உலகப் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்ததாகக் குறிப்புகள் உண்டு. அப்படியோர் அழகூட்டியாகச் சொல்லப்படும் கழுதைப்பாலில் சோப் தயாரிப்பு மற்றும் விற்பனையை முன்னெடுத்து, கழுதை வளர்ப்பவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி சாதனை படைத்திருக்கிறார் பூஜா கவுல். தேசிய, சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்று, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளவரிடம் பேசினோம்.

‘`என் முதுகலை ஆராய்ச்சிப் படிப்புக்கு, இந்தியாவில் பால் மற்றும் பால் பொருள்களுக்கான சந்தை குறித்துப் படித்த நான், அப்போது கழுதைப்பாலின் மருத்துவ குணங்களை அறிந்துகொண்டேன். என்னுடன் பயின்ற சக மாணவர் ரிஷப் டோமருடன் இணைந்து, காசியாபாத், நொய்டா பகுதிகளில் கழுதை வளர்க்கும் நாடோடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை 2,000 முதல் 3,000 ரூபாய் வரை இருப்பதை நாங்கள் அறிந்தோம். கழுதைப்பாலில் சோப் தயாரித்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என முடிவு செய்து, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை, ஒரு லிட்டர் கழுதைப்பாலை 2,000 ரூபாய்க்குக் கொள்முதல் செய்தோம். அதேநேரம், கழுதைக் குட்டிகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதையும் கண்காணித்தோம். கொள்முதல் செய்த கழுதைப் பாலில் 200 சோப்புகளைத் தயாரித்தோம். இரண்டு மாதங்களுக்குள் எல்லா சோப்புகளும் விற்றுத் தீர்ந்தன.

ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், கழுதைப்பால் சோப்பை முழுநேரத் தொழிலாகச் செய்ய முடிவெடுத்து, 28,000 ரூபாய் முதலீடு செய்து ‘Organiko’ நிறுவனத்தையும் இணையதளத்தையும் 2018-ம் ஆண்டு தொடங்கினோம். இப்போது இரண்டு வகை சோப்புகளைத் தயாரித்து விற்கிறோம்’’ என்று சொல்லும் பூஜாவின் சோப்புகளை வாங்கி உபயோகித்தவர்கள் பலரும், அது மேனியின் ஆரோக்கியத்திலும் அழகிலும் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளனர்.

‘`எங்கள் சோப்புகள் நன்கு விற்பனையாவதன் காரணமாக, கழுதை வளர்ப்போரின் வாழ்க்கைத்தரம் உயரத் தொடங்கியது. இப்போது 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழுதைப்பால் விற்பனையில் நேரடியாக ஈடுபட்டுள்ளன. 25,000 ரூபாய் வரை மாத வருமானம் பெறுகின்றனர். கழுதைகளுக்கெனத் தனித் தொழுவங்களை அமைத்துக்கொடுப்பதோடு, கழுதைகளை முறையாகப் பராமரிக்கவும் பயிற்சி அளிக்கிறோம்.

இந்தியா முழுவதும் உள்ள கழுதை வளர்ப்போரை ஒரு குடையின்கீழ் கொண்டுவர முயன்று வருகிறோம். ஃபேஸ் வாஷ், ஃபேஸ் பேக், ஹேர் ஆயில் எனப் பல அழகு சாதனப் பொருள்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் பூஜா கவுல்.