Published:Updated:

மாதவிடாய் பொருள்கள் இலவசம்... ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட சட்டம்!

மாதவிடாய்

இந்தச் சட்டத்தின்படி பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுவதை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாதவிடாய் பொருள்கள் இலவசம்... ஸ்காட்லாந்தில் இயற்றப்பட்ட சட்டம்!

இந்தச் சட்டத்தின்படி பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுவதை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.

Published:Updated:
மாதவிடாய்

உலகில் முதல் முறையாக ஸ்காட்லாந்தில் மாதவிடாய் பொருள்கள் இலவசமாக வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கின் போன்ற பொருள்களை வாங்க முடியாத நிலை, அவற்றால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் உள்ளிட்டவை மாதவிடாய் கால வறுமை (Period poverty) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதனைப் போக்கும் வகையில் ஸ்காட்லாந்து ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்து

அந்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா லெனான், 2019-ம் ஆண்டு நாடு முழுவதும் மாதவிடாய் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பது தொடர்பாக மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற ஆய்வுக்குழு இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இறுதியாக 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 121 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் கூட இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2021-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி மசோதா சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

சட்டம்
சட்டம்

இந்தச் சட்டத்தின்படி பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகத்தில் மாதவிடாய் சமயத்தில் பயன்படுத்தும் பொருள்கள் இலவசமாக வழங்கப்படுவதை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் பெண்கள் கழிவறைகளிலும் இவை இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பாலினத்தவரும் பயன்படுத்தும் ( gender neutral) கழிவறைகளிலும் இலவசமாக வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாதவிடாய் பொருள்களை இலவசமாக விநியோகிக்க பொது இடங்களில் அரசு, கடைகள் திறக்க வேண்டும். அப்படி பொது இடங்களில் இவற்றை வாங்குவதில் உடன்பாடில்லாதவர்கள் அதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். அப்படி ஆர்டர் செய்யும்போது அதற்கான டெலிவரி செலவுகளை மட்டும் செலுத்த வேண்டும். இதுபற்றி பேசியுள்ள அந்நாட்டின் பிரதமர் நிக்கோலா ஸ்டர்கன், "இந்தச் சட்டத்துக்கு வாக்களிப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றத்துக்கு இது உபயோகமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Napkin
Napkin
Photo: Pixabay

இதற்கு முன்னரே ஸ்காட்லாந்தில் இலவசமாக மாதவிடாய் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால், இப்போது தான் உலகில் முதல் முறையாக ஒரு நாட்டில் சட்டம் இயற்றப்பட்டு அது அமலுக்கு வந்துள்ளது. இன்னும் சில நாடுகளிலும் இலவசமாக மாதவிடாய் பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் அங்கு சட்டம் இயற்றப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.