மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெண் உடலைப் பேசுவோம் - 6 - படுக்கையிலாவது பெண்களுக்கு சம உரிமை கொடுங்கள்!

பெண் உடலைப் பேசுவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் உடலைப் பேசுவோம்

தனக்கு ஆர்கசம் கிடைக்கவில்லையென்றால், மனைவி அதுபற்றி கணவனிடம் பேசலாம். அதைப் புரிந்துகொள்வதற்கான பக்குவம் கணவனிடம் இருக்கிறதா என்பதை மனைவி தெரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களுக்கும் தாம்பத்ய உறவின்போது ஆர்கசம் எனும் உச்சகட்டம் வரும்; வர வேண்டும் என்பதை கடந்த சில வருடங்களாகத் தான் பேச ஆரம்பித்திருக் கிறோம். இந்தியாவில் 70 சதவிகிதப் பெண்கள் உறவில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும் ஆர்கசத்தை அனுபவிப்பதில்லை என் கின்றன சில புள்ளி விவரங்கள்.

ஆணுறை நிறுவனம் ஒன்று 2017 மற்றும் 2019-ம் வருடங்களில் #OrgasmInequality என்ற ஹேஷ்டேகில் பெண் களின் ஆர்கசம் பற்றிய சர்வே ஒன்றை நடத்தி யது. அது சமூக வலை தளங்களில் பரபரப் பாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் நடிகை வித்யா பாலன் ‘ஆண் களைப் போலவே பெண் களும் உச்சக்கட்டத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கும் அது தேவைதான்’ என்று குரல் கொடுத்திருந் தார். இன்னொரு பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கரோ, ‘ஆணாதிக்க மனப் பான்மையே பெண்ணுக்கான ஆர்கசத்தை மறுத்து வருகிறது. படுக்கையிலாவது பெண் களுக்கு சம உரிமை கொடுங்கள்’ என்று ஆதங்கப்பட்டிருந்தார். செக்ஸில் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதற்காகவே, பெண்ணுறுப்பில் ஆர்கசம் அடையக்கூடிய பகுதிகள் அறுத்தெறியப்பட்ட ஆப்பிரிக்கப் பெண்களை இந்த இடத்தில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. பெண்ணின் இந்தத் தேவை ஏன் நிரப்பப் படாமலேயே இருக்கிறது... பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியிடம் பேசினோம்.

பெண் உடலைப் பேசுவோம் - 6 - படுக்கையிலாவது பெண்களுக்கு சம உரிமை கொடுங்கள்!

‘`தாம்பத்ய உறவில் உச்சக்கட்டம் என்பது இருவருமே அனுபவிக்க வேண்டிய ஒன்று. ‘தாம்பத்ய உறவு என்பது பிள்ளை பெற்றுக் கொள்வதற்கான வழி, அதைத்தாண்டி இதில் பெண் இன்பமடைவதற்கு ஒன்றுமில்லை’ என்றே உலகம் முழுக்க பல நாட்டினரும் இன்றைக்கும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக ஆணாதிக்க மனப்பான்மை. ‘என் வேலை முடிந்தது’ என்று திரும்பிப்படுத்துத் தூங்க ஆரம்பித்துவிடுகிறார்கள் ஆண்கள். மூன்றாவதாக, இதுபற்றிய விழிப்புணர்வின்மை.

நாராயண ரெட்டி
நாராயண ரெட்டி

ஆண்களுக்குச் சொல்லித் தருவதில்லை!

‘உன் கணவனுக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்’ என்று பெண்ணுக்குச் சொல்லித் தருகிற சமூகம், ‘உன் மனைவிக்கும் இன்பம் கிடைக்கும்வரைக்கும் உறவு நீடிக்க வேண்டும்’ என்று ஆண்களுக்குச் சொல்லித் தருவதில்லை. கல்வியும் தலைமுறை மாற்றமும் பெண்களை இப்போது பேச வைத்திருக் கிறது. கடந்த சில வருடங்களாகப் பெண்கள் உலகில் மாற்றங்கள் ஜெட் வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆண்கள் உலகிலோ அவை ஆமை வேகத்தில்தான் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. ஆர்கசத்தி லும் சமபங்கு பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்போம். அப்போதுதான் அடுத்த தலைமுறையிலாவது இது சரி செய்யப்படும். போதிய பாலியல் கல்வி யின்மை, ஆணும் பெண்ணும் சமம் என்று பெற்றோர் சொல்லி வளர்க்காதது ஆகிய இரண்டும் தான் ஆண்கள் இந்த விஷயத்தில் கோட்டைவிடுவதற்கு மிக முக்கியமான காரணங்கள். ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் சென்றாலே ஆணுக்கு இந்த விஷயத்தில் தெளிவு கிடைத்துவிடும்.

பெண் உடலைப் பேசுவோம் - 6 - படுக்கையிலாவது பெண்களுக்கு சம உரிமை கொடுங்கள்!

விந்து முந்துதலும் காரணம்...

மது அருந்துதல், போதைப்பழக்கம், ரத்த அழுத்தம், இதயநோய், உளவியல் பிரச்னை போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்கிற மாத்திரைகளால் கணவனுக்கு விந்து முந்துதல் பிரச்னை ஏற்பட்டாலும், மனைவிக்கு ஆர்கசம் அடைவதில் சிக்கல் ஏற்படலாம்.

மனைவி இதுபற்றி பேசலாமா?

தனக்கு ஆர்கசம் கிடைக்கவில்லையென்றால், மனைவி அதுபற்றி கணவனிடம் பேசலாம். அதைப் புரிந்துகொள்வதற்கான பக்குவம் கணவனிடம் இருக்கிறதா என்பதை மனைவி தெரிந்துகொள்ள வேண்டும். திருமணமான புதிதில் இதுபற்றி பெண்கள் பேசாமல், இருவருக் குள்ளும் மனரீதியான புரிந்துணர்வு ஏற்பட்ட பிறகு தன் தேவையை எடுத்துச் சொல்லலாம். ‘ஆர்கசம் பத்தியெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஏற்கெனவே ஏதாவது...’ என்ற மனப்பான்மை யிலிருந்து பெரும்பான்மை ஆண்கள் மாறவே யில்லை என்பதுதான் நிதர்சனம்’’ என்கிறார் நாராயண ரெட்டி.

- பேசுவோம்...

*****

டாக்டர் ஷர்மிளா
டாக்டர் ஷர்மிளா

பெண்ணுக்கு அது மனம் சம்பந்தப்பட்டது! - டாக்டர் ஷர்மிளா

‘‘ஆணுறுப்பின் நுனியில் நரம்புகள் குவிந்திருப்பதால் ஆணுக்கு ஆர்கசம் சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. பெண் ணுக்கு அப்படியல்ல. கிளிட்டோரிஸ் ஆர்கசம், வெஜைனல் ஆர்கசம், செர்விகல் ஆர்கசம், அல்லது இந்த மூன்றின் காம்பினேஷனில் கிடைக்கும் ஆர்கசம், பெண் ணுறுப்பின் ‘G’ ஸ்பாட்டில் கிடைக்கிற ஆர்கசம் என்று பலவகைகள் இருக்கின்றன. இவற்றில், எந்தப் பகுதியில் ஆர்கசம் கிடைக்கும் என்பதை வரையறுத்துக் கூற முடியாது. தவிர, பெண்ணுக்குத் தாம்பத்ய உறவு என்பது உடலுடன் மனமும் சேர்ந்தது. சூழல், உடல்நிலை, தனிமை, கணவர் மீது எந்த அதிருப்தியும் இல்லாதிருப்பது, அவர் மீதான அன்பு என்று பல புறக்காரணிகள் சரியாக இருந்தால்தான் பெண்ணால் மகிழ்ச்சியாக உறவில் ஈடுபட முடியும். அப்போதுதான் அவர்களுக்கு ஆர்கசமும் கிடைக்கும். இத்தனை காலம் கணவரின் பாலியல் தேவையறிந்து பெண்கள் வாழ்ந்து வந்தார்கள். இனி மனைவிகளின் தேவைகளைக் கணவர்களும் புரிந்துகொள்ளட்டுமே.’’

ஆர்கசம் அடைய முடியாத ஆப்பிரிக்கப் பெண்கள்!

‘பெண் உறுப்பு சிதைவு’ ஆப்பிரிக்க நாடுகளில் காலங்காலமாக நடந்துவருகிற கொடுமை.பெண்ணுறுப்பில் இருக்கும் ‘கிளிட்டோரிஸ்’ என்ற பகுதிதான் பெண்ணுக்கு ஆர்கசத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களின் பாலுணர்வைக் கட்டுப்படுத்த, அவர்கள் சிறுமியாக இருக்கும்போதே கிளிட்டோரிஸை பிளேடு, கத்தி, பாட்டில் துண்டுகளால் அறுத்தெறிந்து விடுகிறார்கள்.

புனிதமான மதச்சடங்கு என்ற பெயரில் இந்தக் கொடுமை இன்றைக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்று வருகிறது. சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந் தாலும், ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்தப் பழக்கத்தை முற்றிலும் தடை செய்ய முடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது.