Published:Updated:

`பெஸ்ட் ஆப் 2019' விருதுவென்ற`ஷில்பா ஷெட்டி' - காரணங்கள் பகிரும் ஷில்பா

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி ( instagram )

நாம் தினமும் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதற்கு தகுந்தாற் போல் உடற்பயிற்சி அவசியம்.

2019 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், கூகுள் பிளே நிறுவனம், இந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்கள், ஆப்ஸ், கேம்ஸ் என, 'கூகுள் ப்ளே பெஸ்ட் ஆஃப் அவார்ட்ஸ்- 2019 'க்கான விருதுகளை அறிவித்துள்ளது. இந்தியாவின் விருதுப் பட்டியலில் ஷில்பா ஷெட்டியின் ஃபிட்னஸ் ஆப்பும் இடம்பெற்றுள்ளது.

Vikatan
ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி
instagram

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடிப்பைத் தவிரவும் உடற்பயிற்சி, யோகா, ஸ்கின் கேர் போன்றவற்றில் அதிக ஆர்வம் உடையவர். யோகா சம்பந்தமான பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடுவார். 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொது மக்களின் நலனுக்காக உடற்பயிற்சியுடன் தொடர்புடைய ஆப் ஒன்றையும் தொடங்கினார்.

Vikatan

யோகா, தியானம் பற்றிய தகவல்களைக் கொண்ட இந்த ஆப்பிற்கு 'ஷில்பா ஷெட்டி ' என்றே பெயர் வைத்திருந்தார். பல்வேறு பிரபலங்களும் ஷில்பாவின் இந்த முயற்சிக்கு வரவேற்பு தந்த நிலையில், கூகுள் ப்ளே பெஸ்ட் ஆஃப் அவார்ட்ஸில், 'Best Personal Growth Apps' என்ற விருதினை தட்டிச்சென்றுள்ளது 'ஷில்பா ஷெட்டி 'ஆப் .

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி
instagram

இது குறித்து ஷில்பா ஷெட்டி பேசுகையில், ``உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்றவுடனே எல்லோரும், டயட் பற்றித்தான் யோசிப்பார்கள். உண்மையில் நாம் தினமும் எவ்வளவு உணவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சாப்பிட்ட கலோரிகளை எரிக்கும் விதமாக உடற்பயிற்சிகள் செய்துவிட்டால், ஒபிசிட்டி பற்றிக் கவலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

வசதியானவர்களால்தான் உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்ய முடியும் எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஜிம்மிற்கு செலவு செய்யாமல், விலை உயர்ந்த உபகரணங்களை வாங்காமல், வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்துகொள்ள முடியும் என்பதை நிருபிக்கவே இந்த ஆப்பினைத் தொடங்கினேன். எதிர்பார்த்தது போலவே தொடக்கத்தில் இருந்தே என்னுடைய ஃபிட்னஸ் ஆப்பிற்கு மக்கள் நல்ல வரவேற்பு தந்தனர். என் எண்ணமும் நிறைவேறியது.

ஷில்பா ஷெட்டி
ஷில்பா ஷெட்டி
instagram

இப்போது கூகுள் விருது கூடுதல் பலம். இது என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து வீடியோக்கள் மூலம் மக்களின் தொடர்பில் இருப்பேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு