அந்தக்கால அரசிகளின் அழகுக் குறிப்புகளில் ஆரம்பித்து இந்தக்கால அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புவரை பூக்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஒவ்வொரு பூவிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. பூக்களைப் பயன்படுத்தி, சருமம் மற்றும் கூந்தலை எப்படிப் பராமரிப்பது? அழகுக்கலை நிபுணர் வசுந்தரா தரும் டிப்ஸ்...

சருமத்தை மென்மையாக்கும் ரோஜா!

பிங்க் நிற ரோஜாப்பூதான் சருமத்துக்கு ஏற்றது. குளிக்கும் நீரில் கைப்பிடி ரோஜா இதழ்களை ஊறவைத்து, அந்தத் தண்ணீரில் குளித்து வந்தால், உடல், ஈரப்பதத்தைத் தக்க வைத்து சருமத்தை மென்மையாக்கும். ஒரு கப் வெந்நீரில் கைப்பிடி அளவு ரோஜா இதழ்களைப் போட்டு, அந்த நீருடன் இரண்டு துளிகள் ரோஸ் ஆயில் சேர்த்து, முகம் கழுவினால் சருமம் இறுக்கமாகும். வெயிலால் கருத்த சருமம் நிறம் மாற ஆரம்பிக்கும். கரு வளையம் மறையும்.

முகத்தை ஒளிரவைக்கும் மல்லிகை!

கைப்பிடி அளவு மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து, முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.

முகப்பருவைப் போக்கும் சாமந்தி!

சாமந்திப்பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை ‘பெண்களின் எண்ணெய்’ என்பார்கள். அந்தளவுக்குப் பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் மலர் இது. சாமந்திப் பூக்களைத் தண்ணீரில் போட்டுக் குளித்தால், காயங்கள், முகப்பரு, தழும்புகள் ஆகியவை மறைய ஆரம்பிக்கும். சாமந்திப்பூ ஊறவைத்த நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மீது வைத்தால் வீக்கமும் கருவளையமும் சரியாகும்.

ரோஜா, மல்லி, சாமந்தி ஃபேஷியல்! ஃபேஷியல் செய்வதற்கு நேரமில்லாதபோது, ரோஜா, மல்லி, சாமந்தி ஆகிய மூன்று பூக்களையும் இடித்து அல்லது கைகளால் கசக்கி, சிறிதளவு வெந்நீருடன் கலந்து முகத்தில் அடித்துக் கழுவினால் முகம் ஃபேஷியல் செய்ததுபோல பளிச்சென்று மாறும்.

சருமப் பிரச்னைகளை சரிசெய்யும் லேவண்டர்!

அரிப்பு, முகப்பரு என்று சருமம் தொடர்பான அத்தனை பிரச்னைகளையும் சரிசெய்யும் லேவண்டர் மலர்க்குளியல். நம் ஊரில் இந்த மலர்கள் கிடைக்காது என்றாலும் லேவண்டர் ஆயிலும் காய்ந்த லேவண்டர் மலர்களும் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். லேவண்டர் எண்ணெயின் மணம் நல்ல உறக்கத்தைத் தரும். நல்ல தூக்கம் இறந்த செல்களை உதிரச் செய்து, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

மசாஜ் செய்ய மனோரஞ்சிதம்!

தாய்லாந்தில் மனோரஞ்சித மலரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயால்தான் உடலுக்கு மசாஜ் செய்வார்கள். நெடுநேரம் வேலை செய்து சோர்வான நாள்களில் மனோரஞ்சிதம் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், நிம்மதியாக உணர்வீர்கள். நரம்புத் தளர்ச்சி பிரச்னைகள் இருப்பவர்கள் மனோரஞ்சித எண்ணெயால் உடல் முழுக்க மசாஜ் செய்வார்கள்.

தலை அரிப்பைச் சரிசெய்யும் அல்லி மலர்!

தலையில் அரிப்பு இருப்பவர்கள் அல்லி மலர் ஊறவைத்த தண்ணீரில் குளிக்கலாம். தவிர, சருமத்துக்குத் தேவையான ஈரப்பதம் கிடைத்து, சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

சுருக்கங்களைக் குறைக்கும் செம்பருத்தி!

செம்பருத்திப்பூவைக் கசக்கி தண்ணீருடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் குறைய ஆரம்பிக்கும். செம்பருத்திப் பூக்களை அரைத்து தலைக்கு ஷாம்பூவாகப் பயன்படுத்தினால், தலைமுடி மின்னும்.

பொடுகைத் தடுக்கும் தவனமும் மரிக்கொழுந்தும்!

இவையிரண்டும் இலைகள் என்றாலும் மலர்கள்போல வாசனை நிறைந்தவை. தவனம் அல்லது மரிக்கொழுந்தைக் கசக்கி ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் பொடுகு வராது.

முதுமையைத் தள்ளிப்போடும் தாமரை!

தாமரை மலர் ஆன்டி ஏஜிங் தன்மைகள் நிறைந்தது. ஃபிரெஷ்ஷான தாமரையை விழுதாக அரைத்து, முகத்தில் பூசி வந்தால், சுருக்கங்கள் வருவது தள்ளிப்போகும்.

பட்டாக்கும் பவழமல்லி

சூடான பாலில் பவழமல்லிப் பூக்களைப் போட்டு, ஆறியதும் அந்தப் பாலால் முகம் கழுவினால் முகம் மென்மையாகும்.