Published:Updated:

பெண் உடலைப் பேசுவோம் - 3

தாய்மை
பிரீமியம் ஸ்டோரி
தாய்மை

தாய்மை தருணங்கள்... மார்பக மாற்றங்கள்!... சந்தேகங்களும் விளக்கங்களும்!

பெண் உடலைப் பேசுவோம் - 3

தாய்மை தருணங்கள்... மார்பக மாற்றங்கள்!... சந்தேகங்களும் விளக்கங்களும்!

Published:Updated:
தாய்மை
பிரீமியம் ஸ்டோரி
தாய்மை

‘ பெண்ணின் மார்பகங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்காக உரு வானவை. மனிதர்கள் அதைக் கவர்ச்சிக்குரிய உறுப்பாக்கிவிட்டார்கள்' என்று எழுதியுள்ளார் எழுத்தாளர் சுஜாதா. கருத்தரிக்கும்வரை மார்பகங்களை அழகுக் கான அடையாளமாகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள் இளம் பெண்கள். கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் காலத்திலும் மார்பகங்களில் ஏற்படுகிற மாற்றங்கள், பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு பெரும் பான்மை இளம் பெண்களுக்கு இருப்பதில்லை. அது குறித்து பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜ்.

“கர்ப்ப காலத்தின் மத்தியில், அதாவது செகண்டு டிரைமெஸ்டரில் மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கும். கனமாக உணர ஆரம்பிப்பார்கள் கர்ப்பிணிகள். மார்பகங் களுக்குள் இருக்கிற பால் சுரப்பிகளும் (Milk glands) பால் குழாய்களும் (Milk ducts) வளர ஆரம்பிப்பதுதான் காரணம். பிறக்கவிருக்கிற குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக பெண்ணின் உடல் அவளைத் தயார்படுத்துகிற இந்த நிகழ்வு மிக மிக இயல்பானதுதான்.

மார்பகங்களின் மையத்திலிருக்கிற கறுப்பு நிறப்பகுதி விரிவடைய ஆரம்பிக்கும். சிலருக்கு அந்தக் கறுப்பு பகுதியின் மேல் சின்னச்சின்ன முடிச்சுகள்போல வரலாம். சிலருக்கு, எட்டாவது மாதத்திலோ அல்லது அதன் பிறகோ மார்பகங்களிலிருந்து பால் போன்ற திரவம் கசியலாம். இவை இயல்பானவையே. ஆனால், திரவம் கசிகிறதா என்று மார்பகங் களை அடிக்கடி அழுத்திப் பார்க்கக் கூடாது. சில கர்ப்பிணிகளுக்கு மார்பகங்கள் அதிகம் பெரிதாகும். இவர்கள், அதற்கேற்ற உள்ளா டையை அணிய வேண்டும். தூங்கும்போது உள்ளாடை அணிவதைத் தவிர்க்கலாம்.

பெண் உடலைப் பேசுவோம் - 3

உள்ளழுந்திய மார்பகக் காம்புகள்!

சில கர்ப்பிணிகளுக்கு மார்பகக் காம்புகள் உள்வாங்கியிருக்கும். இதை மூன்றாவது டிரைமெஸ்டரிலேயே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்துவிட்டால், அந்த இடத்தில் லோஷன் தடவி காம்புகளை வெளியே எடுத்துவிட உதவி செய்வார். இப்படிச் செய்தால் மட்டுமே, குழந்தை பிறந்த பிறகு நிம்மதியாகப் பாலூட்ட முடியும். ஒருவேளை இந்தப் பிரச்னை குழந்தை பிறந்த பிறகு தெரியவந்தால், மார்பகக் காம்புகளை அதற்கென இருக்கிற உபகரணத்தால் வெளியே எடுத்து, குழந்தைக்குப் பாலூட்ட உதவி செய்வார்கள் செவிலியர்கள். கடைசி நேரத்தில் செய்வதால் சிலருக்கு சரி செய்ய முடியாமலும் போகலாம். இதுபோன்ற நேரத்தில் தாய்ப்பாலை பீய்ச்சியெடுத்துதான், குழந்தைக்குப் புகட்ட முடியும். நிப்பிள் ஷீல்டு பயன் படுத்தியும் கொடுக்கலாம். இதற்காகத் தான் குழந்தை பிறப்பதற்கு முன்னரே இதைச் சரி செய்ய வேண்டும் என்கிறோம். இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு மூன்றா வது டிரைமெஸ்டரில் நீங்களே மார்பகக்காம்பு களை வெளியே எடுத்துவிட முயற்சி செய்தால், பிரசவ வலி வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

முதல் அல்லது இரண்டாவது டிரைமெஸ் டரில் உள்ளழுந்திய மார்பகக் காம்பை நீவி வெளியே எடுத்தாலும், குழந்தை பிறப்பதற்கு முன் அது மறுபடியும் உள்ளே சென்றுவிடும். அதனால் இதை மூன்றாவது டிரைமெஸ்டரில் தான் செய்ய வேண்டும்.

பெண் உடலைப் பேசுவோம் - 3
AleksandarNakic

மார்பகக்காம்பில் வெடிப்பு!

பாலூட்டும்போது, மார்பகக்காம்பில் புண்ணோ, வெடிப்போ ஏற்படுவது பெரும் பாலான தாய்மார்கள் சந்திக்கிற பிரச்னை இது. குழந்தையின் ஈறானது நிப்பிளை பிடிக்காமல், அதைச் சுற்றியிருக்கிற கறுப்புப் பகுதியைக் கவ்விப்பிடித்து பாலருந்தினால் இந்தப் பிரச்னை வராது. ஒருவேளை... புண்ணோ, வெடிப்போ வந்துவிட்டால், அதற் கென இருக்கிற க்ரீமை மருத்துவரின் ஆலோ சனையின்படி தடவலாம். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்கூட தடவலாம். ஆனால், எண்ணெய் வழிந்துவிடும் என்பதால், க்ரீம்தான் பெட்டர். எதைத் தடவி னாலும் பாலூட்டுவதற்கு முன், ஈரமான பருத்தித்துணியால் மார்பகத்தை நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

இந்தப் புண் மற்றும் வெடிப்பினால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சில அம்மாக்கள் குழந்தைக் குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பார்கள். இப்படிச் செய்தால், பால் கட்டிக்கொண்டு அது வலி, காய்ச்சல் என்று வேதனையை அதிகப்படுத்தும். கட்டிக்கொண்ட பாலை உடனடியாக வெளியேற்றிவிட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும். வலி இருந்தால், வெந்நீர் ஒத்தடம் கொடுத்துவிட்டு பாலை வெளியேற்றலாம். வேறு வழியே இல்லை யென்றால் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தி வெளியேற்றலாம். சில பெண்கள் குழந்தை பிறந்தவுடனே பிரெஸ்ட் பம்ப்பை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். ‘வேலைக்குப் போக ஆரம் பிச்சதும் இந்த முறையில்தானே தாய்ப்பாலை கலெக்ட் செய்யப்போறேன். அதை இப்போவே செய்ய ஆரம்பிச்சிடுறேனே’ என்கிறார்கள். இது தவறு. வேலைக்குப் போகும்போதுகூட கையால் பீய்ச்சியெடுப்பதுதான் சரி.

கட்டிக்கொண்ட பாலானது அபூர்வமாக சில பெண்களுக்கு பால் குழாய்களுக்குள் அப்படியே தங்கி விடும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தால் மட்டுமே இதைக் கண்டறிய முடியும். இதை வெளியேற்றவும் முடியாது என்றாலும் பயப்படத் தேவையில்லை. இதனால் மார்பகங்களுக்குள் எந்தத் தொற்றும் ஏற்படாது. இரண்டு அல்லது மூன்று மாதங் களில் அது தானாகக் கரைந்துவிடும்.

ஒரு சிலருக்குத் தாய்ப்பால் ஏன் வருவதில்லை?

வீட்டில் ஏதாவது பிரச்னை இருந்தாலோ, ‘எனக்கு நல்லா பால் வந்துச்சு. உனக்கு ஏன் வரலை’ என்று கேட்டு யாராவது மன உளைச்சல் கொடுத்தாலோகூட பால் சுரப்பு குறையலாம் அல்லது சுரக்காமலும் இருக்கலாம். வேறு காரணங்களால்கூட சிலருக்குத் தாய்ப்பால் சுரக்காது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிற உணவுகளைச் சாப்பிடலாம் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.”

- பேசுவோம்...

****

பெண் உடலைப் பேசுவோம் - 3

தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப்புற்று வராதா?

புற்றுநோய் மருத்துவர் செல்வி, சென்னை

தாய்ப்பால் கொடுத்தால் மார் பகப்புற்று வராது, கொடுக்காத வர்களுக்கு வரும் என்பதற்கான சரியான ஆதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தாய்ப்பாலூட்டும்போது, அதற்கென மார்பகங்களுக்குள் உருவான செல்களின் பணி நிறைவடையும். அதனால், மார்பகப்புற்று வராமல் இருக்கலாம். அதற்காக தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால், கட்டாயம் புற்றுநோய் வரும் என்று அர்த்தமில்லை. பாலூட்டுவது கூடுதல் பாது காப்பு, அவ்வளவுதான்.

‘டிரைமெஸ்டர்’ என்றால் என்ன?

கருத்தரித்த முதல் வாரத்திலிருந்து 13-வது வாரம் வரை முதல் டிரைமெஸ்டர். 14-வது வாரம் தொடங்கி 28-வது வாரம் வரை இரண் டாவது டிரைமெஸ்டர். 29-வது வாரம் முதல் 40-வது வாரம் வரைக்கும் மூன்றாவது டிரை மெஸ்டர். வாரங்களாக நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையென்றால் கருத்தரித்த முதல் 3 மாதங்களை முதல் டிரைமெஸ்டர் என்றும், அடுத்த 4,5,6 ஆகிய மாதங்களை இரண்டாவது டிரைமெஸ்டர் என்றும், 7-வது மாதம் தொடங்கி குழந்தை பிறக்கிற வரையான காலத்தை மூன்றாவது டிரைமெஸ்டர் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.