Published:Updated:

பெண் உடலைப் பேசுவோம் - 4 - நானே நானா... பிரசவத்துக்குப் பிறகான பெண்ணுடல் மாற்றங்கள், தீர்வுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரசவத்துக்குப் பிறகான பெண்ணுடல் மாற்றங்கள், தீர்வுகள்!
பிரசவத்துக்குப் பிறகான பெண்ணுடல் மாற்றங்கள், தீர்வுகள்!

சில பெண்களுக்குத் தும்மினால், இருமினால் சிறுநீர் கசியும். இதற்கும், குழந்தை பெரிதாக இருப்பதும் உபகரணங்கள் பயன் படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதும் தான் காரணங்கள்.

பிரீமியம் ஸ்டோரி

உயிரும் உடலுமாய் பெண் உடலிலிருந்து ஒரு சிசு வெளி வந்த பிறகு, அவளது உடலில் ஏற்படு கிற மாற்றங்களை விவரிக்கவே முடியாது. பிரசவத்துக்குப் பிறகான தன் தோற்றத்தைப் பார்த்து, ‘இது நான்தானா’ என்று அதிரும் அளவுக்கு பெரும்பாலான பெண்களின் உடல் தோற்றத்தில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழும்... அவற்றிலிருந்து மீண்டு வர முடியுமா... நிபுணர்களிடம் கேட்டோம்.

எழும்பூர் மகளிர் மற்றும் குழந்தைகள்நல மருத்துவமனையின் மகப்பேறு துறையின் இயக்குநரும் மருத்துவருமான விஜயா பேசுகையில், ‘`பிரசவித்த பெண்ணின் உடலில் சத்துகள் குறைந்திருக்கும். குறிப்பாக, இரும்புச் சத்தும் சுண்ணாம்புச்சத்தும். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதோடு, மருத்துவரின் அறிவுறுத்தலின்படி இரும்புச்சத்து மாத் திரையும் கால்சியம் மாத்திரையும் சாப்பிட வேண்டும். குழந்தைக்குப் பாலூட்டுவதால் ஏற்படுகிற நீரிழப்பை ஈடுகட்ட போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். சுகப்பிரசவத்தின் போது பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந் தால் அது ஆறுகிறவரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும்’’ என்று அடிப்படை டிப்ஸ் வழங்கியவர், பிரசவத்துக்குப் பிறகு பெண் களின் உடலில் ஏற்படுகிற மாற்றங்கள் குறித்து பேச ஆரம்பித்தார்.

‘`குழந்தை பெரிதாக இருந்து, சுகப்பிரசவமாகி யிருந்தால் பிறப்புறுப்பு தளர்வதற்கு வாய்ப் பிருக்கிறது. குறிப்பாக, வாக்குவம், ஃபோர்செப்ஸ் என்று உபகரணங்கள் உதவி யுடன் சுகப்பிரசவம் நடந்திருந்தாலோ, பிறப் புறுப்பில் அதிக தையல்கள் போட்டிருந்தாலோ பிறப்புறுப்பு தளர்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. இதனால், உறவுகொள்ளும் போது முன்பிருந்த இறுக்கம் கிடைக்காமல் போகலாம். சிசேரியன் செய்தாலுமே ஹார்மோன் மாற்றங்களால் பிறப்புறுப்பில் சில மாறுதல்கள் ஏற்படவே செய்யும். இதனாலும் தாம்பத்திய உறவில் திருப்தி யின்மை ஏற்படலாம். இந்தியாவைப் பொறுத்த வரை, ‘பிரசவத்துக்குப் பிறகு, தாம்பத்திய உறவில் திருப்தியில்லை’ என்பதை உணர்கிற பெண்களும் அதை வெளிப்படையாகச் சொல்கிற பெண்களும் குறைவு. அபூர்வமாக சில பெண்கள் அப்படிச் சொன்னால், அந்த இடத்து தசையை இறுக்கமாக்கும் பயிற்சி களைச் சொல்லித் தருவோம்.

பெண் உடலைப் பேசுவோம் - 4 - நானே நானா... பிரசவத்துக்குப் பிறகான பெண்ணுடல் மாற்றங்கள், தீர்வுகள்!

சில பெண்களுக்குத் தும்மினால், இருமினால் சிறுநீர் கசியும். இதற்கும், குழந்தை பெரிதாக இருப்பதும் உபகரணங்கள் பயன் படுத்தி குழந்தையை வெளியே எடுப்பதும் தான் காரணங்கள். இப்படிப்பட்டவர்களை, அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை சிறுநீரை அடக்கி வைத்து, பிறகு வெளி யேற்றச் சொல்வோம். இந்தப் பயிற்சியிலேயே பிரச்னை சரியாகிவிடும். சரியாகவில்லை என்றால், சிறுநீர்ப்பையைச் சற்று மேலே ஏற்றித் தைக்கிற அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்போம். பிரசவத் தழும்புகள், பிரசவமான பிறகும் கருவுற்ற வயிறுபோலவே இருப்பது, வயிறு தளர்ந்து பிறப்புறுப்பை மறைக்கிற அளவுக்குத் தொங்கிக் கொண்டிருப்பது, ஹெர்னியா என்று பல பிரச்னைகள் வரிசைகட்டும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சோற்றுக்கற்றாழை போன்றவற்றைத் தடவி வந்தாலே தழும்புகள் ஓரளவு மறைந்துவிடும். மருத்துவரின் அறிவுறுத்தலின்படி, எடைக்குறைப்பும் உடற்பயிற்சியும் செய்து வயிற்றை பழைய வடிவத் துக்குக் கொண்டு வந்துவிடலாம். பலரும், ‘பெல்ட் போட்டா வயிறு உள்ளே போயிடுமா டாக்டர்’ என் கிறார்கள். பெல்ட் போடும்போது இயல்புக்குத் திரும்பியதுபோல இருக்கிற வயிறு, அதை அகற்றியவுடன் மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பி விடும்.

அடுத்த மாற்றம் மார்பகங்கள் தளர்வது. பாலூட்டும்போது பிரா அணியாமல் இருப்பதுதான் இதற்கான முக்கியமான காரணம். மார்பகம் தளராமல் இருப்பதற்கான உடற்பயிற்சிகளை மூன்றாவது ட்ரை மெஸ்டரிலேயே சொல்லித்தந்து விடுவோம். தொடர்ந்து அவற்றைச் செய்துவந்தாலே போதுமானது.

சிலருக்கு பிறப்புறுப்பு வழியாக காற்று வருவதாகச் சொல்வார்கள். இதற்கும் வயிறு தளர்வதுதான் காரணம். குழந்தை பிறந்து கர்ப்பப்பை சுருங் கியவுடன், அதுவரை ஒதுங்கியிருந்த குடல்பகுதி மறுபடியும் அதனுடைய இடத்துக்கு வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வயிற்றைத் தொட்டால் சத்தம் வருவதுபோல இருக்கும். இதைத் தான் ‘காத்து வயித்துக்குள்ள போயிடுச்சு’ என்கிறார்கள். உடற்பயிற்சி செய்து வயிறு உள்நோக்கிச் சென்றாலே, இது சரியாகிவிடும். குழந்தை பிறந்தவுடனே தாயின் வயிற்றுக்குள் காற்று போய் விடுமென துணியால் வயிற்றை இறுக்கிக் கட்டுற பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. இதனால், குடல் திரும்ப தன்னுடைய இடத்துக்கு வருவதற்கு வழியில்லாமல் மேல் நோக்கி நகர ஆரம்பிக்கும். விளைவு, நெஞ்சடைப் பதுபோல இருக்கும்... கவனம்’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் விஜயா.

பிரசவத்துக்குப் பிறகான மாற்றங் களை அறுவைசிகிச்சை மூலம் பழைய நிலைக்கே கொண்டு செல்ல முடியுமா என்பது பற்றிச் சொல்கிறார் பிளாஸ்டிக் அண்டு காஸ்மெட்டிக் சர்ஜன் சசிகுமார் முத்து.

‘`பிரசவத்துக்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் தசையோ, தசை, கொழுப்பு இரண்டுமோ அதிகமாகலாம். சிலருக்கு வயிறு கீழிறங்கி பிறப்புறுப் பையே மறைக்கலாம். மூன்று பிரச்னைகளையுமே `அப்டமினோ பிளாஸ்டி' (Abdominoplasty) அல்லது `டம்மி டக்' (Tummy tuck) அறுவை சிகிச்சை மூலம் பழைய வடிவத்துக்குக் கொண்டு வரலாம். கொழுப்பு மட்டுமே சேர்த்திருந்தால், ‘லிப்போ சக்‌ஷன்’ (Liposuction) மூலம் எடுத்து விடலாம்.

விஜயா
விஜயா
சசிகுமார் முத்து
சசிகுமார் முத்து
யோ.தீபா
யோ.தீபா

தளர்ந்த மார்பகங்களுக்கு பிரெஸ்ட் லிஃப்ட் செய்து கொள்ளலாம். சிலருக்கு மார்பக அளவே சுருங்கிவிடும். இதற்கு அவர்கள் உடலிலிருக்கிற கொழுப்பு அல்லது சிலிகானை வைத்து பழைய வடிவத்துக்குக் கொண்டுவந்து விடலாம். பிரசவத்துக்குப் பிறகு, மார்பகங்கள் பெரிதாகி, அதனால் தோள்பட்டை வலி, கழுத்து வலி என அவதிப்பட்டீர்களென்றால் `பிரெஸ்ட் ரிடக்‌ஷன் சர்ஜரி' (Breast Reduction Surgery) செய்து கொள்ளலாம்.

சுகப்பிரசவத்தால் ஏற்பட்ட பிறப்புறுப்பு தளர்ச்சி 3 முதல் 4 மாதங்களில் சரியாகிவிடும். அபூர்வமாக சிலருக்கு அந்தத் தளர்ச்சி அப்படியே நீடிக்கலாம். அறுவைசிகிச்சை மூலம் உறவுப் பாதையின் அளவைக் குறைப்பதன் மூலம் இந்தத் தளர்ச்சியைச் சரி செய்யலாம். ஆனால், இந்த அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்கிற அளவுக்கு ஆரோக்கியமாக இருந் தால் மட்டுமே செய்ய முடியும். மற்ற படி எல்லா அறுவைசிகிச்சைகளைப் போலவே இவற்றிலும் சாதக, பாத கங்கள் இருக்கின்றன’’ என்கிறார்.

பிரசவத்துக்குப் பிறகு, உடலில் ஏற்படும் மாற்றங்களை யோகா சனங்கள் மூலமாக ஃபிட்டாக்க முடியும் என்கிற இயற்கை மருத்துவர் யோ.தீபா, அந்த ஆசனங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.

``வயிற்றுப் பகுதியில் இருக்கிற தேவையற்ற கொழுப்பை நீக்கி, எடையைக் குறைக்க ‘மர்ஜரி ஆசன’ மும், இடுப்புவலி வராமல் இருக்க ‘விபரீதகரணி ஆசன’மும், வயிற்றில் வாயு சேராமல் இருக்க மற்றும் அந்தப் பகுதி தசைகளை வலுப்படுத்த ‘திரிகோண ஆசன’மும், ஹார்மோன் களை சீராக்க ‘கோமுகாசன’மும், பிறப்புறுப்பு தசைகளை இறுக்கமாக்கி சிறுநீர்க் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ‘தித்திலி ஆசன’மும், தொப்பையைக் குறைக்க ‘கும்பகாசன’மும் செய்ய வேண்டும். ஆனால், யோகாசன நிபு ணரின் ஆலோசனையைக் கேட்டே மேற்கூறிய யோகாசனங்களைச் செய்ய வேண்டும்.’’

- பேசுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு