Published:Updated:

`மகப்பேறு மரணமே இல்லை!' - 'வம்சம்' திட்டம் மூலம் சாதித்த நாகை மாவட்டம்!

மகப்பேறு மரணம் இல்லாமல் சாதித்த நாகை

கடந்த மூன்று ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதலிடத்தில் இருந்த நாகை மாவட்டம், தற்போது ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

`மகப்பேறு மரணமே இல்லை!' - 'வம்சம்' திட்டம் மூலம் சாதித்த நாகை மாவட்டம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதலிடத்தில் இருந்த நாகை மாவட்டம், தற்போது ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மகப்பேறு மரணம் இல்லாமல் சாதித்த நாகை

கடந்த மூன்று ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதலிடத்திலிருந்த நாகை மாவட்டம், தற்போது ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக, நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மகப்பேறில் மரணமில்லை
மகப்பேறில் மரணமில்லை

நாகை மாவட்டத்தில், 2019 ஆம் ஆண்டு முதல் 2020-க்குள் 8 மகப்பேறு மரணங்களும், 2020 - 2021-ம் ஆண்டில் 11 மகப்பேறு மரணங்களும், 2021 முதல் 2022 ஆண்டில் 12 மகப்பேறு மரணங்களும் நிகழ்ந்துள்ளன.  ஆனால், நடப்பாண்டில்  இதுவரை ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லை. அதேபோல தமிழகத்திலேயே ஆண் குடும்பநல அறுவை சிகிச்சையில் நாகை மாவட்டம் முதலிடம் பெற்று தேசிய அளவிலும் பாராட்டு பெற்றுள்ளது. இதனால், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்றாலே அச்சத்துடன் பார்த்து வந்த நாகை மக்கள், தற்போது கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை நோக்கி நம்பிக்கையுடன் வருகின்றனர்.

இது பற்றி நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கூறுகையில், ``இரண்டு மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளையுடைய உயர் வரிசை பிறப்பு பிரசவங்களை தவிர்ப்பதன் மூலம், 20 விழுக்காடு மகப்பேறு மரணங்களை தவிர்க்க முடியும். இதன் அடிப்படையில் தாய் காக்கும் திட்டம் 15.12.2021 முதல் துவங்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் பயனடையும் தாய்மார்களுக்கு, தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையுடன்  சிறப்பு நிதியாக  ரூ. 2,000 சேர்த்து வழங்கப்படுகிறது.

அதேபோல, 'வம்சம்' திட்டம் தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் 94423 74310 என்ற அலைபேசி எண்ணின் மூலமும், 04365-250310 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பு கொள்ளும் வகையில்  04.03.2022 அன்று துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மகப்பேறில் மரணமில்லை
மகப்பேறில் மரணமில்லை

பிரசவத்தின் போதும் அதன்பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு, விளக்கங்கள் பெறலாம். கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் மருத்துவரின் ஆலோசனையையும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம். கர்ப்பகாலத்தில் ஏற்படும் ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், குடும்பநலத் துறையின் சார்பாக குடும்ப கட்டுப்பாடு குறித்த முறைகளையும் இந்த தொலைபேசி எண்ணின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

'வம்சம்' திட்டத்தின் தொலைபேசி பயனாளிகள் மொத்தம் 242 பேர். 'வம்சம்' தொலைபேசி எண்ணின் மூலம் நலம் விசாரிக்கப்பட்ட பயனாளிகள் மொத்தம் 5,420 பேர். பிரசவங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணிகள் நலத்தில் தீவிர கவனம் செலுத்துகிறோம்" என்றார்.