Published:Updated:

அதிகரிக்கும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் - மாநில அரசுகளிடம் தரவுகள் கேட்கும் மத்திய அரசு

கருப்பை மாதிரி

கருப்பையில் எந்தப் பிரச்னையும் இல்லாத பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

அதிகரிக்கும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் - மாநில அரசுகளிடம் தரவுகள் கேட்கும் மத்திய அரசு

கருப்பையில் எந்தப் பிரச்னையும் இல்லாத பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கருப்பை மாதிரி

`ஏழைகள், பசிக்காத பெண்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் எந்த அவசியமும் இல்லாமல் தங்கள் கர்ப்பப்பையை அகற்றுகின்றனர். இதனால் அந்தப் பெண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில மருத்துவ நிறுவனங்களால் செய்யப்படும் இத்தையக தேவையற்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசு செயல்பட வேண்டும். எனவே கருப்பை அகற்றம் குறித்த தரவுகளை மாநில அரசுகள் மத்திய அரசோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கருப்பை
கருப்பை

டாக்டர் நரேந்திர குப்தா என்பவர், கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முடியும் என்பதால், இத்தகைய காப்பீட்டுத் திட்ட நிதியைப் பெற, சில தனியார் மருத்துவமனைகள் அவசியமின்றி பெண்களின் கருப்பையை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். எனவே இதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரி 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இது குறித்து பேசியுள்ள நரேந்திர குப்தா, ``நான் மேற்கொண்ட கள ஆய்வின்படி கருப்பையில் எந்தப் பிரச்னையும் இல்லாத பெண்களுக்கு, கருப்பை நீக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் அவர்களின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்தான். காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் அரசாங்கங்களிடமிருந்து அதிக காப்பீட்டுக் கட்டணங்களைப் பெறும் நோக்கோடு, பல சுகாதார நிறுவனங்கள் இத்தகைய நடைமுறையை தவறாகப் பயன்படுத்துகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

கருப்பை
கருப்பை

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேவையற்ற கருப்பை அகற்றம் நடந்துள்ளதா என்பது குறித்து 3 மாதங்களுக்குள் மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளில் பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்யப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 28 வயது முதல் 36 வயது வரை உள்ள இளம்பெண்களிடையே கருப்பை அகற்றம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.