சி.ய.ஆனந்தகுமார்Follow
வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர்.
சட்டம் மற்றும் முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட உயர்கல்வி படித்த முதல்தலைமுறை பட்டதாரியான இவர், கல்விக்காக தான் பட்ட வலிகள் மற்றும் அனுபவங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கி வருகிறார்.
மேலும், சமூகத்தின்மீது கொண்ட அக்கறை காரணமாக, பெற்றோர் - குழந்தைகள் உளவியல் மற்றும் மாணவர் தற்கொலை தடுப்பு மற்றும் உயர்கல்வி குறித்த ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளார்.
தொடர்ந்து, ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தன்னாலான சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி வருபவர். இடையிடையே எழுத்தின் மூலம் எளிய மக்களின் வலிகளை போக்கிட அவ்வபோது எழுதிவருகிறார்.