Published:Updated:

`வைட்டமின்-இ; கற்றாழைச்சாறு…!’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு

புதுமை மகளிர் சுய உதவிக்குழு

புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு, மாவட்டத்தின் ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்புப் பணியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்ட நிர்வாகம்.

`வைட்டமின்-இ; கற்றாழைச்சாறு…!’ ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் அசத்தும் தேனி மகளிர் குழு

புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு, மாவட்டத்தின் ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்புப் பணியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்ட நிர்வாகம்.

Published:Updated:
புதுமை மகளிர் சுய உதவிக்குழு

தமிழகத்தில் நிலவும், மாஸ்க், ஹேண்ட் வாஷ் லிக்விட் பற்றாக்குறையைப் போக்க, தமிழக அரசு, மகளிர் சுய உதவிக்குழுவின் உதவியை நாடியுள்ளது. இந்த நிலையில், தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் இயங்கும் புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்புப் பணியைக் கொடுத்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

புதுமை மகளிர் சுய உதவிக்குழு
புதுமை மகளிர் சுய உதவிக்குழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் தமிழக அளவில் பல சாதனைகளைப் புரிந்த புதுமை மகளிர் சுய உதவிக்குழு, தற்போது ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். மகளிர் குழுவின் தலைவர், மகேஷ்வரி நம்மிடையே பேசும்போது, ``புதுமை மகளிர் சுய உதவிக்குழுவானது, கடந்த 2004-ல் இருந்து நாப்கின் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர், எங்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். மக்களுக்கு அதிகமாகத் தேவைப்படும் ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிக்க வேண்டும் எனக் கூறினார்.

ஹேண்ட் வாஷ் லிக்விட் பாட்டில்கள்
ஹேண்ட் வாஷ் லிக்விட் பாட்டில்கள்

அதன்படி, தற்போது ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். மாவட்டத்திலேயே ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரிக்கும் ஒரே மகளிர் குழு நாங்கள்தான். தொடர்ந்து, மூலப்பொருள்களை வாங்குவதற்காக முன்பணமாக 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை 500 லிட்டர் வீதம் மூன்று ஆர்டர்கள் வந்தன. முதல் இரண்டு ஆர்டர்களையும் முடித்துக் கொடுத்துவிட்டோம். இது மூன்றாவது ஆர்டர். தேனி அரசு மருத்துவமனைக்கு நாங்கள் தான் ஹேண்ட் வாஷ் லிக்விட் தயாரித்துக் கொடுத்திருக்கிறோம். கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருப்பதால், மூலப்பொருள்கள் கிடைப்பதில் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, தொடர்ந்து வேலை நடந்துவருகிறது” என்றார்.

புதுமை மகளிர் சுய உதவிக்குழு
புதுமை மகளிர் சுய உதவிக்குழு

தொடர்ந்து பேசியவர், ``தற்போது, அரை லிட்டர் பாட்டிலில் ஹேண்ட் வாஷ் லிக்விட் நிரப்புகிறோம். மூலப்பொருள்களை வாங்கி வந்து கலந்து, பெரிய கேனில் ஊற்றி, 30 மணி நேரம் அப்படியே வைத்துவிட வேண்டும். பின்னர், சிறிதளவு தண்ணீர் கலந்து பாட்டில்களில் அடைக்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஹேண்ட் வாஷ் லிக்விட் போல நாங்கள் தயாரிக்கும் ஹேண்ட் வாஷ் லிக்விட் இல்லை. சற்று வித்தியாசமானது.

இதில், வைட்டமின்-இ சத்துக்கான திரவம் மற்றும் கற்றாழைச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கிறோம். இதனால், நமது தோலுக்கு எந்தவித எரிச்சலும், பிரச்னையும் வராது. அரை லிட்டர் பாட்டில் 45 ரூபாய்க்கு கொடுக்கிறோம். மக்கள் தினமும் ஹேண்ட் வாஷ் செய்தாலே போதும், கொரோனாவைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism