் தயாரிப்பில் வரவிருக்கும் `தி சிக்நேச்சர்’ (The Signature) திரைப்பட படப்பிடிப்புக்காக லக்னோ சென்றுள்ளார்.

மஹிமா சௌத்ரி
மஹிமா சௌத்ரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தான் கடந்து வந்த மிக மோசமான நாள்கள் குறித்து வீடியோவில் கண்கலங்கப் பேசியுள்ளார் மஹிமா. அந்த வீடியோவை அனுபம் கெர் வெளியிட்டுள்ளார். ``முதலில் மருத்துவர்கள் மார்பகத்தில் இருக்கும் கட்டியைப் பரிசோதித்தனர். அது சாதாரண கட்டியாகவும் இருக்கலாம் அல்லது கேன்சராக மாறவும் வாய்ப்புண்டு எனத் தெரிவித்து, கட்டியை அகற்றினார்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் எடுக்கப்பட்ட பயாப்ஸி சோதனையில் அது ஆரம்ப நிலை கேன்சர் என்று தெரிந்தது. அப்போதிலிருந்து எனக்கு கீமோதெரபி சிகிச்சை ஆரம்பமானது. ஆரம்பத்தில் என்னுடைய குடும்பத்தினருக்குக்கூட சொல்லாமல்தான் சிகிச்சைகளை மேற்கொண்டேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதும் மிகவும் உடைந்து அழுதேன். தற்போது எல்லாவற்றையும் கடந்து கேன்சரை வென்றிருக்கிறேன். நான் சிகிச்சையில் இருந்தபோது என் மகள் அரியானா 2 மாதங்கள்வரை பள்ளிக்குச் செல்லவில்லை. நான் குணமடைந்து கொண்டிருந்தபோதும், பள்ளிக்குச் சென்று வருவதால் கோவிட் தொற்று வந்து, அது என்னையும் பாதிக்குமோ என்ற அச்சத்தில் பள்ளிக்குச் செல்லாமல் எனக்கு உறுதுணையாக இருந்தாள். ஆன்லைனில் வகுப்புகளைக் கவனிக்க அவளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேன்சர் என்பது குணப்படுத்தக்கூடிய நோய். அதற்கான நவீன சிகிச்சைகள் இன்று நிறைய உள்ளன...'' எனத் தெரிவித்திருந்தார்.

இதைத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, ``நீ என்னுடைய ஹீரோ... நண்பர்களே... உங்களுடைய அன்பு, அரவணைப்பு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களை அவருக்கு அனுப்புங்கள்... தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மஹிமாவின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என வாஞ்சையோடு குறிப்பிட்டு இருந்தார் அனுபம் கெர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism