Published:Updated:

உணவு டெலிவரி, மெசேஜிங் ஆப்களை அதிகம் பயன்படுத்தும் பெண்கள்... ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

Using smartphone ( Photo: bongkarn thanyakij / pexels )

பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், 11.3 சதவிகித பெண்களே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் உணவு டெலிவரி மற்றும் மெசேஜிங் ஆப்களை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக `Bobble AI' என்ற உரையாடல் ஊடக நிறுவனம் (conversation media platform) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தும் 8.5 கோடி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட தகவல்கள்...

*கடந்த ஆண்டு, ஸ்மார்ட்போன்களில் இந்திய பயனர்கள் செலவழிக்கும் நேரமானது 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன்

* பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், 11.3 சதவிகித பெண்களே ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஆப்களை பயன்படுத்துகின்றனர்.

* ஆண்கள் அளவுக்கு பெண்கள் கேமிங் ஆப்களில் (Gaming apps) ஆர்வம் காட்டுவதில்லை. வெறும் 6.1 சதவிகித பெண்கள் மட்டுமே கேமிங் ஆப்களை பயன்படுத்துகின்றனர்.

*பொதுவாகவே பெண்கள் ஆப்களை பயன்படுத்துவது குறைவாக இருந்தபோதும், பிறரை தொடர்பு கொள்ளப் பயன்படுத்தப்படும் கம்யூனிகேஷன்ஸ் ஆப்களில் 23.3 சதவிகிதமும், வீடியோ ஆப்களில் 21.7 சதவிகிதமும், உணவு ஆப்களில் 23.5 சதவிகிதமும் அதிகம் பயன்படுத்தி உள்ளனர். 

இந்தியாவில் டிரெண்டில் உள்ள மொபைல் பயன்பாடுகள் மற்றும் இந்திய நுகர்வோரின் மனப்பகிர்வுகள் குறித்து அறிந்து கொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.