Published:Updated:

"பெண்களுக்கான அனீமியா வீடியோவை எப்படி, ஏன் உருவாக்கினோம்?" - வைரல் பின்னணி

அனீமியா விழிப்புணர்வு வைரல் வீடியோ

'அனீமியா விழிப்புணர்வு' வைரல் வீடியோவின் பின்னணி பகிரும் சிசிஓ!

"பெண்களுக்கான அனீமியா வீடியோவை எப்படி, ஏன் உருவாக்கினோம்?" - வைரல் பின்னணி

'அனீமியா விழிப்புணர்வு' வைரல் வீடியோவின் பின்னணி பகிரும் சிசிஓ!

Published:Updated:
அனீமியா விழிப்புணர்வு வைரல் வீடியோ

தென்னிந்தியாவில், அட்சயதிருதியை போன்றதொரு திருநாள்தான், வட இந்தியாவின் தன்தெராஸ் திருநாள். அன்றைய தினம், எல்லா வீடுகளிலும் லட்சுமி வழிபாடு இருக்கும். மட்டுமன்றி, இந்த தினத்தில் தங்க நகைகள், ஆபரணங்கள் என விலை மதிப்புள்ள பொருள்களை வாங்கி, பொருளாதார முதலீடு செய்வர். இப்படியாகக் கொண்டாடப்படும் தன்தெராஸ், சரியாக தீபாவளிக்கு முந்தைய நாள் கொண்டாடப்படும். இந்த வருடம், அக்டோபர் 25-ம் தேதி தன்தெராஸ் கொண்டாடப்பட்டது.

புராஜெக்ட் ஸ்ரீதன் ரத்தச்சோகை
புராஜெக்ட் ஸ்ரீதன் ரத்தச்சோகை

சரியாக இந்த நாளைக் குறிவைத்து, இரண்டில் ஓர் இந்தியப் பெண்ணை பாதிக்கும் அனீமியா குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தது, ஒரு கிழக்கத்திய கம்பெனி. 'புராஜெக்ட் ஸ்ரீதன்' என்ற பெயரில் வெளியான அந்த இரண்டு நிமிட வீடியோவில், அழகான அலங்காரங்களோடு மாடல்கள் சிலர் உலா வருகின்றனர். சோளம், மீன், முட்டை, தர்பூசணி, மாதுளை, பாதாம் என சத்துமிக்க உணவுகளை ஆசை ஆசையாகச் சாப்பிடுகின்றனர். `அட என்ன வீடியோப்பா இது!' எனப் பார்வையாளர்களைக் கேள்வி கேட்கவைக்கும் அளவுக்கு கண்ணைப் பறிக்கும் காட்சியமைப்போடு அதை உருவாக்கியுள்ளனர், இதன் மேக்கர்ஸ். சொல்லப்போனால், ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கான எந்த முகாந்திரமும், தொய்வும் அதில் இல்லை. மாறாக, கண்கவர் கமர்ஷியல் வீடியோவாகவே இருந்தது. பின்னணியில், ஒரு பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அதில், `இந்த தன்தெராஸில் தங்கத்தில் அல்ல, இரும்புச்சத்தில் முதலீடு செய்யுங்கள்' என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். `Be your Own Jewel Women' என்பது, வீடியோவின் ஒன்லைன்.
ரத்தச்சோகை
ரத்தச்சோகை

இந்த வீடியோவை உருவாக்கிய வீடியோ கம்பெனியின் சிசிஓ (Chief Creative Officer) சுவாதி, தனது பேட்டி ஒன்றில், "தன்தெராஸ் நாளன்று எங்களது இந்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டதற்கு, முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது'' என்று கூறியிருந்தார்.

என்ன காரணம் அது? ஹரியானாவைச் சேர்ந்த சுவாதியைத் தேடிப்பிடித்து கேட்டோம்.

விரிவாகப் பேசத்தொடங்கியவர், "இந்தியப் பாரம்பர்யத்தைப் பொறுத்தவரை, தன்தெராஸ் என்பது தங்கத்தில் முதலீடு செய்யும் ஒரு திருநாள். அதை ஏன் தங்கத்தில் செய்ய வேண்டும்? ஆரோக்கியத்துக்காகச் செய்யப்படும் முதலீட்டைவிடவா, ஆபரணங்களின்மீது செய்யப்படும் முதலீடு சிறந்ததாக இருந்துவிடப்போகிறது? இந்தக் கருத்தை முன்னிறுத்தத்தான் நாங்கள் எங்களின் வீடியோவை தன்தெராஸ் நாளில் வெளியிட்டோம்" என்கிறார், சுவாதி.

Swati Bhattacharya
Swati Bhattacharya
"இந்தியப் பெண்கள், ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்!"
சிசிஓ (Chief Creative Officer) சுவாதி

"இன்றைய நவீன உலகில், பெண்களுக்கான பொறுப்புகளும் அவற்றின் பின்னணியில் சவால்களும் அதிகரித்துள்ளன. ஆகவே, அவர்கள் கூடுதல் பலத்துடன் புத்துணர்வுடன் இருக்கவும் இயங்கவும் வேண்டும். ஆனால், ரத்தச்சோகை பிரச்னை, அவர்களின் சுறுசுறுப்புக்கும் இயக்கத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. பல பெண்கள் தனக்கு ரத்தச்சோகை உள்ளதெனத் தெரிந்தும்கூட அதற்கென சிகிச்சைகளோ, உணவு முறை மாற்றங்களோ, சத்து மாத்திரைகளோ எடுத்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இந்த நிலையைச் சரிசெய்ய, இதுகுறித்த விழிப்புணர்வை நாம் அதிகப்படுத்த வேண்டும்.

இந்த வீடியோ வழியாக, எங்களால் முடிந்த அளவு விழிப்புணர்வை நாங்கள் அளித்துள்ளோம் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்! காரணம், நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவு மக்களை இது சென்றடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் இந்த வீடியோ உருவாக்கத்தில் நாங்கள் ஈடுபட்டுவருகிறோம். பொருளாதாரரீதியாக, பெரியளவில் எங்களுக்கு சப்போர்ட் இல்லை என்பதால், எங்களுடைய வீடியோவை புரொமோட் செய்வதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. `எத்தனை பேரைச் சென்றடையுமோ' என்ற பதற்றம் எங்களுக்கு இருந்தது. அந்தத் தடைகளையெல்லாம் மீறி, இவ்வளவு பேரை இந்த வீடியோ சென்றடைந்துள்ளதென்றால், அதற்கான முழு கிரெடிட்டும் எங்களின் க்ரியேட்டிவ் டீமையும், வீடியோ மேக்கிங்கில் பணியாற்றியவர்களையும்தான் சேரும். இப்படியொரு சிறந்த டீமை வழிநடத்தியுள்ளேன் எனச் சொல்வதற்கே நான் பெருமைப்படுகிறேன்" என்கிறார் அவர்.

ரத்தச்சோகை குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பொதுநல மருத்துவர் அர்ஷத் அகிலிடம் கேட்டோம்.

மருத்துவர் அர்ஷத் அகில்
மருத்துவர் அர்ஷத் அகில்

"உடலில் ரத்தச் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்து, ஹீமோகுளோபின் அளவு கணக்கிடப்படும். அப்படியாகக் கணக்கிடப்படும் அந்த அளவு, ஆண்களுக்கு 13 கிராம்/டெசிலிட்டர் என்ற அளவுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு 11.5 கிராம்/டெசிலிட்டர் என்ற அளவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். குறைவாக இருந்தால், ரத்தச்சோகை குறைபாடு உள்ளதெனப் பொருள்.

பெரும்பாலும் பெண்கள்தான் ரத்தச்சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம், அவர்கள்தான் கர்ப்பகாலம், பிரசவ நேரம், மாதவிடாய் என வாழ்நாள் முழுக்க ரத்த இழப்பை எதிர்கொள்கின்றனர்.

ரத்தச்சோகை
ரத்தச்சோகை

மேலும், ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடுள்ளவர்களுக்கு இந்தக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமென்பதால், உணவு முறையில் அனைவரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில நேரம், தொற்றுப் பிரச்னைகள் ஏதேனும் ஏற்பட்டால்கூட ரத்தச்சோகை ஏற்படும். எதுவாகினும் அலட்சியம் கூடாது. பிரச்னை உள்ளதெனத் தெரியவந்தால், உடனடியாக மருத்துவப் பரிந்துரையைப் பெற்றுக்கொண்டு செயலாற்றத் தொடங்க வேண்டும்.

ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்களால், சுறுசுறுப்பாக இயங்க முடியாது. அதேபோல, வெகு நேரம் நின்றுகொண்டு பணி செய்ய முடியாது. எப்போதும் சோர்வாக இருப்பார்கள். உடலின் நிறம்கூட மாறத்தொடங்கும். நிறம், வெளிறிப்போகத் தொடங்கும். கால் வீக்கம் ஏற்படும். பொதுவாகவே ரத்தச்சோகை இருப்பவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகமாகும் என்பதால், ரத்த அழுத்தம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி தலைச்சுற்றல், சில நேரம் மயக்கம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

 ரத்தச்சோகை
ரத்தச்சோகை

வேறு ஏதேனும் உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால்கூட, ரத்தச்சோகை அதைத் தீவிரப்படுத்தும். இத்தனை ஆபத்துகளை, உடல் நலக்கேடுகளைத் தரும் நோயை, யாரொருவரும் உதாசீனப்படுத்தக்கூடாது. பலரும், தங்களுக்கு ரத்தச்சோகை இருக்கிறதெனத் தெரிந்தும் அதற்கு சிகிச்சை எடுக்காமல் உள்ளனர். அந்த வகையில் பார்த்தால், இங்கு தேவைப்படுவது விழிப்புணர்வுதான்" என்கிறார்.