Published:Updated:

பெண் உடலைப் பேசுவோம் - 9 - நிர்வாண வீடியோவை வெளியிட்டாலும்... ‘போடா.... பொறுக்கி!’

பெண் உடலைப் பேசுவோம்
பிரீமியம் ஸ்டோரி
பெண் உடலைப் பேசுவோம்

கொஞ்சம் தைரியமும், ‘எனக்கு நிகழ்ந்தது நம்பிக்கை துரோகம். அந்த வீடியோ எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது.

பெண் உடலைப் பேசுவோம் - 9 - நிர்வாண வீடியோவை வெளியிட்டாலும்... ‘போடா.... பொறுக்கி!’

கொஞ்சம் தைரியமும், ‘எனக்கு நிகழ்ந்தது நம்பிக்கை துரோகம். அந்த வீடியோ எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது.

Published:Updated:
பெண் உடலைப் பேசுவோம்
பிரீமியம் ஸ்டோரி
பெண் உடலைப் பேசுவோம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைக்க வேண்டுமென்றால், அதற்கு முன்னால் செய்ய வேண்டியது ஒன்றிருக்கிறது. ‘என் உடலை பாலியல் வன்கொடுமை செய்தாலோ அல்லது என் நிர்வாணத்தைப் பொதுவெளியில் வெளியிட்டாலோ அதில் என்னுடைய மாண்பு கெட்டுப்போவதில்லை’ என்பதை பெண் மனதில் பதிய வைப்பதே அது. பெண்ணின் அந்தரங்கம் அவளுக்குத் தெரியாமலே பொதுவெளியில் பகிரப்படக்கூடிய ஆபத்து நிறைந்த இந்த இணையதளக்காலத்தில் இது அவசியமும்கூட. தவிர, `ஆம்பளை சட்டை போடாம இருப்பான்... நீ இருப்பியா’ என்கிற சமூகத்தைப் புறந்தள்ளத் தெரிந்திருக்க வேண்டும். என் உடலை எனக்கெதிராக எவரும் பயன்படுத்த முடியாது என்கிற அஞ்சாமையும் வேண்டும். இந்தக் கேடயங்களைப் பெண்கள் தங்களுக்குள் எப்படி உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்று சொல்லித் தருகிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

சித்ரா அரவிந்த்.
சித்ரா அரவிந்த்.

காதுகளில் போட்டு வையுங்கள்!

“பெண்ணின் நிர்வாணத்தை வெளிப் படுத்தி விடுவேன் என்று மிரட்டுகிற ஆண்கள் பெரும்பாலும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நன்கு தெரிந்த நபராகத்தான் இருக்கிறார்கள். இந்த ஆண்கள் குடும்பத் துக்குத் தெரியாமல் தன்னுடன் பழகுகிற பெண்களையே அதிகம் குறி வைக்கிறார்கள் என்பதால், ‘உன்னைப்பத்தி என் ஃபேமிலி கிட்ட சொல்லியிருக்கேன்’ என்பதை அவ்வப்போது அவன் காதுகளில் போட்டு வைப்பது வருமுன் காக்கும் டெக்னிக்கில் முக்கியமானது.

ஒருமுறையுடன் நிற்காது!

ஒருவேளை ஓர் ஆணை நம்பிப் பழகி யிருந்து, அவன் உங்களுடைய நிர்வாண புகைப்படத்தையோ அல்லது காணொலி யையோ சமூக வலைதளங்களில் பகிர்வேன் என மிரட்டினால், பயப் படாமல் அவனுடைய எண்ணை பிளாக் செய்யுங்கள். ‘தூண்டில் போட்டோம். சிக்கல’ என்று சில ஆண்கள் நகர்ந்துவிடவும் வாய்ப் பிருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு நான் காட்டிய இந்த வழி வொர்க் அவுட்டும் ஆனது அல்லது ‘தாராளமா ஷேர் பண்ணிக்கோ’ என்று சொல்லிவிட்டு, குடும்பத் தினரிடம் நடந்ததைச் சொல்லி விடுங்கள். இதனால், அவர் களுடைய அன்பையும் நம் பிக்கையையும் இழந்தாலும், உங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள். ‘அச்சச்சோ, அப்படியெல்லாம் செஞ்சு டாதே’ என்று பயத்தை வெளிக் காட்டினீர்களென்றால்தான், `இன்னொரு முறை வா' என்றோ, `ஒருமுறை மட்டும் தன் நண்பர்களிடமும் பழகு' என்றோ மிரட்ட ஆரம்பிப்பான். ‘ஆனது ஆயிடுச்சு; அவன் சொன்னதை ஒருமுறை செஞ்சுட்டா புகைப்படங்களையும் வீடியோவையும் அழிச்சுடுவான்’ என்று மட்டும் நம்பிவிடாதீர்கள். ஒருவனிலிருந்து பலர், ஒருமுறையிலிருந்து பலமுறை, ஏன்... பல வருடங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை நான் பார்த்திருக்கிறேன். சில பெண்கள் நடந் ததை ஆண் நண்பரிடம் தெரிவிக்கலாம். நம்பிக்கையின் அடிப்படையில் அந்தப் புகைப்படத்தைக்கூடப் பகிரலாம். இதுவும் ஆபத்தே.

பொய்யும் பாதுகாப்பே...

எல்லாவற்றையும் மீறி உங்களுடைய நிர்வாண புகைப்படமோ அல்லது காணொலியோ சமூக வலை தளங்களில் வெளிவந்துவிட்டது என்றால், பயந்தும் அழுதும் உங்களை நீங்களே காட்டிக்கொடுத்துக் கொள்ளாமல், ‘அதிலிருப்பது நான் கிடையவே கிடை யாது. அதுவொரு மார்ஃபிங்' என்று தைரியமாகச் சொல்லிவிடுங்கள். இந்தப் பொய் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது என்பதால், யார் கேட்டாலும் உண்மையை ஒப்புக்கொள்ளாதீர்கள்.

குடும்பம் அல்லது புகார்!

இந்த விஷயத்தில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது என்பவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை நாட லாம் அல்லது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எந்த சமூக வலைதளத்தில் உங்களுடைய படம் வெளியானதோ, அதனுடைய சப் போர்ட் பக்கத்தில் அதை நீக்குமாறு புகார் அளிக்கலாம்.

குற்றவுணர்ச்சி வேண்டாம்!

கொஞ்சம் தைரியமும், ‘எனக்கு நிகழ்ந்தது நம்பிக்கை துரோகம். அந்த வீடியோ எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது. அதில் என் தவறு ஒன்றுமில்லை’ என்கிற தெளிவும் இதற்கு அவசியம். ஆனால், அந்த வீடியோவில் இடம் பெற்ற காட்சிகளையே திரும்பத் திரும்ப மனதுக்குள் ஓட்டிப் பார்ப்பதால் எழுகிற இதயப் படபடப்பும், ‘இவனை நம்பின என் புத்தியை...’ என்கிற குற்றவுணர்வும் பாதிக்கப் பட்ட பெண்களின் மனநிலையைப் பெரிய அளவில் பாதிக்கும். கூடவே ‘அவன் வீடியோவை அப்லோடு செஞ்சிருப்பானோ’ என்கிற பயமும் சேர்ந்துகொள்ளும். விளைவு, பாதிக்கப்பட்ட பெண்களால் நிம்மதியாக இருக்க முடியாது. தூங்கவும் முடியாது. விளைவு தினசரி வாழ்க்கையே போராட்டமாகி விடும். இது வெளியில் பகிர முடியாத பிரச்னை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் நினைத்துக் கொள்வதால், மனதுக்குள்ளேயே புழுங்கிப் புழுங்கி மன உளைச்சலில் விழுந்து தற்கொலை வரைகூட சென்று விடுவார்கள்.

பெண் உடலைப் பேசுவோம் - 9 - நிர்வாண வீடியோவை வெளியிட்டாலும்... ‘போடா.... பொறுக்கி!’

பெண் ஆலோசகர் நல்லது!

இந்தச் சூழ்நிலையை பெண் உளவியல் ஆலோசகரின் உதவியுடன் மட்டுமே கடந்து வர முடியும். பாதிக்கப்பட்ட பெண்களின் மனதிலிருக்கிற படபடப்பு, பயம், குற்றவுணர்ச்சி ஆகியவற்றை நீக்குவதோடு, சம்பந்தப்பட்ட பெண்களின் எந்த மனநிலை அந்த ஆணை நம்ப வைத்தது என்பதையும் எடுத்துச்சொல்லி மறுபடியும் இதே போன்ற ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்கான வழிகளைக் காட்டுவார்கள்.

நூறு சதவிகிதப் பொய்!

இந்த இடத்தில் பெண்களுக்கு ஒரு முக்கிய மான விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். தன்னுடைய நிர்வாண புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ வைத்துக் கொண்டு யாராவது மிரட்டினால், ‘மானமே போச்சு; வீட்டுக்குத் தெரிஞ்சா அப்பாவும் அம்மாவும் உயிரையே விட்டுருவாங்க’ என்ற காரணங் களுக்காக ஏதோவொரு அயோக்கியன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொள்கிறார்கள். அதனால், அதை மட்டும் செய்யவே வேண்டாம். ‘வீடியோவை சோஷியல் மீடியாவுல போட்டீன்னா, அது நானில்ல. மார்ஃபிங்னு சொல்வேன்’ என்று சொல்லுங்கள். அல்லது ‘நீயென்ன என் பேரன்ட்ஸ்கிட்ட சொல்றது. நானே சொல்லி டுறேன் போடா’ என்று சொல்லுங்கள். ‘இன்னொரு முறை வந்தின்னா போட்டோ வையும் வீடியோவையும் டெலிட் பண்றேன்’ என்று சொன்னால் நம்பவே நம்பாதீர்கள். அது நூறு சதவிகிதப் பொய்.

சரியான ஆண்களுடன் நட்பு வளருங்கள். அவர்களையும் கண்மூடித்தனமாக நம்பா தீர்கள். பொது இடங்களில் கவனமாக இருங்கள். அதையும் மீறி நிகழ்ந்துவிட்டால், ‘நிர்வாண வீடியோ வெளியிட்டாலும் போடா’ என்று தைரியமாகச் சொல்லுங்கள்.''

- பேசுவோம்...

ரோல் மாடல் 1

குடிசைவாழ் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்ற 13 வயது சிறுமியை எட்டுப் பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்கிறது. உறவினர்கள் ‘நீ சமூக சேவை செய்யப் போனதாலதான் இப்படி நடந்துச்சு’ என்று பாதிக்கப்பட்ட சிறுமியையே குற்றம்சாட்டுகிறார்கள். இவற்றிலிருந்து தானும் மீண்டு, பாலியல் அடிமைகளாக இருக்கிற பெண்களையும் குழந்தைகளையும் மீட்டுக்கொண்டிருக்கிறார் இந்தியா வைச் சேர்ந்த அவர்.

ரோல் மாடல் 2

2017-ல் பாலியல் வன்முறைக்கு ஆளான தென்னிந்திய நடிகையின் வழக்கில் இன்னும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. அவர் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள் விலகிவிட்ட நிலையில், தனக்கு நீதி கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் அந்த நடிகை. தன்னுடைய தைரியத்தால் சக பெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism